குழந்தைகளுக்கு தாயத்து அணிவதற்கான அறிவியல் காரணம் உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

தாயத்து அணிவதன் காரணம்

அன்பு நெஞ்சம் கொண்ட நேயர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் ஒன்றை பற்றி தான் பார்க்க போகிறோம். நாம் குழந்தைகளாக இருக்கும் போது கழுத்தில் அல்லது இடுப்பில் தாயத்து ஒன்றை கட்டி விடுவார்கள். இந்த தாயத்தை நாம் ஒரு குறிப்பிட்ட காலம் வரை தான் கட்டி கொள்வோம். ஏன் தாயத்து கட்டுகிறோம் என்ற காரணம் உங்களுக்கு தெரியுமா..? நம் முன்னோர்கள் சொன்ன விஷயங்களுக்கு பின் கட்டாயம் ஒரு அறிவியல் காரணம் ஒளிந்திருக்கும். அதுபோல தான் இந்த தாயத்து அணியும் முறைக்கு பின்னாலும் ஒரு அறிவியல் காரணம் ஒளிந்திருக்கிறது. அந்த காரணத்தை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

இதையும் படியுங்கள் ⇒ பெண்கள் புடவை அணிவதற்கான அறிவியல் காரணம் உங்களுக்கு தெரியுமா..?

தாயத்து கட்டுவதற்கு காரணம் என்ன..? 

அந்த காலத்தில் இருந்த நம் முன்னோர்கள் நாம் அணியும் ஒவ்வொரு அணிகலன்களுக்கு பின்னாலும் ஒரு அறிவியல் காரணத்தை மறைத்து வைத்திருந்தார்கள். அதுபோல தான் இந்த தாயத்தும்.

இந்த காலத்தில் பல நோய்களுக்கு மருந்து கண்டு பிடிக்கிறார்கள். ஆனால் அந்த காலத்தில் இந்த தாயத்தில் மருந்தை மறைத்து வைத்திருந்தார்கள் என்று சொன்னால் நம்மால் நம்ப முடியுமா..?

அந்த காலத்தில் பிறந்த குழந்தையின் தொப்புள் கொடி காய்ந்து விழுந்ததும் அதை பத்திரமாக எடுத்து ஓரு தாயத்தில் அடைத்து வைப்பார்கள். பின் அதை அந்த குழந்தையின் கழுத்திலோ அல்லது இடுப்பிலோ கட்டி விடுவார்கள்.

அதுமட்டுமில்லாமல், அந்த தொப்புள் கொடியை நன்கு காயவைத்து அரைத்து அந்த பொடியை ஒரு தாயத்தில் வைத்து குழந்தைகளுக்கு கட்டி விடுவார்கள்.

இப்படி  தாயத்தில் தொப்புள் கொடியை வைத்து கட்டியதற்கு காரணம் அந்த குழந்தை வளர்ந்து பெரியவரானதும் அவருக்கு ஏதேனும் கொடிய நோய் தாக்கினால், தாயத்தில் இருக்கும் அந்த அரைத்த தொப்புள் கொடியை தண்ணீரிலோ அல்லது பாலிலோ கலந்து கொடுப்பார்கள். 

இதனால் எவ்வளவு பெரிய கொடிய நோயாக இருந்தாலும் அது சில நாட்களிலேயே காணாமல் போய்விடும்.

அதுமட்டுமில்லாமல்,  இந்த தொப்புள் கொடியில் இருக்கும் செல்களை வைத்து புற்றுநோய் போன்ற குணப்படுத்த முடியாத எந்த நோய்களை வேண்டுமானாலும் குணப்படுத்த முடியும்  என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

இதை அறிந்த நம் முன்னோர்கள் அந்த காலத்திலேயே இந்த தாயத்தை வைத்து பல நோய்களை குணப்படுத்தி இருக்கிறார்கள். இன்றும் சில ஊர்களில் தாயத்து அணியும் முறை இருந்து கொண்டு வருகிறது.

இது தான் தாயத்து அணிவதற்கான அறிவியல் காரணம் ஆகும்.

பெண்கள் தாலி அணிவதில் ஒளிந்திருக்கும் இரகசியம் தெரியுமா.?

 

மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்  Facts
Advertisement