தூங்கும் போது உங்களை யாரோ அமுக்குவது போல் தோன்றுகிறதா..? அதற்கு இது தான் காரணம்..?

Sleeping Paralysis in Tamil

Sleeping Paralysis in Tamil

இனிமையான நேயர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பற்றி தான் பார்க்க போகிறோம். நாம் தூங்கும் போது யாரோ ஒருவர் நம் மேல் உட்கார்ந்து அமுக்குவது போன்ற உணர்வு ஏற்படும். இந்த உணர்வு 85% பேருக்கு ஏற்படுகிறது. இதுபோன்ற உணர்வு உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறதா..? இதற்கு என்ன காரணம் என்று பலருக்கும் பல கேள்விகள் இருக்கும். சரி அதற்கு என்ன காரணம் என்று உங்களுக்கு தெரியுமா..? அந்த வகையில் இன்று இந்த பதிவின் மூலம் அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

இரவு தூக்கம் வராமல் தவிர்ப்பவர்கள் இதை மட்டும் பண்ணுங்க..!

தூங்கும் போது உங்களை அமுக்குவது யார்..?

Sleeping Paralysis

பெரும்பாலும் நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது நம் மேல் ஏறி, யாரோ ஒருவர் அமுக்குவது போன்ற உணர்வு ஏற்படும். அந்த நேரத்தில் நமக்கு பதட்டம் ஏற்படும்.

ஏன் அப்படி ஒரு உணர்வு ஏற்படுகிறது என்று பெரியவர்களிடம் கேட்டால், அதற்கு அவர்கள் அது அமுக்குவான் பேய் என்று சொல்வார்கள். சிலர்  பூதம், சாத்தான், ஏவல் அதுபோல பேய் பிடித்திருக்கிறது என்று சொல்லி நம்மை பயமுறுத்துவார்கள்.

அதுபோல நாம் தூங்கும் வேளையில் இதுபோன்ற உணர்வு ஏற்படும் போது நம் மனதில் பதட்டம், பயம் ஏற்படும். ஆனால் இதற்கு இந்த உணர்வு ஏற்படுவதற்கு பேயோ, பூதமோ காரணம் இல்லை. இதற்கு பின்னால் ஓர் அறிவியல் காரணம் ஒளிந்திருக்கிறது.

இது நம் உடலில் ஏற்பட கூடிய ஒரு சாதாரண பிரச்சனை என்று சொல்லலாம். அதாவது, இதை ஆங்கிலத்தில் Sleep Paralysis என்று சொல்வார்கள்.  நம் உடல் அடுத்தடுத்த நிலைக்கு உறங்க செல்ல மறுப்பது தான் இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. அதுபோல நம் உடலில் உணர்வுகளைக் கடத்தும் நியூரான் செல்களில் ஏற்படும் குழப்பமும் இதற்கு ஒரு காரணமாக சொல்லப்டுகிறது.  

இரவில் நன்றாக தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்?

 

அதாவது, தூக்கத்தைக் கட்டுப்படுத்தும் நரம்புகள் அதன் வேலையை சரி வர செய்யாமல் இருப்பதால் தூக்க நிலைகள் சீராக செயல்படாமல் இருக்கின்றது. அந்த நேரத்தில் இந்த நரம்புகள் ஒன்றோடு ஒன்று பிணைந்து குழப்பத்தை ஏற்படுத்துகின்றன.

தூக்கத்தின் முதல் நிலை என்று சொல்லகூடிய REM Sleep என்பது தூக்கத்தில் நடப்பதை நிஜத்தில் நடப்பது போலகாட்டும். உதாரணத்திற்கு, உங்களுக்கு நடப்பது போல் கனவு வந்தால், நிஜமாகவே நீங்கள் நடந்து செல்வது போல் உணர்வீர்கள். இதை தான் REM Sleep என்று சொல்கிறோம்.

அதுபோல அந்த நேரத்தில் மூளை நீங்கள் எழவேண்டும் என்று உங்களை எழுப்ப தூண்டுகிறது. ஆனால் உங்களுக்கு தூங்க வேண்டும். அந்த நேரத்தில் விழிப்பு நிலைக்கும் உறக்க நிலைக்கும் நடுவில் நீங்கள் தடுமாறுவதால் தான் இந்த உணர்வு ஏற்படுகிறது.

அதாவது, உங்கள் உடல் தூக்கத்தில் இருக்கும். ஆனால் உங்கள் ஆழ்மனது முழு விழிப்பு நிலையில் இருக்கும். அதன் காரணமாக தான் தூங்கும் போது உங்களை யாரோ அமுக்குவது போன்ற உணர்வு ஏற்படுகிறது.

 இது தூக்க மின்மை, அதீத உடல் உழைப்பு, சரியான நேரத்தில் உணவு உண்ணாமல் இருப்பது, சரியாக உறங்காமல் இருப்பது மற்றும் மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளால் ஏற்படுகிறது.  

இதற்கு பேயோ பூதமோ காரணமில்லை. இது உங்கள் தூக்கத்தில் ஏற்படக்கூடிய ஒருவிதமான தூக்கமின்மை என்று சொல்லலாம். அதனால் இதை நினைத்து பயப்பட தேவையில்லை.

இரவில் நன்றாக தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்?

 

மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்  Facts