ஆன்மீகத்தில் அறிவியல்
வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் எல்லோரும் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய ஒரு முக்கியமான செய்திகளை பற்றித்தான் தெரிந்துகொள்ளப் போகின்றோம். நமக்கே தெரியாமல் ஆன்மிகத்தில் ஒளிந்திருக்கும் சில அறிவியல் காரணங்கள் பற்றித்தான் பார்க்கப் போகின்றோம். இந்த பதிவை பார்த்த பிறகுதான் உங்களுக்கு தெரியும், இத்தனை நாள் இது தெரியாமல் தான் இதை செய்துகொண்டு இருக்கிறார்களா என்று அறிவீர்கள், மேலும் ஆன்மிகத்தில் இருக்கும் அறிவியல் காரணம் என்னவென்று தெரிந்துகொள்வோம் வாங்க.
நகை அணிவதற்கான அறிவியல் காரணம் உங்களுக்கு தெரியுமா..? |
1. ஏகாதசி விரதம் முடிந்ததும் அகத்திக்கீரை சாப்பிடுவதற்கு காரணம்:
பொதுவாக பெருமாள் சாமிக்கு ஏகாதிசி விரதம் இருப்பார்கள், அந்த விரதம் முடிந்ததும், அகத்திக் கீரையை சமைத்து சாப்பிடுவார்கள், இதற்கு காரணம் என்ன தெரியுமா.? நாம் விரதம் இருக்கும் பொழுது எந்த உணவுகளையும் சாப்பிட மாட்டோம். நம்முடைய குடலில் எந்த பாதிப்புகளும் ஏற்படாமல் இருக்க, அகத்திக்கீரைகளை சாப்பிடுவார்கள் ஏனென்றால் அதில் இரும்புச்சத்துக்கள் அதிகமாக இருப்பதால் சாப்பிடுவார்கள்.
2. விசேஷ வீட்டில் வாழை மரம், மாவிலைத் தோரணங்கள் கட்டுவதற்கு காரணம்:
வீட்டில் நடக்கும் விசேஷங்களின் பொழுது மாவிலை தோரணங்களை கட்டுவதற்கு காரணம் என்ன தெரியுமா.? விசேஷ வீட்டில் கூட்டங்கள் அதிகமாக இருப்பதால் அவர்களுக்கு மூச்சிவிடுவதில் சிரமம் இல்லாமல் இருப்பதற்க்காக கட்டப்படுகிறது. அதாவது மாசுபடும் காற்றை தூய்மையாக்கும் சக்தி மாவிலைக்கும், வாழைக்கும் அதிக சக்தி உள்ளது, இதனால் தான் விசேஷ வீட்டில் கட்டவேண்டும் என்று முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
3. நிலைப்படியில் மஞ்சள் தடவுவதற்கு காரணம்:
மஞ்சள் ஆனது கிருமி நாசினிகளை அளிக்கக்கூடியது. எனவே வெளியிடங்களுக்கு சென்று வரும் பொழுது, முதலில் நம் மிதிப்பது வீட்டின் வாசல் படியைத்தான், அதனால் தான் நம் முன்னோர்கள் நோய் கிருமிகளை தடுப்பதற்காக இதை அறிந்து நிலைப்படியில் மஞ்சளை தடவி இருக்கிறார்கள்.
உடம்பு சிலிர்ப்பதற்கான அறிவியல் காரணங்கள் என்ன தெரியுமா.? |
4. வீட்டில் சாம்பிராணி போடுவதற்கு காரணம்:
பொதுவாக நம் வீட்டில் வெள்ளி, செவ்வாய் போன்ற நாட்களில் வீடு முழுவதும் சாம்பிராணி போடுவார்கள். இதற்கான அறிவியல் காரணம் என்னவென்றால் வீடுகளில் சாம்பிராணி போடும் பொழுது வீட்டில் இருக்கும் கொசு மற்றும் பல பூச்சிகள் மயங்கி இறந்துவிடும். இதற்காகத்தான் சாம்பிராணி போடப்படுகிறது.
5. வீட்டு வாசலில் முருங்கை மரம் வைக்க கூடாது என்று சொல்வதற்கு காரணம்:
வீட்டு வாசலில் முருங்கை மரம் வைத்தால் வீட்டில் உள்ளவர்களுக்கு கெடுதல்கள் நடக்கும் என்று சொல்வார்கள், அதற்கு காரணம் என்ன தெரியுமா.? மரங்களில் மெலிதான மரம் முருங்கை மரம், எனவே இவை காற்றினால் குழந்தைகள் மீது விழுந்துவிடும் என்பதற்காகவும், அதில் கம்பளி பூச்சிகள் அதிகமாக இருக்கும் என்பதற்காகவும் தான் வைக்கக்கூடாது என்று நம் முன்னோர்கள் பின்பற்றிருக்கிறார்கள்.
6. நகத்தை கடித்தால் தரித்திரம் என்று சொல்ல காரணம்:
பொதுவாக நகத்தை கடிக்கும் பழக்கம் அதிகமாகவே இருக்கும், நாம் நகத்தை கடிக்கும் பொழுது, வீட்டில் உள்ளவர்கள் சொல்வார்கள் தரித்திரம் என்றும், குடும்பத்திற்கு ஆகாது என்றும் சொல்வார்கள். ஆனால் இதற்கான அறிவியல் காரணம் என்ன தெரியுமா.? நகத்தில் இருக்கும் அழுக்குகள் வயிற்று பகுதியில் சென்றால் நோய் தொற்றை உருவாக்கும் என்று தான் நகம் கடிக்க கூடாது என்று சொல்கிறார்கள்.
7. இடி இடிக்கும்போது அர்ஜுனா என்று சொல்வதற்கு காரணம்:
மழை பொழிந்து இடி இடிக்கும் பொழுது நம் வீட்டில் உள்ளவர்கள் அர்ஜுனா…அர்ஜுனா என்று சொல்லிக்கொண்டு இருப்பார்கள். ஏன் இப்படி சொல்கின்றார்கள் என்று கேட்டால் அப்பொழுதான் இடி இடிக்காது என்று சொல்வார்கள். ஆனால் இதற்கான அறிவியல் காரணம் என்ன தெரியுமா.? நாம் அர்ஜுனா என்று சொல்லும் பொழுது வாய் பகுதி அகலமாக திறப்பதினால் காது அடைத்துக்கொள்வது போன்ற பிரச்சனைகள் சரியாகும் என்று அறிவியல் ரீதியாக சொல்லப்படுகிறது.
கோவிலில் சாமி வந்தது போல் ஆடுவதற்கான அறிவியல் காரணம் என்ன தெரியுமா ? |
8. உச்சி வெயிலில் கிணத்தை எட்டி பார்க்கக்கூடாது என்று சொல்வதற்கு காரணம்:
பொதுவாக உச்சி வெயிலில் கிணற்றை எட்டி பார்க்க கூடாது என்று பெரியவர்கள் சொல்வார்கள், அதற்கான அறிவியல் காரணம் என்னவென்றால், உச்சி வெயில் கிணற்றில் படும்பொழுது வேதிவினை நடைபெற்று விஷவாய்வு உண்டாகுமாம், அதை பார்க்கும் பொழுது, நமக்கு தலைசுற்றல் ஏற்படும் என்பதற்காகத்தான் உச்சி வெயிலில் பார்க்க கூடாது என்று சொல்கிறார்கள்.
9. வடக்கு பக்கம் தலைவைத்து படுக்க கூடாது என்று சொல்வதற்கு காரணம்:
வடக்கு பக்கத்தில் தலை வைத்து படுக்க கூடாது, கடவுளை அவமதிப்பது என்று நம் வீட்டில் உள்ளவர்கள் சொல்வார்கள், ஆனால் இதற்கான காரணத்தை நம் முன்னோர்கள் முன்பே கண்டறிந்துள்ளார்கள். அறிவியல் ரீதியாக வடக்கு பக்கம் தலை வைத்து படுத்தால், காந்தவிசை வடக்கு பக்கத்தில் ஏற்படுவதினால் மூளை பாதிப்பு அடையும் என்று சொல்லப்படுகிறது.
10. கோவிலை விட உயரமாக வீடு கட்டக் கூடாது என்று சொல்வதற்கு காரணம்:
அந்த காலத்தில் நம் முன்னோர்கள் கோவிலை விட உயரமாக வீடு கட்ட கூடாது என்று சொல்வதற்கு காரணம் என்ன தெரியுமா? இடிவிழும் பொழுது அதனை உள்வாங்கும் சக்தி கோவில் கோபுரங்களுக்கு உண்டு. இந்த காரணத்தினால் தான் கோவிலை விட வீடு உயரமாக இருக்க கூடாது என்று சொன்னார்கள்.
கீழே விழுந்து வணங்குவதற்கான அறிவியல் காரணம் உங்களுக்கு தெரியுமா..? |
மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம் | Facts |