அழும்போது கண்ணீர் வர காரணம் என்ன உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

The Cause Of Tears in The Eyes When Crying 

வாககர்களுக்கு வணக்கம்..! நாம் தினமும் இந்த பதிவின் வாயிலாக பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டு வருகிறோம். இன்றைய பதிவு அனைவருக்கும் பயனுள்ள மற்றும் சுவாரஸ்யமான பதிவாக இருக்கும். அப்படி என்ன தகவலாக இருக்கும் என்று யோசிப்பீர்கள். ரொம்ப யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த பதிவை படிக்க தொடங்குங்கள். அதற்கான விடை கிடைத்துவிடும்.

நமக்கு ஏதாவது ஒரு கஷ்டம் வந்தால் நமக்கு அழுகை வரும். அப்படி அழும் போது நம் கண்களில் இருந்து ஏன் தண்ணீர் வருகிறது என்று உங்களுக்கு என்றாவது யோசித்தது உண்டா..? அப்படி யோசித்திருந்தால் இந்த பதிவு உங்களுக்கு தான். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.

நெல்லிக்காய் சாப்பிட்டுவிட்டு தண்ணீர் குடித்தால் ஏன் இனிப்பு சுவை வருகிறது தெரியுமா

அழும் போது கண்களில் கண்ணீர் வர காரணம் என்ன..? 

 the cause of tears in the eyes when crying

பொதுவாக மனிதனாக பிறந்த அனைவருக்குமே கண்ணீர் வரும். அது குழந்தையாக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி அழுதால் கண்களில் இருந்து கண்ணீர் வரும்.

அதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று நாம் அனைவருமே யோசித்திருப்போம். சிலர் அதற்கான பதில் என்ன என்று தேடியிருப்பார்கள். ஆனால் தேட வேண்டிய அவசியம் இல்லை. அதற்கான பதிலை இங்கு காணலாம்.

வெங்காயம் வெட்டும் போது ஏன் கண்ணில் நீர் வருகிறது..? காரணம் தெரியுமா
 நம் இரு கண்களுக்கு மேல் அடுக்கின் ஒரு ஓரத்தில் உள்ள Lacrimal Gland என்ற சுரப்பியில் இருந்து தான் கண்ணீர் வருகிறது. இந்த சுரப்பி தான் நாம் அழும் போது கண்களில் கண்ணீர் வர காரணமாக இருக்கிறது.  

அதுபோல நம் கண்களில் இருந்து நீரை வெளியேற்ற ஒரு பைப் போன்ற அமைப்பு நம் மூக்கு பகுதியில் இருக்கிறது. இந்த அமைப்பை Puncta என்று சொல்வார்கள். இந்த அமைப்பானது நாம் அதிகமாக அழும் போது உருவாகும் அதிகப்படியான கண்ணீரை வெளியேற்ற உதவுகிறது. அது எப்படி வெளியேற்றும் என்று யோசிப்பீர்கள்.

உதாரணத்திற்கு நீங்கள் அதிகமாக அழும் போது சில நேரங்களில் மூக்கில் இருந்து தண்ணீர் வருவதை நாம் கவனித்திருப்போம். இதுபோல தான் மூக்கு பகுதியில் Puncta என்ற அமைப்பு கண்ணீரை வெளியேற்றுகிறது.

பச்சை மிளகாய் ஏன் காரமா இருக்குனு உங்களுக்கு தெரியுமா

 

மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்  Facts
Advertisement