1 சவரனை ஏன் 8 கிராம் என்று சொல்கிறார்கள் தெரியுமா? அதன் உண்மையான காரணம் என்ன தெரியுமா?

The Reason Why One Shaver is Said to be 8 Grams in Tamil

அனைவருக்கும் தங்கம் பிடிக்கும் என்று நான் சொல்லமாட்டேன்..! ஏனென்றால் சிலருக்கு தங்கம் பிடிக்காது. சிலர் அதன் மீது அதிகமான ஆசை வைத்திருப்பார்கள். ஆகவே அதனை வாங்குவதற்கு கடைக்கு செல்வார்கள். அங்கு சில வார்த்தைகளை சொல்ல கேட்டிருப்போம்..!

அதேபோல் நாம் நகை வாங்குகிறோமோ இல்லையா நியூஸ் பார்ப்போம்..! அதில் கடைசியாக பங்குசந்தை குறித்த செய்திகள் வரும்.அவற்றில் அனைவருமே இந்த வார்த்தையை கேட்டிருப்போம்..!  1 கிராம் இவ்வளவு 1 சவரன் இவ்வளவு என்று..! இந்த வார்த்தைகள் அனைத்துமே நகை கடைகளிலும் ஒலிப்பதை ஊற்று கவனித்தால் தெரிந்திருக்கும்.

சவரன் என்று சொல்ல காரணம் என்ன தெரியுமா?

 The reason why one shaver is said to be 8 grams in tamil

கடைகளுக்கு போனால் இன்று ஒரு சவரன் இவ்வளவு விற்கிறது என்று சொல்வார்கள் இதேபோல் ஒரு சவரன் என்பது  கிராம் என்று சொல்கிறார்கள். அது ஏன் 9 அல்லது 7 கிராம் என்று சொன்னால் என்ன என்பது தான் இன்று கேள்வி வாங்க அதற்க்கான பதிலை படித்து தெரிந்துகொள்வோம்..!

 பிரிட்டிஷ் ஆட்சி புரிந்த காலத்தில் மக்கள் தங்கத்தை அவர்களிர்களிடமிருந்து காயின்(COIN) போல் வாங்கினார்கள். அந்த காயினை தான் மக்கள் சவரன் காயின் என்று சொல்வார்களாம். இதிலிருந்து சவரன் என்று வார்த்தை வந்தது.  

அந்த காயினுடைய எடை 7.98 கிராம் இருக்கும் கிட்டத்தட்ட 8 கிராம் இருக்கும். இதிலிருந்து தான் 1 சவரன் எட்டு கிராம் என்று சொல்லப்படுகிறோம்.

1 பவுன் தங்கம் எத்தனை கிராம் என்று தெரியுமா?

அதேபோல் ஒரு சவரன் என்பதும் ஒரு பவுன் என்பது ஒரு எடையை தான் குறிக்கிறது. இந்த வார்த்தையை அதிகமாக தமிழ்நாட்டில் தான் பயன்படுத்துவார்கள் அதாவது ஒரு பவுன் தங்கம் என்ற வார்த்தையை. ஆனால் வட மாநிலத்தவர்கள் ஒரு சவரனுக்கு பதிலாக டோலோ என்று கூறுவார்கள். டோலோ என்றால் வடமாநிலத்தவர்களுக்கு 10 கிராம் என்று அர்த்தமாம்.

என்ன தான் 1 சவரன் 8 கிராம் என்று நாம் கூறினாலும், தொழிநுட்ப ரீதியாக சவரனுக்கு 7.98 கிராம் தான் கூறுகிறார்கள்.  ஆகவே இனி எல்லாருக்கும் இதற்கான பதில் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன்.

ஒரு கப்புக்கு எவ்வளவு அவுன்ஸ்?

மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்  Facts