உணவு முறைக்கு பின் இருக்கும் ரகசியம்
அன்பு நெஞ்சம் கொண்ட நேயர்களுக்கு வணக்கம்… தினமும் இந்த பதிவின் மூலம் ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அதுபோல இன்றைய பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நாம் உண்ணும் உணவு முறைக்கு பின்னால் இருக்கும் அறிவியல் ரகசியம் உங்களுக்கு தெரியுமா..? இதற்கான காரணம் தெரியாதவர்கள் இந்த பதிவை படித்து பயன்பெறுங்கள். இன்று நாம் இந்த பதிவில் உணவு முறைக்கு பின்னால் இருக்கும் அறிவியல் காரணத்தை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம்..!
நகை அணிவதற்கான அறிவியல் காரணம் என்ன..? |
உணவு முறைக்கு பின் இருக்கும் அறிவியல் காரணம் என்ன..?
இன்றைய காலம் எவ்வளவு மாறி இருந்தாலும் நம் முன்னோர்கள் சொல்லி தந்த சில பழக்க வழக்கங்களை இன்றும் கடைப்பிடித்து வருகின்றோம். நம் முன்னோர்கள் சொல்லி தந்த ஒவ்வொரு முறைகளுக்கு பின்னாலும் ஒரு அறிவியல் காரணம் ஒளிந்திருக்கிறது. அது உங்களுக்கு தெரியுமா..? வாங்க நண்பர்களே இந்த பதிவின் மூலம் அதை பற்றி நாம் தெரிந்து கொள்வோம்.
வாழை இலை:
நாம் பின் பற்றி வரும் பழக்கங்களில் ஓன்று தான் வாழை இலையில் சாப்பிடுவது. நம் கலாசாரத்தில் வாழை இலை இல்லாத விருந்தே இருக்க முடியாது.
வாழை இலை நம் உடலில் சேரும் நச்சுத்தன்மையை அழிக்க கூடிய தன்மையை கொண்டுள்ளது. இதில் ஆன்டி ஆக்சிடன்ட் அதிகளவில் இருப்பதால் நம் உடல் செல்களில் சிதைவு ஏற்படாமல் இளமையுடன் அதிக நாட்கள் இருக்க உதவுகிறது.
வாழை இலையில் உள்ள கிளோரோபில் பலவிதமான நச்சு கிருமிகளை அழிக்கக் கூடிய பண்புகளை கொண்டுள்ளது. நாம் அன்றாடம் வாழை இலையில் சாப்பிடுவதால் பல நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்க முடியும்.
இதனால் தான் வாழை இலையில் சாப்பிடுவதை நம் முன்னோர்கள் வழக்கமாக வைத்திருந்தார்கள்.
உணவு உண்ணும் முறை:
நாம் சாப்பிடும் போது முதலில் சாம்பார் சாப்பிடுவதும் இறுதியில் தயிர் சேர்த்து சாப்பிடும் பழக்கத்தை கொண்டுள்ளோம். ஏன் இப்படி சாப்பிடுகிறோம் இதற்கான காரணம் உங்களுக்கு தெரியுமா..?
வாதம், பித்தம், கபம் என்ற மூன்றும் நம் உடலில் மாற்றத்தை ஏற்படுத்த கூடிய தாதுக்களை கொண்டுள்ளது. இந்த 3 பண்புகளும் உடலில் இருந்தால் தான் நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
இந்த 3 பண்புகளும் நம் உடலில் உள்ள ஒவ்வொரு அசைவிற்கும் காரணமாகிறது. அதேபோல இந்த வாதம், பித்தம், கபம் என்ற மூன்றின் செயல்பாடுகள் குறைந்தாலோ அல்லது அதிகரித்தாலோ நம் உடலில் சில பாதிப்புகள் ஏற்படுகின்றன.
நாம் உண்ணும் ஒவ்வொரு சுவையும் ஒவ்வொரு தாதுக்களை உருவாக்க கூடியவை. இதனால் தான் நாம் உவர்ப்பு, புளிப்பு, கசப்பு, துவர்ப்பு, கார்ப்பு, இனிப்பு என்ற அறுசுவைகளும் உணவில் சேர்த்து கொள்கிறோம்.
எல்லா சுவைகளையும் நாம் உணவில் சேர்த்து கொள்ளும் போது இந்த வாதம், பித்தம், கபம் என்ற மூன்றும் நல்ல செயல்பாட்டில் உற்பத்தி ஆகி நம் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்கின்றன.
முதலில் நாம் இனிப்பான உணவுகளை சாப்பிட வேண்டும். முதலில் இனிப்பு சாப்பிடுவதால் அது செரிக்கும் பண்புகளை கொண்டு செரிமானத்திற்கு வழிவகிக்கிறது. இதன் காரணமாக தான் உணவு பரிமாறும் போது முதலில் இனிப்பு பண்டங்களை வைக்கிறார்கள்.
அதுபோல இரண்டாவதாக நாம் கசப்பு நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். காரணம், நாம் சாப்பிட்ட இனிப்பில் உள்ள சர்க்கரை இரத்தத்தில் கலந்து விடாமல் இருப்பதற்காக தான் 2 ஆவதாக கசப்பான உணவுகளை சாப்பிடும் படி நம் முன்னோர்கள் கூறினார்கள்.
இறுதியில் புளிப்பான உணவுகளை சாப்பிட வேண்டும் என்று சொன்னார்கள். காரணம், நாம் சாப்பிட்ட உணவுகளில் இருக்க கூடிய காரமானது நம் குடலில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. குடலில் புண் ஏற்படாமல் இருப்பதற்காகத் தான் இறுதியில் புளிப்பான உணவுகளை சேர்த்து சாப்பிட்டார்கள்.
இது தான் நாம் உண்ணும் உணவு முறைக்கு பின் இருக்கும் அறிவியல் ரகசியம்..!
பெண்கள் புடவை அணிவதற்கான அறிவியல் காரணம் |
மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம் | Facts |