ஏன் அனைத்து சுபகாரியங்களுக்கு வெற்றிலை பாக்கு வைக்கிறார்கள் காரணம் தெரியுமா..?

vetrilai pakku koduthal in tamil

வெற்றிலை பாக்கு

பொதுவாக வீட்டில் நிறைய விஷயங்கள் நடக்கும். அத்தகைய விஷயங்கள் நன்மை மற்றும் தீமை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இதில் எந்த விஷயமாக இருந்தாலும் அதில் கட்டாயமாக வெற்றிலை பாக்கு இருக்கும். அதுமட்டும் இல்லாமல் சாமி கும்பிடும் போதும் அனைத்து தெய்வங்களுக்கும் வெற்றிலை பாக்கு வைத்து தான் சாமி கும்பிடுவார்கள். நாம் என்ன நினைப்போம் என்றால் வெற்றலை பாக்கு தானே இதில் என்ன இருக்க போகிறது என்று ஆனால் இந்த இரண்டிற்கும் பின்னாலும் ஒரு காரணம் இருக்கிறது. நம் முன்னோர்கள் செய்த ஒவ்வொரு செயலிலும் அதற்கு பின்னால் ஒரு காரணத்தை வைத்து இருக்கிறார்கள். அந்த வகையில் இதற்கான காரணத்தையும் தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்.

கோவிலில் இருந்து வீட்டிற்கு வந்ததும் ஏன் குளிக்க கூடாது என்று சொல்கிறார்கள்..?

ஏன் அனைத்து சுபகாரியங்களுக்கு வெற்றிலை பாக்கு வைக்கிறார்கள் காரணம் தெரியுமா..?

வெற்றிலை பாக்கு

ஒரு வீட்டில் சுபகாரியம் அல்லது துக்க காரியம் இரண்டில் எதில் நடந்தாலும் கட்டாயமாக வெற்றிலை பாக்கு அங்கு கொடுப்பார்கள்.

அதுமட்டும் இல்லாமல் வீட்டில் திருமணம் என்றால் மற்றவருக்கு பத்திரிக்கை வைக்கும் போதும் கூட வெற்றிலை பாக்கு வைத்து தான் அழைப்பார்கள். இப்படி எந்த காரியம் இருந்தாலும் அதற்கு முதலில் வெற்றிலை பாக்கு வைப்பதற்கான காரணம் என்னவென்றால்..?

வெற்றிலையில் வைட்டமின் C, புரதம் மற்றும் கலோரி ஆகிய சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் சுண்ணாம்பில் கால்சியம் சத்து இருக்கிறது.

இவை இரண்டுடனும் கொஞ்சம் இனிப்பு மற்றும் துவர்ப்பு சுவை உள்ள பாக்கினையும் வைத்து நாம் சாப்பிடும் போதும் நாம் சாப்பிட உணவு எளிதில் ஜீரணம் அடைவதற்கு உதவியாக இருக்கும்.

 வீட்டில் சுபகாரியம் மற்றும் துக்க காரியம் இவற்றில் எது நடந்தாலும் அங்கு புது விதமான சாப்பாடு போடுவார்கள். வீட்டிற்கு வந்து இருக்கும் உறவினர்கள் அந்த சாப்பாட்டை சாப்பிட்ட பிறகு வெற்றிலை பாக்கு போட்டால் சாப்பாடு எளிதில் ஜீரணம் அடைந்து விடும் என்பதே வெற்றிலை பாக்கு கொடுப்பதற்கான உண்மையான காரணம் ஆகும்.  

அதுபோல சாமி கும்பிடும் போதும் வெற்றிலை பாக்கு வைப்பார்கள். அப்படி வைப்பதற்கான காரணம் என்னவென்றால் வெற்றிலையின் நுனியில் லட்சுமியும், நடுவில் சரஸ்வதியும், காம்பில் பார்வதிதேவியும் இருக்கிறது. அதனை சாமிக்கு வைத்து வழிபடுவதன் மூலம் குடும்பம் செழித்து நன்றாக இருக்கும் என்பது நம் முன்னோர்களுடைய நம்பிக்கையாக இருந்தது.

ஒரு வருடத்திற்குள் பிறந்த குழந்தைக்கு மொட்டை போடுவதற்கான அறிவியல் கரணம்

 

மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்  Facts
SHARE