Ears Sound Reason in Tamil
பொதுநலம் பதிவின் வாசகர்கள் அனைவரும் இன்று ஒரு சுவாரஸ்யமான தகவலை தெரிந்து கொள்ள போகின்றோம். தினமும் இந்த பதிவின் வாயிலாக பல பயனுள்ள தகவலை தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இன்றைய பதிவும் உங்களுக்கு பனுள்ளதாக தான் இருக்கும். நாம் இன்று காதுகளில் சத்தம் எப்படி உருவாகிறது என்றும், காதுகளில் “கொய்ங்” என்ற சத்தம் கேட்பதற்கு காரணம் என்ன என்றும் இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
கை முட்டியில் அடிபட்டால் ஏன் ஷாக் அடிக்குதுனு உங்களுக்கு தெரியுமா..? |
காதுகளில் சத்தம் எப்படி உருவாகிறது..?
பொதுவாக நம் காதுகளை 3 பகுதிகளாக பிரிக்கலாம். அது வெளிப்புற பகுதி, நடுப்பகுதி மற்றும் உட்புறப்பகுதி என்று மூன்று வகைகளாக பிரிக்கலாம். அதுபோல நாம் கேட்கும் சத்தங்கள் அனைத்தும் அலைகளாக பரவும் என்று நம் அனைவருக்குமே தெரியும்.
இதுபோல சத்தங்கள் ஒலி அலைகளின் மூலம் நம் காதிற்குள் போகும் போது நம் காதின் வெளிப்புறத்தில் இருக்கும் Ear Drum என்ற பகுதியை அதிர்வடைய செய்கிறது. அதன் பின் இந்த அதிர்வுகள் நடுப்பகுதியில் இருக்கும் மூன்று எலும்புகளை அசைய வைக்கின்றன.
இந்த எலும்புகள் அசையும் போது உட்புறப்பகுதியில் இருக்கும் Cochlea என்ற பகுதியிலும் அதிர்வுகளை ஏற்படுத்துகிறது. இந்த Cochlea என்ற பகுதியின் உள் திரவங்களும் ரோமங்களும் இருக்கின்றன. இதில் இருக்கும் ரோமங்களை Hair Cells என்று சொல்வார்கள்.
அப்படி நடுப்பகுதியில் இருந்து வரும் அதிர்வுகள் திரவங்களின் மூலம் Hair Cells என்ற ரோமங்களை அசைய வைக்கின்றன. இப்படி அசையும் போது ஏற்படும் சத்தம் நரம்பு செல்களின் வழியாக மூளைக்கு சென்று அது நமக்கு சத்தமாக கேட்கிறது.
கொட்டாவி ஏன் வருகிறது காரணம் தெரியுமா..? |
காதுகளில் “கொய்ங்” என்ற சத்தம் கேட்பதற்கு காரணம் என்ன..?
பெரும்பாலும் நாம் அதிகமான சத்தத்தை கேட்கும் போது நம் காதுகளில் கொய்ங் என்ற சத்தம் கேட்டும். இதுபோல நம் அனைவருக்குமே கேட்டு இருக்கும். இதற்கு என்ன காரணம் தெரியுமா..?
நம் காதுகளில் அதிகமான சத்தம் கேட்கும் போது அதிர்வுகளும் அதிகமாக தான் இருக்கும். அப்படி அதிர்வுகள் அதிகமாக இருக்கும் போது அது Hair Cells -யை பாதிப்படைய செய்கின்றன.
ஆனால் Hair Cells எவ்வளவு பாதிப்பு அடைந்தாலும் அது மூளைக்கு சத்தத்தை அனுப்பும் வேலையை நிறுத்துவதில்லை. இப்படி பாதிப்படைந்த Hair Cells -ல் இருந்து வரும் சத்தம் தான் நமக்கு “கொய்ங்” என்று கேட்கிறது.
கொட்டாவி விட்டால் ஏன் கண்களில் தண்ணீர் வருகிறது தெரியுமா..? |
ஒருவருக்கு கொட்டாவி வந்தால் நமக்கும் கொட்டாவி வருவதற்கான காரணம் என்ன தெரியுமா..? |
மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம் | Facts |