நாம் தரையில் அமர்ந்து சாப்பிடுவதற்கான காரணம் என்ன உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

What Is The Reason For Eating Sitting On The Floor

இன்றைய பதிவு அனைவருக்கும் சுவாரஸ்யமானதாக இருக்கும். இந்த பதிவின் வாயிலாக தினமும் ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இந்த பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நாம் அன்றாடம் செய்யும் ஒரு சில விஷயங்களுக்கு பின்னால் ஒரு அறிவியல் காரணம் ஒளிந்திருக்கிறது. அந்த வகையில் நாம் ஒவ்வொரு விஷயத்திற்கு பின்னால் இருக்கும் அறிவியல் காரணத்தை இந்த பதிவில் தெரிந்து கொண்டு வருகிறோம். அதுபோல தரையில் அமர்ந்து சாப்பிடுவதற்கான காரணம் என்ன என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க…!

அசைவ உணவு எடுத்து செல்லும் கூடையில் ஏன் கரிக்கட்டையை வைக்கிறார்கள்..? அறிவியல் காரணம் தெரியுமா..?

தரையில் அமர்ந்து சாப்பிடுவதற்கு காரணம் என்ன..? 

தரையில் அமர்ந்து சாப்பிடுவதற்கு காரணம் என்ன

அந்த காலகட்டத்தில் இருந்து இந்த காலகட்டம் வரை மாறாமல் நாம் கடைப்பிடித்து வரும் விஷயங்களில் இதுவும் ஓன்று. என்னதான் இந்த காலத்தில் டைனிங் டேபிள் எல்லாம் வந்தாலும் நாம் பெரும்பாலும் தரையில் தான் அமர்ந்து சாப்பிடுகிறோம்.

அன்று வாழ்ந்த நம் முன்னோர்கள் எப்படி ஒவ்வொரு விஷயத்திற்கு பின்னாலும் ஒரு காரணத்தை மறைத்து வைத்திருக்கிறார்களோ அதேபோல இதற்கு பின்னாலும் ஒரு காரணத்தை மறைத்து வைத்திருக்கிறார்கள். அது என்ன என்று இங்கு பார்ப்போம்.

இரவு நேரத்தில் மரத்திற்கு அடியில் உறங்க கூடாது என்று சொல்ல காரணம் என்ன..?

 

 நாம் கீழே அமர்ந்து சாப்பிடும் போது நம் வயிற்று பகுதியில் இருக்கும் தசைகள் சுருங்கி விரிகின்றன. அதனால் நம் வயிற்றில் ஒரு அமிலம் சுரக்கிறது. அது நாம் உண்ணும் உணவை செரிக்க வைக்கிறது. அதுபோல நாம் தரையில் அமர்ந்து சாப்பிடும் போது மூளை தகவல் அனுப்பும் வேகஸ் என்னும் நரம்பு சுறுசுறுப்பாக செயல்பட உதவுகிறது. நம் உடலில் இருக்கும் தசைகள் நன்றாக செயல்பட்டு நமக்கு நெகிழ்வுத் தன்மையை கொடுக்கிறது. அதேபோல இடுப்பு பகுதியில் இருக்கும் எலும்புகள் மற்றும் மூட்டுகளுக்கு உறுதியை கொடுக்கிறது.  

அதுமட்டுமில்லாமல் தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் ஆயுள் அதிகரிக்கும் என்று ஒரு ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.

இது தான் தரையில் அமர்ந்து சாப்பிடுவதற்கு பின்னால் இருக்கும் காரணமாகும். அதனால் அனைவரும் டைனிங் டேபிளில் சாப்பிடுவதை தவிர்த்து விட்டு தரையில் அமர்ந்து சாப்பிடுங்கள்..!

துளசி செடியை சுற்றி வருவதற்கு பின்னால் இருக்கும் அறிவியல் காரணம் உங்களுக்கு தெரியுமா..?
ஏன் இரவு நேரத்தில் வீட்டை பெருக்க கூடாது என்று சொல்கிறார்கள் காரணம் தெரியுமா..?

 

மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்  Facts
Advertisement