கோவிலில் பெண்கள் ஏன் குருக்களாக இல்லை..? அறிவியல் காரணம் உங்களுக்கு தெரியுமா..?

Reason For No Women Priests In The Temple in Tamil

Reason For No Women Priests In The Temple in Tamil

அன்பு நெஞ்சம் கொண்ட நேயர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து வேண்டிய சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பற்றி தான் பார்க்கப் போகிறோம். நம் நாட்டில் எத்தனையோ கோவில்கள் இருக்கின்றன. அனைத்து மக்களும் கோவில்களுக்கு சென்றிருப்பார்கள். நாம் சிறுவயதிலிருந்தே அனைத்து இந்து சமய கோவில்களிலும் பார்த்திருப்போம். ஆண்கள் மட்டுமே குருக்களாக இருப்பார்கள். ஏன் ஆண்கள் மட்டும் பூசாரிகளாக இருக்கிறார்கள் என்று பலருக்கும் பல கேள்விகள் இருக்கும். அந்த வகையில் ஏன் பெண்கள் கோவிலில் குருக்களாக இல்லை என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

இதையும் பாருங்கள் –> கோவிலில் மணி அடிப்பதற்கு பின் இருக்கும் ரகசியம் உங்களுக்கு தெரியுமா..?

கோவிலில் பெண்கள் குருக்களாக இல்லாதது ஏன்..? 

நம் நாட்டில் இந்து சமய கோவில்கள் எத்தனையோ இருக்கின்றன. அந்த கோவில்கள் அனைத்திலும் ஆண்கள் மட்டுமே பூசாரிகளாக இருப்பார்கள். இன்றைய நிலையில் அனைத்து துறைகளிலும் பெண்கள் பணியாற்றி வருகிறார்கள். ஆனால் கோவில்களில் குருக்களாக இருப்பதற்கு பெண்களுக்கு மட்டும் ஏன் அனுமதி இல்லை.

அதுபோல பெண்கள் கோவிலில் குருக்களாக இல்லாததற்கு பின்னால் ஒரு அறிவியல் காரணம் ஒளிந்திருக்கிறது. அந்த காரணத்தை பற்றி இங்கு பார்க்கலாம்.

இந்து மதத்தில் மந்திரம் ஜெபிக்கும் உரிமை ஆண்களுக்கு மட்டுமில்லாமல், பெண்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. கௌரி விரதம், வரலட்சுமி விரதம் போன்ற பல விசேஷங்களுக்கு பெண்களே மந்திரங்களை உச்சரிக்கிறார்கள்.

இருந்தாலும் எந்தக் கோவிலிலும் பெண்கள் குருக்களாக இல்லை. காரணம், இந்து மதத்தில் சில மந்திரங்களை ஆண்கள் மட்டுமே கூற வேண்டும் என்ற விதியும் இருக்கிறது. 

பொதுவாக இந்து மதத்தில் பலவகையான மந்திரங்கள் இருக்கின்றன. அதில் சில மந்திரங்களை பெண்கள் உச்சரிக்க கூடாது என்று நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள்.

 அதற்கு காரணம், மந்திரங்களை உச்சரிக்கும் போது அடிவயிற்றில் ஒரு விதமான வெப்பம் ஏற்படுகிறது. இதனால் தான் மந்திரம் உச்சரிக்கும் ஆண் குருக்கள் அந்த வெப்பத்தை தணிப்பதற்காக உணவில் நெய் சேர்த்து கொள்கிறார்கள். அதுபோல இந்த மந்திரத்தை பெண்கள் உச்சரித்தால், அவர்களுக்கும் அடிவயிற்றில் வெப்பம் ஏற்படுகிறது. அந்த வெப்பமானது பெண்களின் கருப்பையை பாதிக்கிறது. அதுமட்டுமில்லாமல், பெண்களுக்கு வெப்பத்தை தாங்கக்கூடிய சக்தி கிடையாது. 

இதன் காரணமாக தான் பெண்கள் கோவில்களில் குருக்களாக இருக்கக்கூடாது என்று நம் முன்னோர்கள் கூறினார்கள். இதுவே இதற்கான அறிவியல் காரணமாகும்.

கோவிலில் சாமி வந்தது போல் ஆடுவதற்கான அறிவியல் காரணம் என்ன தெரியுமா ?
கோவிலில் ஏன் தேங்காய் உடைக்கிறார்கள் காரணம் தெரியுமா..?

 

மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்  Facts