சாமி வந்தது போல் ஆடுவது | Sami Attam Reason in Tamil
அன்பு நெஞ்சம் கொண்ட நேயர்களுக்கு பொதுநலம்.காம் பதிவின் அன்பான வணக்கங்கள்..! இன்றைய பதிவில் சாமி வந்தது போல் ஆடுவதற்கு காரணம் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ள போகிறோம். நம் அனைவருக்குமே கோவிலுக்கு செல்லும் பழக்கம் உண்டு. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட கோவிலுக்கு சென்றிருப்பார்கள். நாம் அனைவருமே ஒரு விஷயத்தை கவனித்திருப்போம். கோவிலில் சாமி வந்து ஆடுவார்கள். ஏன் அவர்கள் சாமி வந்தது போல ஆடுகிறார்கள் என்று நாம் என்றாவது யோசித்திருப்போமா..? அப்படி யோசிப்பவர்கள் இந்த பதிவை படித்து அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்..!
சாமி வந்தது போல் ஆடுவதற்கு காரணம் என்ன..?
- கோவிலில் சாமி வந்து ஆடுகிறார்கள். அவர்கள் உண்மையாவே சாமி வந்து தான் ஆடுகிறார்களா..? சாமி வந்து ஆடுவது உண்மையா..? பொய்யா..? என்று பல கேள்விகள் இருக்கும். இந்த பதிவின் மூலம் அதற்கான பதிலை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
- நாம் கோவிலில் சாமி வந்து ஆடுவார்கள். சாமி வந்து ஆடுபவர்கள் பெரும்பாலும் பெண்களாகவே இருப்பார்கள்.
- பெரும்பாலும் பெண்களுக்கு மட்டும் ஏன் சாமி வருகிறது. காரணம் பெண்களுக்கு உணர்ச்சிகள் அதிகம் என்று ஆய்வுகளில் கூறப்படுகிறது.
- பெண்கள் உணர்வு பூர்வமானவர்கள். உதாரணமாக சொல்ல போனால், சாவு வீடுகளில் பெண்கள் தான் அழுவார்கள். அதை நாம் கவனித்திருப்போம்.
- ஏன் சாவு வீடுகளில் பெண்கள் மட்டும் அழுகிறார்கள். இந்த நிகழ்வு பெண்கள் உணர்வு பூர்வமானவர்கள் என்பதை நமக்கு உணர்த்துகிறது.
- தெய்வத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்ட பெண்கள் மற்றும் உணர்வு பூர்வமான பெண்கள் கோவிலுக்கு செல்லும் போது கோவில் சூழல் மற்றும் இசையால் அவர்களின் நரம்புகள் தூண்டப்படுகின்றன. இதனால் தான் அவர்கள் சாமி வந்தது போல் ஆடுகிறார்கள்.
- இந்த சாமி ஆடுவது நரம்புகளின் உணர்வு பூர்வமான தூண்டுதலால் நிகழ்கிறது என்று ஆய்வுகளில் கூறப்படுகிறது. சாமி வந்து ஆடுவது உணர்வுகளின் வெளிப்பாடு என்றும் அது நரம்பு சம்மந்தப்பட்ட தூண்டுதல் என்றும் கூறப்படுகிறது.
சாமி வந்து ஆடுவது உண்மையா..? பொய்யா..?
- தன்னை அறியாமல் ஒரு உணர்வின் வெளிபாடு தான் சாமி வந்து ஆடுவது. இது உணர்ச்சிவசப்படுதல் மற்றும் கற்பனையின் வெளிப்பாடு என்றும் சொல்லப்படுகிறது.
- சாமி வந்து ஆடுபவர்களுக்கு எல்லா இடங்களிலும் சாமி வருவதில்லை. நாம் வீட்டிலும் தான் சாமி கும்பிடுகிறோம். ஏன் வீட்டில் சாமி வருவதில்லை. காரணம், கோவிலில் உடுக்கை, மத்தளம் போன்ற இசையால் நரம்புகள் தூண்டப்பட்டு சாமி வந்தது போல் ஆடுகிறார்கள்.
- அந்த இசையில் இருந்து வரும் ஒலியின் அதிர்வெண்ணும், சாமி வந்து ஆடுபவர்களின் ஆழ்மன அலைகளின் அதிர்வெண்ணும் ஓன்று சேரும் போது அவர்கள் தன்னிலை மறந்து ஆழ்மனதின் வெளிப்பாடுகளை அப்படியே செய்கின்றனர்.
- இசையின் வேகம் அதிகமாகும் போது அவர்களின் வேகமும் அதிகமாகிறது. அதேபோல இசையின் வேகம் குறையும் போது அவர்களின் வேகமும் குறைகிறது.
- அந்த நேரத்தில் அவர்கள் சொல்லும் அருள்வாக்குகள் எல்லாம் அவர்களின் ஆழ்மனதில் இருந்து வெளிப்படும் வார்த்தைகள் ஆகும்.
மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம் |
Facts |