Scientific Reason For Wearing Jewelry in Tamil
வணக்கம் அன்பான நேயர்களே… இன்றைய பதிவில் நாம் நகை அணிவதன் அறிவியல் காரணத்தை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். அனைத்து நாட்டில் இருக்கும் ஆண்கள் பெண்களும் நகை அணிவார்கள். அந்த காலத்தில் இருந்து இந்த கால கட்டம் வரை நகை என்பது முக்கியமான ஒன்றாக உள்ளது. ஆண் மற்றும் பெண் என இருபாலருமே நகை அணிவார்கள்.
பாரம்பரியமாகவே நகைகள் அணிவது என்பது முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. நாம் அணியும் ஒவ்வொரு அணிகலனுக்கு பின்னாலும் ஒரு அறிவியல் காரணம் ஒளிந்திருக்கிறது. அந்த காரணத்தை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
பெண்கள் வெள்ளி நகை அணிவதால் இத்தனை நன்மைகளா..! |
நகை அணிவதற்கான அறிவியல் காரணம் என்ன..?
நம் உடல் முழுவதும் நரம்புகளால் பின்னப்பட்டுள்ளது. அதனால் தான் உள்ளங்காலில் அடித்தால் கூட உச்சந்தலையில் வரை வலி ஏற்படுகிறது. நம் உடலில் நரம்புகள் ஒன்று சேரும் போது உள் உணர்வை தூண்டக்கூடிய நரம்பு பகுதிகள் உள்ளன.
நரம்புகள் ஓன்று சேரும் இடங்களில் நகைகள் அணிவதன் மூலம் சில வேதியியல் மாற்றங்கள் உடலில் ஏற்படுகின்றன. அந்த காரணத்தினால் தான் நாம் பாரம்பரியமாக நகை அணிகின்றோம். தங்கம், வெள்ளி, செம்பு போன்ற உலோகங்களினால் செய்யப்பட்ட நகைகளை அணிவதன் மூலம் நம் உடலில் உள்ள அதிக வெப்பத்தை குறைக்க முடியும்.
நாம் தங்க நகைகளை உடம்பில் மேல் பகுதியிலும், வெள்ளி நகைகளை உடலின் கீழ் பகுதியிலும் அணிகின்றோம். அதாவது மேல் பகுதி என்றால் கழுத்து, காது, மூக்கு, போன்றவற்றிலும், கீழ் பகுதி என்றால் கால்களில் வெள்ளி நகைகளை அணிகின்றோம்.
காரணம், வெள்ளி பூமியின் சக்தியுடன் பிரதிபலிக்கிறது. அதனால் தான் கொலுசு மற்றும் மெட்டி போன்ற வெள்ளி நகைகளை காலில் அணிகின்றோம்.
அதே போல தங்கம் உடலின் ஆற்றல் மற்றும் ஒளி ஆகியவற்றால் நன்கு பிரதிபலிக்கிறது. அதனால் தான் தங்கம் உடலின் மேற்பகுதிகளை அலங்கரிக்க பயன்படுத்தப்படுகிறது.
தோடு அணிய காரணம் என்ன..?
நம் சமூகத்தில் ஆண் மற்றும் பெண் இருவருக்கும் காதுகுத்தும் வழக்கம் இன்று வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. காரணம் நம் காத்து மடலில் இருந்து மூளைக்கு நரம்பு செல்கிறது.
நாம் காதுகுத்தும் போது இந்த நரம்பானது தூண்டப்பட்டு கண் பார்வைக்கு கவனிக்கும் திறனை அதிகரிக்க செய்கிறது . இதனால் தான் நாம் தோடு அணிகின்றோம்.வளையல் அணிய காரணம் என்ன..?
வளையல் என்பது நம்முடைய பாரம்பரிய அணிகலன் என்று கூறலாம். வளையல் அணிவதால் நம் உடலில் ஹார்மோன் குறைபாடு ஏற்படாமல் இருக்கும்.
நம் கை மணிக்கட்டுகளில் உள்ள துடிப்புடன் வளையல் உரசும் போது இரத்த ஓட்டத்தின் அளவு அதிகரிக்கிறது . இந்த காரணத்தினால் தான் நாம் சிறு வயதில் இருந்து வளையல் அணிகின்றோம்.மூக்குத்தி அணிய காரணம் என்ன..?
பெரும்பாலும் பெண்கள் தான் மூக்குத்தி அணிவார்கள். அந்த காலத்தில் ஆண்களும் மூக்குத்தி அணிந்தார்கள்.
காரணம், மூக்குத்தி நம் உடலில் உள்ள கெட்ட வாயுவை வெளியேற்றுகிறது. மேலும் சுவாசம் சம்மந்தப்பட்ட கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கிறது. பார்வை கோளாறுகளை சரி செய்கிறது. மூக்குத்தி அணிவதால் ஞாபகசக்தி அதிகரிக்கும் என்று ஆய்வுகளில் கூறப்படுகிறது.
நெத்திச்சுட்டி அணிய காரணம் என்ன..?
தலை பகுதியில் அணியும் ஒரு அணிகலன் தான் நெத்திச்சுட்டி. நாம் நெத்திச்சுட்டியை தலையின் வகிடுப் பகுதியில் அணிவதால் நெற்றியிலிருந்து காது வரை செல்லும் நரம்புகள் தூண்டப்பட்டு புத்துணர்ச்சி பெறுகின்றன.
மோதிரம் அணிய காரணம் என்ன..?
நம் கையில் சுண்டு விரலுக்கு பக்கத்தில் இருக்கும் விரலில் தான் மோதிரம் அணிய வேண்டும். காரணம், மோதிரம் அணியும் விரலில் உள்ள நரம்பு இதய நரம்புகளுடன் இணைகிறது.
அதனால் நாம் மோதிரம் அணியும் போது இதயநோய், வயிற்றுப் பிரச்னை போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம். அதனால் தான் நாம் அந்த விரலில் மோதிரம் அணிகின்றோம்.
நகை கழுத்தில் அணிய காரணம் என்ன..?
ஒவ்வொரு மனிதனும் தன் வசதிக்கு ஏற்றபடி கழுத்தில் தங்கம் அல்லது வெள்ளி போன்ற நகைகளை அணிகின்றார்கள். நாம் நகை அணியும் போது கழுத்தில் உள்ள நரம்புகள் வலிமை பெறுகின்றன.
அதுமட்டுமில்லாமல், நம் உடலில் உள்ள உஷ்ணத்தை குறைத்து நம் உடலை பாதுகாக்கிறது.
கொலுசு அணிய காரணம் என்ன..?
குழந்தையாக இருக்கும் போது ஆண், பெண் இருவருக்குமே கொலுசு போட்டு விடுவார்கள். வெள்ளி கொலுசு குதிகால் நரம்பினை தொட்டுக் கொண்டிருப்பதால் குதிகால் பின் பகுதியில் இருக்கும் நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் உணர்ச்சிகளைக் குறைத்து கட்டுப்படுத்துகிறது.
இந்த காரணத்தால் தான் கொலுசு அணிகின்றோம்.
கால் விரலில் மெட்டி அணிய காரணம் என்ன..?
பாரம்பரியமாக பெண்கள் கால் விரலில் மெட்டி அணிவார்கள். காரணம், கருப்பை நரம்புகளுக்கும் கால் விரல் நரம்புகளுக்கும் ஒருவித தொடர்பு உள்ளது.
மெட்டி அணிவதால் கருப்பையின் நீர்ச்சமநிலை சீராகிறது. வெள்ளியில் செய்த மெட்டியைத் தான் விரலில் அணிய வேண்டும்.
ஏனென்றால், வெள்ளியில் இருக்கக் கூடிய காந்த சக்தியானது காலில் இருக்கும் நரம்புகளில் இருந்து உடலில் ஊடுருவி கருப்பையில் நோய்த்தொற்று ஏற்படாமல் பாதுகாக்கிறது. அதனால் தான் மெட்டி அணிகின்றோம்.
மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம் | facts |