ஏன் AC -யை மேல்பக்கம் மட்டுமே மாட்டுகிறார்கள்..? இதற்கு பின் இருக்கும் அறிவியல் காரணம் என்ன தெரியுமா..?

Advertisement

What is The Scientific Reason Why AC is Shifted Upwards in Tamil 

வீட்டில் AC வைத்திருப்பவர்கள் அனைவரும் இதை யோசித்தது உண்டா..? ஏன் AC -யை மேல்பக்கம் மட்டுமே மாட்டுகிறார்கள் என்று என்றாவது யோசித்தது உண்டா..? இதை யோசித்திருந்தால் அதற்கான அறிவியல் காரணத்தை தெரிந்துகொள்ளுங்கள்..! அப்படி யோசிக்காமல் இருந்தால் இந்த பதிவை படித்து உங்கள் நண்பர்களிடம் இதை சொல்லி அவர்களிடம் இதற்கான பதிலை தெரியப்படுத்துங்கள்..! சரி இப்போது அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

What is The Scientific Reason Why AC is Shifted Upwards in Tamil:

இந்த சீசன் வெயில் காலம் என்பதால் அதிகளவு வீட்டில் AC வாங்குவதற்கு முடிவு  செய்திருப்பீர்கள். அவர்கள் AC -யை மேல் பக்கம் தான் மாட்டுவார்கள். அதற்கு என்ன அர்த்தம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉  கேஸ் சிலிண்டர்ல இனி இந்த நம்பரை செக் பண்ணாமல் சிலிண்டர் வாங்கிடாதீங்க..!

குளிர்ந்த காற்று எடை அதிகம் கொண்டிருக்கும். அந்த காற்று கீழ் நோக்கி மட்டுமே வரும். அதே போல சூடான காற்று எடை குறைவாக இருக்கும். அதனால் அந்த காற்று மேல் நோக்கியே செல்லும். அதனால் தான் அந்த குளிர்ந்த காற்றை வெளிப்படுத்த AC –யை மேல் பகுதியில் வைத்திருக்கிறார்கள். சூட்டை வெளிப்படுத்தும் ஏசியை கீழ் பகுதியில் வைப்பார்கள். சூட்டை வெளிப்படுத்தும் ஏசி இந்தியாவில் குறைவு. இந்த AC வெளிநாடுகளில் தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

அறிவியல் படி கனமான காற்று கீழ் பகுதி நோக்கியும், லேசான காற்று மேல் பகுதி நோக்கியும் செல்லும் என்ற விதியை முன்வைத்து இந்த டிசைன் செய்யப்பட்டுள்ளது. இந்த AC அறையில் உள்ள வெப்பத்தை ஈர்த்து வெளிப்பக்கம் செலுத்துகிறது.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 பள்ளி பேருந்துகள் ஏன் மஞ்சள் நிறத்தில் உள்ளது வேற கலர் இல்லை என்று தெரியுமா.?

மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்  Facts
Advertisement