பூமி சுற்றாமல் இருந்தால் என்ன நடக்கும்
இன்றைய பதிவில் பூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்ன ஆகும் என்பதை பற்றி பார்க்க இருக்கின்றோம்.பூமி தினமும் சுற்றுவதன் மூலம் தினமும் இரவு மற்றும் பகல் என பருவ நிலை மாற்றம் ஏற்படுகிறது. பூமி சுற்றுவது நின்றுவிட்டால் நாம் எதிர்பார்க்காத அளவிற்கு விளைவுகள் உண்டாகும். பூமி அதன் அச்சில் சுழன்று 24 மணி நேரத்தில் அதன் சுழற்சியை நிறைவு செய்கிறது. அதே சமையத்தில் பூமி சூரியனை முழுவதும் சுற்றி முடிப்பதற்கு 365 நாட்கள் ஆகும்.பூமி சூரியனை சுற்றிவரும்போது அதன் தளத்தில் இருந்து செங்குத்தாக இல்லாமல் 23-44 டிகிரி செல்ஸியஸ் கோணத்தில் சார்ந்துள்ளது. உலகம் சமநிலையில் இருக்க பூமி சுற்றுவது அவசியம்.விண்வெளி, பூமி, மனிதர்கள், விலங்குகள் என அனைத்தும் இயற்கையால் உருவாக்கப்பட்டவை. ஒரு நிமிடம் பூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்ன ஆகும் தெரியுமா?
பூமி சுழற்றுவதை நிறுத்தினால் கடும் பேரழிவை ஏற்படுத்தும். காற்று மற்றும் கடல் நீரோட்டம் போன்றவற்றை பாதிக்கும். இது மட்டுமில்லாமல் பூமி அதன் சுழற்சியை நிறுத்தும்போது ஒரு பகுதி பகலாகவும் மற்றொரு பகுதி இரவாகவும் நிரந்தரமாக மாறிவிடும்.பூமியின் ரேகை மற்றும் அதன் மேற்பரப்பு அதன் சுழற்சியை மணிக்கு 1600 கிமி வேகத்திகத்தில் சுழற்றுகிறது. பூமி சுற்றுவது நின்றுவிட்டால் அதனுடைய வேகம் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு பேரழிவை ஏற்படுத்த கூடும். இந்த பதிவில் பூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்ன ஆகும் என்பதை பற்றி பற்றி பார்க்கலாம் வாங்க….
பூமியின் சுழற்சி:

பூமி அதன் சொந்த அச்சில் கிழக்கிலிருந்து மேற்காக சுழன்றுகொண்டு இருக்கிறது. பூமி தன்னுடைய அச்சை முழுமையாக சுற்றி வருவதற்கு 24 மணி நேரம் ஆகிறது. இதன் மூலம் தினமும் இரவு, பகல் ஏற்படுகிறது. பூமி சுமார் 1600 கிமீ வேகத்திலும் வினாடிக்கு 460 மீட்டர் வேகத்திலும் சுழல்கிறது.
பூமிக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள்..!
பருவகால மாறுபாடு :
பூமியின் அச்சு சாய்வதன் மூலம் வெவ்வேறு பகுதிகளில் வெயில்காலம், மலைகாலம், குளிர்காலம் போன்ற பருவங்கள் மாறுபடுகிறது. பூமி அதன் சுழற்சியை நிறுத்தினால் உலகில் ஒரு பகுதி அதிக வெப்பமாகவும் மற்றோரு பகுதி முழு இரவையும் கொண்டிருக்கும். இதனால் பருவநிலை மாறுபாட்டில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.
சூரியனில் படுதல்:
பூமி தன் அச்சில் மேற்கிலிருந்து கிழக்காக சுழல்கிறது.பூமி அதன் அச்சில் சுழற்றுவதை நிறுத்தினால் அதன் சுற்றுபாதையில் முன்னோக்கி செல்லும் வேகத்தை இழந்துவிடும். சூரியனின் ஈர்ப்பு விசையை எதிர்த்து நிற்க வேகம் இல்லாமல், பூமி சூரியனில் வந்துவிழும்.
பேரழிவு:
பூமி சுற்றுவதை நிறுத்தினால் உலகில் எதிர் பார்க்க முடியாத அளவிற்கு கடுமையான பேரழிவை ஏற்படுத்தக்கூடும். நிலப்பரப்பில் இருக்கும் மரங்கள், கட்டிடங்கள், மனிதர்கள் என அனைத்தும் தூக்கி வீசப்படும். இயற்கையின் சீற்றமான சூறாவளி மற்றும் சுனாமி போன்ற பேரழிவு ஏற்படும். இதனால் உடைமைகள் , உயிர்கள் போன்ற இழப்புகள் ஏற்படும்.
சூரியனின் பாதிப்பு:
பூமி சுற்றுவதன் மூலம் சுழற்சியின்போது காந்தப்புலத்தை ஏற்படுத்தும்.பூமியின் சுழற்சி நின்றுவிட்டால் காந்தப்புலம் பலவீனம் அடைந்து சூரியனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். சூரிய கதிர்களின் பாதுகாக்கும் திறன் குறைந்துவிடும்.
உயிரினங்களின் இழப்பு :
பூமி சுற்றுவது நின்றுவிட்டால் வெப்பநிலை மாற்றம் மற்றும் காந்தப்புலம் இழப்பு ஏற்படும். இதனால் நிலப்பரப்பில் இருக்கும் அனைத்து உயிரினங்களும் இறந்துவிடும்.
| இதுபோன்று தகவல்களை தொடர்ந்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Learn |














