எந்த பாக்டீரியா பாலை தயிராக மாற்றுகிறது? | Which Bacteria Turns Milk Into Curd in Tamil
தயிரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். இவற்றில் தயிர் சாதம், லெஸி, தயிர் பச்சடி என்று பலவகையான உணவுகளை தயார் செய்வார்கள். தயிர் உடலுக்கு குளிர்ச்சியை வழங்குவதோடு மட்டுமில்லாமல், செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. தயிர் பால் தயாரிப்பாக இருப்பதால், குடல் ஆரோக்கியத்திற்கு தயிர் நன்மையளிக்கிறது. வயிறு சரியில்லாத நேரங்களில் தயிர் சாப்பிடுவது சிறந்த தீர்வை கொடுக்கும். தயிரில் சில வகையான அமிலங்கள் நிறைந்துள்ளதால், அவை ஊட்டச்சத்துக்கள், மேக்ரோமினரல்கள் உறிஞ்சுவதற்கு உதவுகிறது. குறிப்பாக ஸ்டீராய்டு ஹார்மோன்கள், கார்டிசோலின் வளர்ச்சியைத் தடுப்பதால், உடல் பருமன் ஏற்படும் அபாயத்தைக் கட்டுப்படுத்துகிறது என்று சொல்லப்படுகிறது. சரி இந்த பதிவில் பாலை தயிராக மாற்றும் பாக்டீரியா எது தெரிந்துகொள்வோம்.
இதையும் கிளிக் செய்யுங்கள் 👇
கடலில் கப்பல் எப்படி மூழ்காமல் மிதக்கிறது காரணம் தெரியுமா..?
பாலை தயிராக மாற்றும் பாக்டீரியா எது?
விடை: லாக்டோ பேசில்லஸ் (Lactobacillus)
பாலில் உள்ள லாக்டோ பேசில்லஸ் பாக்டீரியா, பாலை தயிராக மாற்றுகிறது. பாலை 30-40 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் சூடாக்கி, அதனுடன் சிறிதளவு பழைய தயிர் சேர்க்கப்படும் போது, அந்த தயிர் மாதிரியில் உள்ள லாக்டோ பேசில்லஸ் செயலிழந்து பெருகும். இவை லாக்டோஸ் லாக்டிக் அமிலமாக மாற்றுகிறது.
தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் லாக்டோ பேசில்லஸ் பாக்டீரியா செயல்படுவற்கு ஏற்ற வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் ஆகும். அதன் காரணமாகத் தான், பால் காய்ச்சப்பட்ட பிறகு தயிர் உறை ஊற்றப்படுகிறது. ஆறிய பாலையும் சற்று வெப்பப்படுத்தி உறை ஊற்றினால், தயிர் நன்றாக உறையும்.
இதையும் கிளிக் செய்யுங்கள் 👇
கடலில் வாழும் மீன்களின் உடம்பில் ஏன் உப்பு தங்குவதில்லை காரணம் தெரியுமா..?
மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம் | Facts |