டயர் வண்டி
பைக், கார் போன்றவை வாங்குவதற்கு முன் என்ன நிறத்தில் வாங்க வேண்டும் என்று யோசிப்போம். ஆனால் ஒரு டயர் வாங்கும் போது எந்த நிறத்தில் வாங்குவது என்ற கேள்வியே இருக்காது. இதற்கு காரணம் கருப்பு நிறத்தில் மட்டும் தான் கிடைக்கிறது. டயர்கள் கருப்பு நிறத்தில் மட்டும் இருக்கிறதுக்கு காரணம் இருக்கிறது அது என்னவென்று தெரிந்து கொள்வோம் வாங்க.
டயர் கருப்பு நிறத்தில் மட்டும் இருக்க காரணம்:
முதலில் டயர் 1895 ஆம் ஆண்டு தான் உருவாக்கப்பட்டது. முதலில் உருவாக்கப்பட்ட டயர் வெள்ளை நிறத்தில் தான் உருவாக்கப்பட்டது. ஆனால் வெள்ளை நிற டயர்கள் பல பிரச்சனையை ஏற்படுத்தியது. நீண்ட நாட்களுக்கு உழைக்க கூடியதாக இல்லை. வெப்பத்தை உரியும் திறனும் வெள்ளை நிறுத்தி குறைவாகவே இருந்தது.
விமானம் ஏன் வெள்ளை நிறத்தில் மட்டும் இருக்கிறது உங்களுக்கு தெரியுமா..?
டயரின் ஆயுளை அதிகரிக்க கார்பன் பிளாக் என்ற வேதிசேர்மத்தை தூய்மையான ரப்பரில் கலக்கப்படுகிறது. இதனால் தான் டயர்கள் கருப்பு நிறத்தில் காணப்படுகிறது.
கருப்பு நிறம் தான் நீண்ட நாட்களுக்கு உழைக்கும். வெப்பத்தாலும் எந்த பிரச்சனையும் ஏற்படாது. கருப்பு கார்பன் மற்ற கார்பன்களை விட விலை குறைவானது. டயருக்கு நீண்ட ஆயுள் தருகிறது. தினமும் வாகனத்தை ஓட்டுவதற்கு கருப்பு நிறம் தான் உகந்தது. சாலையில் உள்ள வெப்பத்தை தாங்கி நீடித்து உழைக்கிறது. கருப்பு கார்பன் மற்றும் ஓசோன் மற்றும் புரா ஊதா கதிர்களிலுருந்து தீங்கு விளைவிக்கும் பிரச்சனைகளிலுருந்து டயர்களை பாதுகாக்கிறது. இதனால் தான் டயர்கள் கருப்பு நிறத்தில் காணப்படுகிறது.கருப்பு நிற உள்ளாடை மற்றும் ஆடைகள் அணிகிறீர்கள் என்றால் இதை தெரிந்து கொள்ளுங்கள்.!
மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம் | Facts |