Why Do Feel Electric Shock in Hand When Touch Something
பொதுநலம் பதிவின் வாசகர்கள் அனைவருக்கும் இன்றைய பதிவு பயனுள்ள பதிவாக இருக்கும். அப்படி என்ன தகவலாக இருக்கும் என்று யோசிப்பீர்கள். யோசித்து கொண்டே இந்த பதிவை படிக்க தொடங்குங்கள். நீங்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு சுவாரஸ்யமான தகவலாக இந்த பதிவு இருக்கும். நாம் சில நேரங்களில் கையை ஏதாவது ஒரு இடத்தில் இடித்தால் கையில் ஷாக் அடிப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படும். இது நம் அனைவருக்குமே ஏற்பட்டு இருக்கும். ஏன் மற்ற இடங்களை விட கை முட்டியில் அடிபட்டால் மட்டும் ஷாக் அடிக்கிறது என்று என்றாவது யோசித்திருக்கிறீர்களா..? இல்லை அதற்கான காரணத்தை தேடியிருக்கிறீர்களா..? அப்படியென்றால் உங்களுக்கு தான் இந்த பதிவு..!
கொட்டாவி ஏன் வருகிறது காரணம் தெரியுமா..? |
கை முட்டியில் அடிபட்டால் ஏன் ஷாக் அடிக்கிறது..?
பொதுவாக நாம் நமக்கே தெரியாமல் டில இடங்களில் இடித்து கொண்டிருப்போம். உதாரணத்தில் பின் பக்கம் சுவர் இருப்பது தெரியாமலேயே நம் கையை அதில் இடித்து கொண்டிருப்போம்.
அந்த நேரம் நம் கையின் முட்டியில் கரண்ட் ஷாக் அடித்தது போன்ற உணர்வு ஏற்படும். இதுபோல உங்களுக்கும் ஏற்பட்டு இருக்கிறதா..? இதற்கு கேள்வியே கிடையாது. இதுபோல அனைவருக்குமே ஏற்பட்டிருக்கும். சரி இதற்கான காரணத்தை இங்கு பார்ப்போம்.
ஒரு மனிதனின் செயல்பாடுகள் அனைத்தையும் தீர்மானிப்பது நம்முடைய மூளை தான். மனித உடலில் இருக்கும் அனைத்து நரம்புகளும் மூளையில் இருந்து தான் மற்ற பகுதிகளுக்கு செல்கின்றன.
கொட்டாவி விட்டால் ஏன் கண்களில் தண்ணீர் வருகிறது தெரியுமா..? |
அப்படி மூளையில் இருந்து தொடங்கும் நரம்புகளில் இந்த நரம்பும் ஓன்று. இந்த நரம்பு மூளையில் இருந்து தொடங்கி நம் கையில் இருக்கும் சுண்டு விரல் மற்றும் மோதிர விரலில் இணைகிறது. இப்படி இணையும் நரம்பை Ulnar Nerve என்று சொல்வார்கள்.
இந்த நரம்பு நம் உடலில் தசைகளிலோ அல்லது எலும்புகளுடன் இணையாமல் தசையின் மேல் சாதாரணமாக வெளிப்புறத்தில் செல்கிறது. அதாவது நம் உடலில் இருக்கும் நரம்புகளில் பாதுகாப்பே இல்லாமல் செல்லும் நீளமான நரம்பு இது தான். அப்படி இருக்கும் போது நம் கை முட்டியில் அடிபட்டவுடன் சிறிது நொடிகள் அந்த நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் நிறுத்தப்படுகிறது.அந்த நேரம் நரம்பில் இரத்த ஓட்டம் வேகமாக வரும் போது தான் நம் கையில் இருந்து அந்த இரண்டு விரல்களிலும் கரண்ட் ஷாக் அடிப்பது போல இருக்கிறது. இதனால் தான் நாம் எங்காவது இடித்து கொண்டால் ஷாக் அடிப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது.
ஒருவருக்கு கொட்டாவி வந்தால் நமக்கும் கொட்டாவி வருவதற்கான காரணம் என்ன தெரியுமா..? |
மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம் | Facts |