காகத்திற்கு உணவு வைப்பதற்கான காரணம் என்ன உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

Why Do They Feed The Crow

இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு சுவாரஸ்யமான தகவலை பற்றி தான் பார்க்க போகிறோம். தினமும் இந்த பதிவின் மூலம் ஒரு சுவாரஸ்யமான தகவலை பற்றி தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இன்றைய பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். சரி ஏன் எல்லா விசேஷ நாட்களிலும் காகத்திற்கு உணவு வைக்கிறார்கள்..? இதற்கான காரணம் உங்களுக்கு தெரியுமா..? காரணம் தெரியாதவர்கள் இந்த பதிவை முழுமையாக படித்து அந்த காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

பசு மாட்டிற்கு அகத்திக்கீரை கொடுப்பது ஏன் தெரியுமா?

ஏன் காகத்திற்கு உணவு வைக்க வேண்டும்..?  

ஏன் காகத்திற்கு உணவு வைக்க வேண்டும்

அந்த கால கட்டத்தில் இருந்து இந்த காலகட்டம் வரை மாறாமல் இருக்கும் விஷயங்களில் இதுவும் ஓன்று. நம் வீட்டில் இருப்பவர்கள் ஏதும் ஒரு நல்ல நாள் வந்தால் அன்று சைவ உணவு சமைத்து அதை முதலில் காகத்திற்கு கொடுப்பார்கள் அதை நாம் பார்த்திருப்போம்.

ஏன் காகத்திற்கு உணவு வைக்கிறார்கள், இந்த உலகில் எத்தனையோ ஜீவராசிகள் இருக்கின்றன. ஆனால் ஏன் காகத்திற்கு மட்டும் உணவு வைக்க வேண்டும். இந்த கேள்வி அனைவரிடமும் இருக்கும்.

சிலர் உடனே வீட்டில் இருக்கும் பெரியவர்களிடம் ஏன் காகத்திற்கு உணவு வைக்க வேண்டும் என்று கேட்டால், அதற்கு அவர்கள் காகத்திற்கு உணவு வைத்தால் நம் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கிவிடும். அதேபோல இறந்து போன தாத்தா பாட்டி காக்கா ரூபத்தில் வந்து சாப்பிடுவார்கள் என்று சொல்வார்கள். அதனால் அமாவாசை அன்று காகத்திற்கு உணவு வைப்பார்கள்.

 பொதுவாக காகம் மற்ற உயிரினங்களை போல இல்லாமல் ஒன்றாக கூடி வாழ்ந்து, எப்பொழுதும் சேர்ந்து உணவு உண்ணும் குணம் கொண்டது. அதனால் நம் முன்னோர்கள் காகத்தை உயர்ந்த குணம் கொண்ட உயிரினமாக பார்த்தார்கள். அதனால் தான் நம் முன்னோர்கள் அந்த காலத்தில் காகத்திற்கு உணவு வழங்கினார்கள். அதையே நாம் இன்றும் பின்பற்றி வருகின்றோம்.  
துளசி செடியை சுற்றி வருவதற்கு பின்னால் இருக்கும் அறிவியல் காரணம் உங்களுக்கு தெரியுமா..?

 

மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்  Facts
Advertisement