அடுப்புக் கரியின் அதிசயம்
இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு சுவாரஸ்யமான தகவலை பற்றி தான் பார்க்க போகிறோம். தினமும் இந்த பதிவின் வாயிலாக ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இன்றைய பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். சரி அசைவ உணவு எடுத்து செல்லும் போது ஏன் அடுப்பு கரியை போட்டு எடுத்து செல்ல வேண்டும் என்று ஏன் சொல்கிறார்கள். இதற்கு பின்னால் இருக்கும் அறிவியல் காரணம் என்ன என்று உங்களுக்கு தெரியுமா..? இந்த பதிவின் வாயிலாக அதை நாம் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
துளசி செடியை சுற்றி வருவதற்கு பின்னால் இருக்கும் அறிவியல் காரணம் உங்களுக்கு தெரியுமா..? |
அசைவ உணவு எடுத்து செல்லும் போது ஏன் கரிக்கட்டையை பயன்படுத்துகிறார்கள்..?
நம் முன்னோர்கள் கூறிய ஒவ்வொரு விஷயத்திற்கு பின்னாலும் ஒரு அறிவியல் காரணம் இருக்கிறது. அதேபோல தான் இதற்கு பின்னாலும் ஒரு அறிவியல் காரணம் ஒளிந்திருக்கிறது.
ஏன் அசைவ உணவு எடுத்து செல்லும் போது அந்த கூடையில் கரிக்கட்டையை வைக்கிறார்கள் என்றும் பலருக்கும் பல கேள்விகள் இருக்கும். அதற்கான காரணத்தை இங்கு பார்ப்போம்.
பொதுவாக நாம் ஏதாவது ஊருக்கு போயிட்டு வரும் போது, அங்கிருந்து ஏதும் அசைவ உணவு கொண்டு வந்தால் அந்த கூடையில் கரித்துண்டு போட்டு கொடுப்பார்கள். இதை நாம் பார்த்திருப்போம். இன்னும் சொல்லப்போனால் இதுபோல இன்றும் சில ஊர்களில் செய்து வருகிறார்கள்.
நாம் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று பெரியவர்களிடம் கேட்டால், அதற்கு அவர்கள் நாம் கறிக்குழம்பு, மீன் குழம்பு எடுத்து செல்லும்போது காத்து கருப்பு ஏதும் நம்மை ஆண்ட கூடாது என்பதற்காக தான் கரிக்கட்டையை வைக்கிறோம் என்று கூறுவார்கள்.
ஏன் இரவு நேரத்தில் வீட்டை பெருக்க கூடாது என்று சொல்கிறார்கள் காரணம் தெரியுமா..? |
ஆனால் இதற்கு பின் ஒரு அறிவியல் காரணம் இருக்கிறது. அந்த காலத்தில் ரோடு எல்லாம் கிடையாது. காட்டு வழியில் தான் செல்ல வேண்டும். அப்படி அசைவ உணவை காட்டு வழியாக எடுத்து வரும் போது அங்கு இருக்கும் விலங்குகள் அசைவ உணவின் வாசனையை மோப்பம் பிடித்து நம்மிடம் வரும். அந்த வாசனையை கட்டுபடுத்துவதற்காக தான் கரித்துண்டை பயன்படுத்துகிறார்கள். காரணம் அடுப்பு கரியில் கார்பன் C2 இருப்பதால் அது வாசனையை வெளியில் அனுப்பாமல் கட்டுபடுத்துகிறது.
மேலும் அந்த காலத்தில் பெண்கள் மல்லிகை பூ வைத்து வெளியில் செல்லும் போது மல்லிகை பூ வாசனை வராமல் இருப்பதற்காக தலையில் சிறிய கரித்துண்டை வைத்து கொள்வார்கள்.
அதுமட்டுமில்லாமல் சாம்பல் மற்றும் கரித்துண்டில் தான் அந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் பல் துலக்கினார்கள். காரணம் கரித்துண்டில் இருக்கும் கார்பன் C2 துர்நாற்றத்தை நீக்கி பற்களை சுத்தமாக வைத்து கொள்கிறது.
இதனால் தான் அந்த காலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்கள் கரித்துண்டை இப்படி பயன்படுத்தி இருக்கிறார்கள். இதுவே இதற்கு பின் இருக்கும் அறிவியல் காரணமாகும்.
இரவு நேரத்தில் மரத்திற்கு அடியில் உறங்க கூடாது என்று சொல்ல காரணம் என்ன..? |
மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம் | Facts |