சாலையின் வாகனம் ஓட்டும் கதை
வணக்கம் பிரண்ட்ஸ்..! உங்களுக்கு இன்றைய பதிவில் ஒரு சுவாரஸ்யமான தகவலை கூறப்போகிறேன் என்பதில் மிக்க மகிழ்ச்சி. நீங்களும் இந்த பதிவை படித்து முடிக்கும் போது ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொண்டோம் என்ற மனத்திருப்தி உங்களுக்கு இருக்கும். அப்படி என்ன தகவலாக இருக்கும் என்று மேல் படித்து தெரிந்து கொண்டிருப்பீர்கள். சரி பொதுவாக நாம் அனைவருமே சாலையில் நடக்கும் போதும் சரி, சைக்கிள், பைக் போன்றவற்றை ஓட்டும் போதும் சரி இடது புறத்தில் தான் செல்வோம். ஏன் இப்படி இடது புறத்தில் வாகனங்களை ஒட்டி செல்கிறோம் என்று உங்களுக்கு தெரியுமா..? தெரிந்து கொள்ள நினைத்தால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறவும்..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
சாலையில் இடதுபக்கம் வாகனம் ஓட்ட காரணம் என்ன..?
பொதுவாக நாடு முழுவதும் வாகனங்களை இடது புறத்தில் தான் ஒட்டி செல்கிறார்கள். நாம் சாலையில் சைக்கிள் ஓட்டினால் கூட இடது புறத்தில் தான் செல்வோம். அப்படி இடது புறத்தில் வாகனம் ஓட்ட காரணம் என்ன என்று இங்கு காணலாம்.
சாலையில் இடது புறத்தில் செல்வதற்கு வரலாற்று, கலாச்சார மற்றும் நடைமுறை காரணங்களின் கலவையாக இருக்கிறது. உதாரணத்திற்கு அந்த காலத்தில் குதிரை வண்டியில் மக்கள் பயணிக்கும் போது, சாலையின் இடது பக்கமாக செல்வது தான் வழக்கமாக இருந்தது. இந்த பாரம்பரிய பழக்கத்தில் இருந்து தான் இந்தியாவின் சாலை விதிகள் தோன்றியது என்று கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மோட்டார் வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட போது சாலையில் இடது பக்கம் வாகனங்களை ஓட்டும் வழக்கம் தொடர்ந்தது.
இந்த சின்ன பட்டன் ஏன் கார் கதவுல இருக்குனு உங்களுக்கு தெரியுமா |
ஆனால் பல நாடுகள் சாலையின் வலது புறத்தில் வாகனம் ஓட்ட முடிவெடுத்தனர். இந்த மாற்றம் குறிப்பாக பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த நாடுகளில் ஏற்பட்டது. இருந்தாலும் ஆங்கிலேயர்கள் மட்டும் இடதுபுறத்தில் வாகனம் ஓட்டும் தங்கள் நீண்டகால பாரம்பரியத்தை தொடர்ந்தனர்.
அதுபோல பிரிட்டனுடன் பல ஆண்டு கால வரலாற்று உறவைக் கொண்ட இந்தியாவும் இதே முறையை தான் பின்பற்றி வருகிறது. அதனால் தான் நம் இந்தியாவில் வாகனங்களை இடது புறத்தில் ஒட்டி செல்கின்றோம்.
மேலும் நீண்டகால ஓட்டுநர் வழிமுறைகளை மாற்றுவது மிகவும் கடினம் என்பதால் பல நாடுகள் இந்த முறையை மாற்றாமல் கடைப்பிடித்து வருகின்றனர்.
ஸ்மார்ட் போனில் இந்த ஓட்டை ஏன் இருக்குனு உங்களுக்கு தெரியுமா |
மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம் | Facts |