இறந்தவர்களின் மூக்கில் ஏன் பஞ்சு வைக்கிறார்கள் என்று தெரியுமா..?

why do we put cotton in dead person's nose in tamil

Why Do They Stuff Cotton in Nose After Death in Tamil

வணக்கம் நண்பர்களே. நம் முன்னோர்கள் சில சடங்குகளை கடைபிடித்து வந்தார்கள். அதனையே நாமும் வழக்கம் மாறாமல் கடைப்பிடித்து வருகிறோம். ஆனால் நம் முன்னோர்கள் கடைபிடித்த சில வழக்கங்களை எந்த காரணத்திற்காக செய்கிறோம் என்றே தெரியாமல் இருக்கிறோம். அந்த வகையில் இறந்தவர்களின் மூக்கில் பஞ்சு வைப்பது வாய் கட்டு கட்டுவது போன்ற சடங்குகளை செய்து வந்தார்கள். அதனையே நாமும் பின்பற்றி வருகிறோம். ஆனால் அதற்கான காரணம் என்னவென்று நம்மில் பலபேருக்கு தெரியாது. சரி ஏன் இறந்தவர்களின் மூக்கில் பஞ்சு வைக்கிறார்கள் என்று இப்பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன்..!

 Why Do We Put Cotton in Dead Person’s Nose in Tamil:

இறந்தவர்களின் மூக்கில் பஞ்சு வைப்பதற்கான காரணங்கள்:

 ஒரு மனிதன் இறந்த பிறகு அம்மனிதனின் உடலில் பாக்டீரியாக்கள் அதிகமாக இருக்கின்றன. அதனால் இறந்த மனிதனின்  உடலில் இருந்து சில நுண்ணுயிர்கள் வெளிவரும். வெளிவந்த இந்த நுண்ணுயிர்கள் மற்ற மனிதர்களின் உடம்பிற்குள் புகும். மேலும் சுற்று சூழலையும் மாசுபடுத்தும்.    எனவே இந்த நுண்ணுயிர்கள் மற்ற மனிதர்களையும் பாதிக்காமல் இருப்பதற்காகத்தான் ஒரு மனிதன் இறந்தவுடன் மூக்கில் பஞ்சு வைப்பது, வாயையும் காதையும் சேர்த்து நாடிக்கட்டு கட்டுவது போன்ற முறைகளை செய்கிறார்கள். இதுவே அதற்கான காரணம் ஆகும் 
இறந்தவர்களின் வீட்டிற்கு சென்று வந்தால் ஏன் குளிக்க வேண்டும்..?

 

மேலும் ஒருவர் இறந்த பின் அவர்கள் வீட்டில் விளக்கேற்றி வழிபாடு செய்வார்கள். ஏன் அப்படி செய்கிறார்கள் என்றால், உயிரானது உடலை விட்டு பிரிந்ததும் வெறும் வெற்று உடலாகத்தான் இருக்கும். அந்த உடலில் இருந்து சில வாயுக்கள் வெளியேறும்.

இதனை ஆன்மீகத்தில், இறந்த உயிர் அலைகள் அந்த இடத்தையே சுற்றி வரும். இந்த அலைகள் மற்றவர்களின் உடலில் நுழைந்தால் அவர்களுக்கு ஆபத்து நேரிடும். எனவே இவற்றை தடுக்கத்தான் விளக்கேற்றி வழிப்படுவார்கள். இந்த விளக்கை தெற்கு திசை நோக்கி ஏற்றி வழிபடுவார்கள். ஏனென்றால் இத்திசை தான் மரணத்தின் கடவுளாகிய எமனின் திசையாகும்.

மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்  Facts