வாசலில் கோலம் போடுவதற்கான காரணம் உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

Why Do We Put Kolam in Tamil | கோலம் போடுவது ஏன்.?

இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு சுவாரஸ்யமான தகவலை பற்றி தான் பார்க்க போகிறோம். தினமும் இந்த பதிவின் மூலம் ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இந்த பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நம் முன்னோர்கள் கூறிய ஒவ்வொரு விஷயத்திற்கு பின்னாலும் ஒரு அறிவியல் காரணம் ஒளிந்திருக்கும்.

அதுபோல தான் வீட்டு வாசலில் கோலம் போடுவதற்கு பின்னாலும் ஒரு அறிவியல் காரணம் ஒளிந்திருக்கிறது. அந்த அறிவியல் காரணத்தை தான் நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம். அதனால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்..! வீட்டு வாசலில் ஏன் கோலம் போடுகிறோம் என்று என்றாவது நீங்கள் யோசித்தது உண்டா.? அப்படி நீங்கள் யோசித்து இருந்தால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

கோலம் போடுவதற்கான அறிவியல் காரணம் | Reason for Putting Kolam in Tamil:

கோலம் போடுவதற்கான அறிவியல் காரணம்

அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை நாம் பின்பற்றி வரும் சாஸ்திரங்களில் இதுவும் ஓன்று. நாம் சிறு வயதில் நம் வீட்டில் இருக்கும் பெரியவர்களிடம் ஏன் வாசலில் தினமும் கோலம் போடுகிறோம் என்று கேட்டிருப்போம். அதற்கு அவர்கள் கோலம் போட்டால் தான் கடவுள் வீட்டிற்கு வருவார்கள் என்று கூறுவார்கள். இதற்கு பின்னால் இருக்கும் காரணத்தை பற்றி  பார்ப்போம்.

நம் முன்னோர்கள் அந்த காலத்தில் அரிசி மாவினால் தான் கோலம் போட்டார்கள். காரணம்  அரிசி மாவால் கோலம் போடுவதால் கடவுளால் படைக்கப்பட்ட சிறு பூச்சிகளான எறும்பு போன்ற வாயில்லா ஜீவராசிகள் பசி போக்கிக் கொண்டது.  இப்படி வாயில்லா பூச்சிகளின் பசியை போக்குவதை நம் முன்னோர்கள் புண்ணியமாக நினைத்தார்கள். அதனால் தான் அரிசி மாவால் வாசலில் கோலம் போட்டார்கள்.  

ஆனால் இன்றைய நிலையில் அறிவியலின் வளர்ச்சியால் நம் வாழ்க்கை சூழல் மாறி இன்று கோலம் போடும் கலாச்சாரமும் குறைந்து வருகிறது. இதுவே சாணம் தெளித்து கோலம் போடுவதற்கான அறிவியல் காரணம் ஆகும்.

அமாவாசை அன்று ஏன் வாசலில் கோலம் போடக்கூடாது..? என்று தெரியுமா..?

வாசலில் சாணம் தெளிப்பது ஏன்: 

வாசலில் சாணம் தெளிப்பது ஏன்

கோலம் என்பது வீட்டின் அழகிற்காக மட்டும் போடப்படுவது அல்ல. கோலம் போடுவது பூமிக்கு நாம் செய்யும் மரியாதையாக நம் முன்னோர்கள் கூறுகிறார்கள். 

 அந்த காலத்தில் செருப்பு கிடையாது. அதனால் மக்கள் வெறும் காலில் தான் நடந்து செல்வார்கள். அப்படி அவர்கள் வெறும் காலுடன் வீட்டிற்கு வரும் போது வெளியில் இருக்கும் கிருமிகளும் வீட்டிற்குள் வந்துவிடும். அதற்காக தான் தினமும் காலையில் வீட்டு வாசலில் சாணம் தெளித்தார்கள்.  

சாணத்தில் உள்ள கிருமி நாசினி கிருமிகளை வீட்டிற்குள் நுழைய விடாது. வெறும் காலுடன் வெளியில் சென்று வரும் போது வாசலில் தெளித்து இருக்கும் சாணத்தை மிதித்து வருவதால் காலில் இருக்கும் கிருமிகள் அழிந்துவிடும். 

இதற்காக தான் வாசலில் சாணம் தெளிக்கிறார்கள்.

பூனை குறுக்கே சென்றால் அந்த வழியில் செல்லக்கூடாது என்று சொல்லுவதற்கான உண்மை காரணம் உங்களுக்கு தெரியுமா ..?

 

மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்  Facts
Advertisement