Why Is The Reason For Temple Bell Ring in Tamil
பொதுநலம்.காம் பதிவின் அன்பு நேயர்களுக்கு வணக்கம்..! இந்த பதிவின் மூலம் தினமும் ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அதுபோல இன்று நாம் பார்க்க போகும் பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நம் அனைவருக்குமே கோவிலுக்கு செல்லும் பழக்கம் இருக்கும்.
பெரும்பாலும் இந்து சமய கோவில்களில் மணி கட்டி தொங்க விட்டிருப்பார்கள். கோவிலுக்கு செல்பவர்கள் போகும் முன் அல்லது வெளியே வரும் போது அந்த மணியை அடிப்பார்கள். அதற்கான காரணம் என்ன என்று உங்களுக்கு தெரியுமா..? இந்த பதிவின் மூலம் அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
பெண்கள் புடவை அணிவதற்கான அறிவியல் காரணம் என்ன..? |
கோவிலில் மணி அடிப்பது ஏன்..?
கடவுள் பக்தி இல்லாதவர்கள் கூட கோவிலுக்கு சென்றிருப்பார்கள். நாம் கோவிலுக்கு சென்று கடவுளை வணங்கி வருகின்றோம். நாம் சிறுவயதிலிருந்தே கோவிலுக்கு செல்கிறோம்.
நாம் கோவிலில் ஒரு விஷயத்தை கவனித்திருப்போம். கோவிலில் மணி கட்டி தொங்க விட்டிருப்பார்கள். ஏன் கோவிலில் மணி இருக்கிறது என்று என்றாவது யோசித்திருக்கிறீர்களா..?
ஏன் கோவிலில் மணி இருக்கிறது என்று பெரியவர்களிடம் கேட்டால் அவர்கள் கோவில் மணி அடித்துவிட்டு வணங்கினால், தங்களின் வேண்டுதலை கடவுள் காது கொடுத்து கேட்பார் என்று சொல்வார்கள்.
ஆனால் கோவிலில் இருக்கும் மணிக்கு பின்னால் ஒரு அறிவியல் ரகசியம் மறைந்துள்ளது. அந்த ரகசியத்தை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
இந்த கோவிலில் இருக்கும் மணியானது சாதாரண உலோகத்தால் ஆனது கிடையாது. இது காட்மியம், ஈயம், தாமிரம், துத்தநாகம், நிக்கல், குரோமியம் மற்றும் மாங்கனீஸ் உள்ளிட்ட பல்வேறு உலோகங்களால் ஆன மணி தான் அனைத்து கோவில்களிலும் இருக்கிறது.
கோவிலில் இருக்கும் மணியை அடிக்கும் போது அது கூர்மையான மற்றும் நீடித்த ஒலியை ஏற்படுத்துகிறது. சரியாக சொல்லபோனால் இந்த ஒளியானது 7 வினாடிகள் வரை ஒளியை ஏற்படுத்துகிறது.
இந்த மணியில் இருந்து வரக்கூடிய ஒலியானது உங்கள் உடலில் உள்ள 7 குணப்படுத்தும் மையங்களை தொடுகிறது. இதன் காரணமாக உங்கள் மூளையானது எதை பற்றியும் சிந்திக்காமல் அமைதியான நிலையை அடைகிறது.
அதுமட்டுமில்லாமல் கோவிலில் மணி அடிக்கும் போது அதிலிருந்து வெளிவரும் ஓசையானது மனதில் இருக்கும் எதிர்மறையான எண்ணங்களை போக்குகிறது. மனதிற்கும் உடலுக்கும் நேர்மறையான எண்ணங்களைஅதிகரிக்க செய்கிறது.
கோவிலில் மணி அடிப்பதால் நம் மனது அமைதி பெற்று நேர்மையான எண்ணங்களை சிந்திக்க செய்கிறது. இதனால் தான் கோவிலுக்கு செல்பவர்கள் மணி அடிக்கிறார்கள். இதுவே இதன் பின் இருக்கும் அறிவியல் காரணமாகும்.
உணவு முறைக்கு பின் இருக்கும் அறிவியல் காரணம் என்ன..? |
மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம் | Facts |