இடி இடிக்கும் போது ஏன் “அர்ஜுனா” என்று சொல்கிறோம் காரணம் தெரியுமா..?

Advertisement

Why Do We Say Arjuna When Thunder Occurs in Tamil

அன்பு நெஞ்சம் கொண்ட நேயர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பற்றி தான் பார்க்க போகிறோம். மழை என்றால் நம் அனைவருக்குமே பிடிக்கும். அதுவே மழையுடன் இடி வந்தால் எப்படி இருக்கும்.

இடி இடிக்கும் போது நம் வீட்டில் இருக்கும் குழந்தைகள் பயப்படுவார்கள். மழை பெய்து கொண்டிருக்கும் போது திடீரென்று இடி இடிக்கும். அதை கேட்கும் போது நமக்கே பயம் வரும். அந்த நேரத்தில் நாம் அர்ஜுனா” என்று சொல்வோம். ஏன் அப்படி சொல்கிறோம் என்று உங்களுக்கு தெரியுமா..? அர்ஜுனா என்று சொல்வதற்கான காரணத்தை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

இதையும் படித்து தெரிந்து கொள்ளுங்கள் 👉 மழைப் பெய்யும் போது மண்வாசம் வர காரணம் என்ன..?

இடி இடிக்கும் போது அர்ஜுனா என்று சொல்ல காரணம் என்ன..? 

இடி இடிக்கும் போது அர்ஜுனா என்று சொல்ல காரணம் என்ன

மழைப் பெய்யும் போது இடியும் மின்னலும் சேர்ந்து வந்தால் எப்படி இருக்கும். பெரியவர்களான நமக்கே ஒரு விதமான பயம் நமக்குள் தோன்றும். அந்த நேரத்தில் நாம்அர்ஜுனா அர்ஜுனா என்று சொல்வோம்.

நம் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் இடி இடிக்கும் போது அர்ஜுனா அர்ஜுனா என்று சொல்ல சொல்வார்கள். ஏன் என்று அவர்களிடம் கேட்டால் அதற்கு அவர்கள் இடி இடிக்கும் போது அர்ஜுனா என்று சொன்னால் இடி இடிக்காது என்று சொல்வார்கள்.

அதுமட்டுமில்லாமல், அர்ஜுனன் என்ற கிருஷ்ண பக்தனின் பெயரை சொன்னால் இடி இடிக்கும் சத்தம் காதில் கேட்காது என்று சொல்வார்கள்.

ஆனால் அர்ஜுனா என்று சொல்வதற்கு பின்னால் ஒரு அறிவியல் காரணம் இருக்கிறது. அதை பற்றி பார்ப்போம்.

 இடி இடிக்கும் போது வரும் சத்தத்தால் நம் காதுகள் அடைத்து காதில் இருந்து ஒரு விதமான சத்தம் வரும். அந்த நேரத்தில் நாம் அர்ஜுனா என்று சொல்லும் போது நம் காதுகள் அடைக்காது.  

காரணம், “அர்” என்று சொல்லும் போது நம் நாக்கு மடிந்து மேல் தாடையை தொடுகிறது. அதுபோல “ஜு” என்று சொல்லும் நம் வாய் குவிந்து காற்று வெளியேறுகிறது. “னா” என்று சொல்லும் போது நம் வாய் முழுமையாகத் திறந்து காற்று வெளியேறுகிறது. இதுபோல காற்று வெளியேறுவதால் காதுகள் அடைக்காது.  

அதனால் தான் நம் முன்னோர்கள் இடி இடிக்கும் போதுஅர்ஜுனா அர்ஜுனா என்ற வார்த்தையை சொன்னார்கள். இது தான் அர்ஜுனா என்று சொல்வதற்கான அறிவியல் காரணம்..!

இதையும் படித்து தெரிந்து கொள்ளுங்கள் 👉 கடல் நீர் ஏன் உப்பாக இருக்கிறது என்ற காரணம் உங்களுக்கு தெரியுமா..?

மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்  Facts
Advertisement