கோவிலுக்குள் செருப்பு போட கூடாது என்று சொல்ல காரணம் என்ன..?

why do you remove shoes before entering a temple in tamil

கோவிலுக்குள் செருப்பு போட கூடாது ஏன் 

அன்பு நெஞ்சம் கொண்ட நேயர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பற்றி தான் பார்க்க போகிறோம். நாம் அனைவருமே சிறு வயதில் இருந்தே கோவிலுக்கு செல்வோம். விவரம் தெரிந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கோவிலுக்கு செல்லும் போது, காலில் போட்டிருக்கும் செருப்பை வெளியிலேயே கழட்டி விடுவார்கள். அது நம் அனைவருக்குமே தெரியும். ஆனால் ஏன் அப்படி செருப்பை வெளியில் கழட்டி விட்டு கோவிலுக்குள் செல்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா..? அதற்கான காரணத்தை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

கோவிலில் பெண்கள் ஏன் குருக்களாக இல்லை..? அறிவியல் காரணம் உங்களுக்கு தெரியுமா..?

ஏன் கோவிலுக்குள் செருப்பு போட கூடாது..? 

நாம் சிறுவயதில் இருந்து கோவிலுக்கு செல்லும் போது, பெரியவர்கள் செருப்பை வெளியில் கழட்டி விட்டு வாருங்கள் என்று சொல்வார்கள். அதை நாம் கேட்டிருப்போம்.

இந்த பழக்கம் பெரியவர்களுக்கு மட்டும் இல்லை. விவரம் தெரியாத குழந்தைகள் கூட செருப்பை வெளியில் கழட்டி விட்டு தான் உள்ளே செல்லும். அதை நாம் பார்த்திருப்போம்.

ஏன் கோவிலுக்கு செல்லும் போது செருப்பை வெளியில் கழட்டி போட வேண்டும் என்று பலருக்கும் பல கேள்விகள் இருக்கும். அந்த கேள்விக்கான பதிலை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

நாம் நினைத்து கொண்டிருப்போம் கடவுளுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்ற காரணத்திற்காக தான் செருப்பை வெளியில் விடுகிறோம் என்று. சிலர் தெருவில் நடந்து வந்த செருப்பை கோவிலுக்குள் போட கூடாது என்று சொல்வார்கள். ஆனால் இது உண்மை இல்லை. இதற்கு பின்னால் ஒரு அறிவியல் காரணம் ஒளிந்திருக்கிறது. அதை பார்க்கலாம்.

இதையும் பாருங்கள் –> கோவிலில் மணி அடிப்பதற்கு பின் இருக்கும் ரகசியம் உங்களுக்கு தெரியுமா..?

 இந்து சமயத்தில் இருக்கும் கோவில்கள் அனைத்தும் செங்கற்கள், கல் தரை மற்றும் காரை போன்ற கற்களால் கட்டப்பட்டவை. இந்த கோவில்கள் அனைத்தும் காந்த அலைகளை கொண்ட கற்களால் கட்டப்பட்டவை என்று சொல்லலாம். இந்த கற்கள் அனைத்தும் நேர்மறையான எண்ணங்களை ஊக்குவிக்கும் பண்புகளை கொண்டுள்ளன.   

அதுபோல நம் உடலில் நூற்றுக்கணக்கான நரம்புகள் இருக்கின்றன. நம் உடலில் இருக்கும் அனைத்து நரம்புகளும் ஓன்று சேரும் இடம் தான் பாதம்.

அந்த வகையில்  கோவிலுக்கு வரும் பக்தர்கள் வெறும் காலில் நடந்து வரும் போது அந்த கற்களில் இருக்கும் ஆற்றலானது நமது பாதத்தின் வழியாக உடலுக்குள் செல்கிறது. இதனால் நம் உடல் நேர்மறையான எண்ணங்களை தோற்றுவிக்கிறது.  

இதன் காரணமாக உடலில் இரத்த ஓட்டம் சீராக செயல்படுகிறது. அதிகமான பசி உணர்வு ஏற்படுகிறது. இதனால் தான் நம் முன்னோர்கள் கோவிலுக்குள் செருப்பு இல்லாமல் செல்ல வேண்டும் என்று கூறினார்கள்.

கோவிலில் சாமி வந்தது போல் ஆடுவதற்கான அறிவியல் காரணம் என்ன தெரியுமா ?
கோவிலில் ஏன் தேங்காய் உடைக்கிறார்கள் காரணம் தெரியுமா..?

 

மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம் Facts