வரிக்குதிரைக்கு உடம்பில் ஏன் கோடுகள் இருக்குனு தெரியுமா..?

Zebras Have Stripes On Their Bodies 

நண்பர்களே இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சுவாரஸ்யமான தகவலை தான் காண இருக்கின்றோம். நாம் அனைவருமே ஏதாவது ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்போம். அப்படி நினைக்கும் உங்களுக்கு எங்கள் பொதுநலம்.காம் பதிவு பயனுள்ள பதிவாக இருக்கும். அப்படி என்ன தகவலாக இருக்கும் என்று யோசிப்பீர்கள். நாம் இன்று வரிக்குதிரையின் உடம்பில் ஏன் வரி வரியான கோடுகள் இருக்கின்றன. அதற்கு காரணம் என்ன என்பதை பற்றி தான் காணப்போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்..!

குதிரை பற்றிய சுவாரசியமான தகவல்கள் 

வரிக்குதிரையின் உடம்பில் ஏன் கோடுகள் இருக்கிறது..? 

வரிக்குதிரை பற்றிய தகவல்கள்

பொதுவாக நாம் அனைவருமே வரிக்குதிரை கருப்பு நிற கோடுகள் கொண்ட வெள்ளை விலங்கு என்று நினைக்கின்றோம். ஆனால் வரிக்குதிரைகள் வெள்ளை நிற கோடுகள் கொண்ட கருப்பு நிற விலங்கு ஆகும்.

அதாவது வரிக்குதிரைகளின் நிறம் கருப்பு என்றும் அதன் மேல் வெள்ளை கோடுகள் உள்ளன என்றும் கூறப்படுகிறது.

பொதுவாக வரிக்குதிரை காடுகளில் இருந்தாலும் சரி மிருகக்காட்சி சாலையில் இருந்தாலும் சரி அவை தனித்து நிற்கும் ஒரு விலங்கு ஆகும். அவை எப்பொழுதுமே நமக்கு தனியாகவே தெரிகின்றன.

இதையும் படித்துப்பாருங்கள்=> அணில் பற்றிய சுவாரசியமான 10 உண்மைகள்

வரிக்குதிரையின் உடம்பில் ஏன் கோடுகள் இருக்கிறது

சரி வரிக்குதிரையின் உடம்பில் இருக்கும் கோடுகள் தான் வேட்டையாடும் விலங்குகளிடம் இருந்து வரிக்குதிரைகளை காப்பாற்றுகிறது என்று சொன்னால் உங்களால் நம்பமுடிகிறதா..? ஆனால் அதுதான் உண்மை.

 வரிக்குதிரையின் உடம்பில் இருக்கும் கோடுகள் அவற்றின் வெப்பநிலையை நிர்வகிக்க உதவுகிறது. அதுபோல வரிக்குதிரைகள் ஒன்றையொன்று அடையாளம் காண அதன் உடம்பில் இருக்கும் கோடுகள் உதவுகின்றன. அதுபோல வரிக்குதிரைகள் கூட்டமாக ஓடும்போது வேட்டையாட வரும் விலங்குகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமில்லாமல் அதிக வரிக்குதிரைகள் ஒன்றாக நகரும் போது, ​​அவற்றின் கோடுகள் ஒரு பெரிய விலங்கு ஓடுவது போல் தோன்றும். அதனால் வேட்டையாட வரும் விலங்குகள் பயந்து ஓடிவிடுகின்றன. மேலும் வரிக்குதிரையை ஈக்கள் கடிக்காமல் இருக்க அதன் உடம்பில் இருக்கும் கோடுகள் உதவுகின்றன என்று சொல்லப்படுகிறது. 

இதன் காரணமாக தான் வரிக்குதிரையின் உடம்பில் கோடுகள் இருக்கின்றன என்று  சொல்லப்படுகிறது.

“புலி பசித்தாலும் புல்லை தின்னாது” என்று சொல்ல காரணம் என்ன உங்களுக்கு தெரியுமா

 

மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்  Facts