சூரியன் ஏன் மஞ்சள் நிறத்தில் தெரிகிறது என்று உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

Why Does The Sun Appear Yellow

வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவு அனைவருக்கும் சுவாரஸ்யமானதாக இருக்கும். அனைவருமே புதிது புதிதாக ஏதாவது பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பீர்கள். அதனால் உங்களுக்கு உதவும் வகையில் தினமும் எங்கள் Pothunalam.Com பதிவில் பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்று சூரியன் ஏன் மஞ்சள் நிறத்தில் இருக்கின்றது என்று உங்களுக்கு தெரியுமா..? தெரியவில்லை என்றால் அதற்கான பதிலை இந்த பதிவின் வாயிலாக படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..!

மழைப் பெய்யும் போது மண்வாசம் வர காரணம் என்ன..?

சூரியன் ஏன் மஞ்சள் நிறத்தில் இருக்கிறது தெரியுமா..?

இந்த உலகில் வாழும் அனைத்து மனிதர்களிடமும் சூரியன் என்ன நிறம் என்று கேட்டால் அவர்களின் பதில் மஞ்சள் நிறம் என்று சொல்வார்கள். இவ்வளவு ஏன் நீங்களும் சரி நானும் சரி சூரியன் மஞ்சள் நிறம் என்று தான் சொல்வோம். ஆனால் உண்மை என்னவென்றால் சூரியன் மஞ்சள் நிறமே கிடையாது. இந்த உங்களுக்கு தெரியுமா..?

உண்மையாகவே சூரியன் மஞ்சள் நிறம் கிடையாது. சூரியன் வெள்ளை நிறத்தை தான் பிரதிபலிக்கிறது. நீங்கள் சர்வதேச விண்வெளி நிலையம் அல்லது சந்திரனில் இருந்து சூரியனை பார்த்தால் அது வெள்ளை நிறத்தில் தான் இருக்கும்.

இப்பொழுது நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று தெரிகிறது. மஞ்சள் நிறம் இல்லை என்று சொல்கிறீர்கள் ஆனால் ஏன் சூரியன் மஞ்சள் நிறத்தில் தெரிகிறது என்று கேட்பீர்கள்.

இதையும் படித்து தெரிந்து கொள்ளுங்கள் 👉 கடல் நீர் ஏன் உப்பாக இருக்கிறது என்ற காரணம் உங்களுக்கு தெரியுமா..?

சூரியனின் நிறமாலையில் உள்ள ஒவ்வொரு நிறமும் வெவ்வேறு அலைநீளத்தைக் கொண்டுள்ளது. உதாரணமாக சூரியன் சிவப்பு நிறத்தில் இருந்தால் அது நீளமான அலைநீளத்தைக் கொண்டிருக்கும்.

அதுபோல சூரிய ஒளிக்கற்றையில் உள்ள நிறங்களின் அலைநீளம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, சிவப்பிலிருந்து இளஞ்சிவப்பாகவும், பின் மஞ்சள் நிறத்திலிருந்து பச்சை நிறமாகவும், நீலம், கருநீலம், ஊதா என்று குறைந்த அலைநீளத்திற்கு வருகிறது.

 இப்படி வரும் போதும் பூமியின் வளிமண்டலம் சிவப்பு ஒளியை விட நீல ஒளியை மிகவும் திறமையாக சிதறடிக்கிறது. நீல ஒளியின் இந்த சிறிய பற்றாக்குறை சூரியனின் நிறத்தை மஞ்சள் நிறமாக மாற்றி நம் கண்களுக்கு மஞ்சள் நிறமாக தெரிகிறது.  
இலைகள் ஏன் பச்சை நிறத்தில் இருக்கிறது காரணம் என்ன..?

 

மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்  Facts
Advertisement