இறந்தவர்களின் வீட்டிற்கு சென்று வந்தால் ஏன் குளிக்க வேண்டும்..?

Why Do We Take Bath After Death in Tamil

Why Do We Take Bath After Death in Tamil

இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு தகவலை பற்றி தான் பார்க்க போகிறோம். தினமும் இந்த பதிவின் மூலம் ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இந்த பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஏன் இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிக்கிறார்கள். இந்த கேள்வி அனைவருக்கும் இருக்கும். அந்த வகையில் இந்த கேள்விக்கான பதிலை இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

கோவிலில் இருந்து வீட்டிற்கு வந்ததும் ஏன் குளிக்க கூடாது என்று சொல்கிறார்கள்..?

இறந்தவர்களின் வீட்டிற்கு சென்று வந்தால் குளிக்க வேண்டுமா..? 

இறந்தவர்களின் வீட்டிற்கு சென்று வந்தால் குளிக்க வேண்டுமா

நம் முன்னோர்கள் பல விஷயங்களை ஆன்மீகத்தின் அடிப்படையில் நமக்கு கூறியிருக்கிறார்கள். அப்படி அவர்கள் சொன்ன அனைத்து விஷயத்திற்கு பின்னாலும் ஒரு அறிவியல் காரணம் ஒளிந்திருக்கிறது. அப்படி நம் முன்னோர்கள் அறிவியலை மறைத்து கூறிய விஷயத்தில் இதுவும் ஓன்று.

பெரும்பாலும் இந்து மதத்தில் இறந்தவர்களின் வீட்டிற்கு சென்று வந்தால் குளிக்க வேண்டும் என்று சொல்வார்கள். இந்த வழக்கத்தை அந்த காலத்தில் இருந்து இன்று வரை கடைப்பிடித்து வருகிறார்கள்.

ஏன் அப்படி செய்கிறார்கள் என்று பலருக்கும் பல கேள்விகள் இருக்கும். ஏன் என்று பெரியவர்களிடம் காரணம் கேட்டால் அதற்கு அவர்கள் நம் தெய்வதிற்கு ஆகாது. குளிக்கவில்லை என்றால் இறந்தவர் நம் வீட்டிற்கு வந்து விடுவார் என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால் இந்த விஷயத்திற்கு பின்னாலும் ஒரு அறிவியல் காரணம் ஒளிந்திருக்கிறது.

 ஒருவர் இறந்த பிறகு இறந்தவரின் சடலத்திலிருந்து கண்ணுக்கு தெரியாத ஏராளமான விஷகிருமிகள் மற்றும் விஷஅணுக்கள் வெளியேறும். அதாவது, இறந்தவர் உடம்பில் பாக்டீரியாக்கள் அதிக அளவு இருக்கும்.  
ஏன் இரவு நேரத்தில் வீட்டை பெருக்க கூடாது என்று சொல்கிறார்கள் காரணம் தெரியுமா..?

 

நாம் சடலத்தை தொடவோ அல்லது நெருங்கவோ செய்யும் போது இந்த விஷ பாக்டீரியாக்கள் நமது உடலிலும் உடையிலும் ஒட்டிக்கொள்ளும்.  அந்த நேரத்தில் நாம் குளிக்கவில்லை என்றால் அந்த கிருமிகள் நம் உடம்பிலும் அல்லது நம் வீட்டில் இருக்கும் குழந்தைகளின் உடம்பிலும் பரவ வாய்ப்பு இருக்கிறது.  

அதனால் தான் சாவு வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.

அதுமட்டுமில்லாமல்,  இறந்தவர் நம்முடைய நெருங்கிய உறவாக இருந்தால் அவரின் நிரந்தர பிரிவு நம் மனதை வாட்டிவிடும். அப்படி நம் மனம் வாடும் போது உடலும் சோர்ந்து போய்விடும். அந்த நேரத்தில் நாம் குளிர்ச்சியான நீரை கொண்டு குளிக்கும் போது நம் உடலுக்கு தைரியமும் புத்துணர்ச்சியும் கிடைக்கும்.  

இதனால் தான் நம் முன்னோர்கள் இறந்தவர்களின் வீட்டிற்கு சென்று வந்தால் குளிக்க வேண்டும் என்று சொன்னார்கள்.

கெட்ட சகுனங்களுக்கு பின் இருக்கும் அறிவியல் காரணம் உங்களுக்கு தெரியுமா..?

 

மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்  Facts