பால் ஏன் வெள்ளையாக உள்ளது தெரியுமா..? | Why is Milk White in Colour in Tamil

Advertisement

பால் ஏன் வெள்ளையாக உள்ளது

தினமும் நம்முடைய அத்தியாவசியத்திற்காக தேவைப்படும் பொருள்களில் பாலும் ஒன்று. அத்தகைய பாலினை நாம் தினமும் ஏதோ ஒரு வகையில் சாப்பிட்டோ அல்லது குடித்துக்கொண்டு இருக்கின்றோம். இத்தகைய பால் ஏன் ஒரே நிறத்தில் மட்டும் உள்ளது என்பது நிறைய நபர்களுடைய ஒரு சிந்தனையாக இருக்கும். ஏனென்றால் ஆடை, மற்ற பொருட்கள் ஏன் உணவு கூட வெவ்வேறு நிறங்களில் உள்ளது. ஆனால் பால் மட்டும் ஒரே நிறத்தில் இருக்கிறது. அதற்கான காரணம் அப்படி என்னவாக தான் இருக்கும் என்று நீங்கள் அதிகமாக யோசிக்க வேண்டும். உங்களுடைய யோசனைக்கு எற்ற மாதிரியான ஒரு பதிலை இன்றைய பதிவின் மூலம் தெரிந்துக்கொள்ள போகிறோம். ஆகையால் பால் ஏன் வெள்ளை நிறத்தில் மட்டும் உள்ளது என்பதற்கான காரணத்தை பதிவை தொடர்ந்து படித்து தெரிந்துக்கொள்ளலாம்.

இலைகள் ஏன் பச்சை நிறத்தில் இருக்கிறது காரணம் என்ன..

Why is Milk White in Colour:

அதிக அளவு கால்சியம் நிறைந்த ஒரு பொருள் என்றால் அது பால் தான். இந்த பாலில் கால்சியம் சத்து மட்டும் இல்லாமல் வைட்டமின் A, வைட்டமின் B1, வைட்டமின் B12, வைட்டமின் D, பொட்டாசியம், புரதம் மற்றும் மெக்னீசியம் போன்ற பல சத்துக்கள் உள்ளது.

இத்தகைய பாலில் உள்ள ஒவ்வொரு சத்துக்களும் நமது உடலில் ஏதோ ஒரு வகையான நன்மையினை கொடுக்கிறது. என்ன தான் பாலில் நிறைய சத்துக்களும் இருந்தாலும் கூட பால் ஒரே ஒரு நிறமான வெள்ளை நிறத்தில் மட்டும் ஏன் உள்ளது காரணம் தெரியுமா..?

 பால் 13% திடப்பொருளாலும், 87% நீராலும் ஆனது. இந்த பாலில் கேசீன் என்ற புரதம் அதிகமாக உள்ளது. இத்தகைய புரதமானது வெள்ளை நிறத்தில் இருப்பதனாலும் மற்றும் பாலில் கொழுப்பு அதிகாமாக இருப்பதாலும் பால் வெள்ளை நிறத்தில் மட்டுமே இருக்கிறது. ஏனென்றால் இவை இரண்டும் பாலின் நிறத்தினை உறிஞ்சுவிடுகிறது.  

இதுவே பால் வெள்ளை நிறத்தில் இருப்பதற்கான காரணம் ஆகும். மேலும் இந்த பாலானது வயிற்று புண், வாய் புண், எலும்புகளை வலுபெற செய்யவும் மற்றும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்க செய்தல் என எண்ணற்ற நன்மைகளை தருகிறது.

இதையும் படியுங்கள்⇒ சூரியன் ஏன் மஞ்சள் நிறத்தில் தெரிகிறது என்று உங்களுக்கு தெரியுமா..

மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்  Facts
Advertisement