திருமணத்தின் போது முகூர்த்த கால் நடுவது ஏன் என்று தெரியுமா..? இதுதான் காரணம்.!

Advertisement

முகூர்த்தக்கால் நடுவது ஏன்..? | Why is Mukurthakal Planted During Marriage in Tamil

இந்து மதங்களில் ஒருவருக்கு திருமணம் ஆக போகிறது என்றால் திருமணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பே வீட்டில் முகூர்த்த கால் நடுவார்கள். இது எதற்காக நடுகிறார்கள் என்று பல பேருக்கு தெரியாது..? இந்த முகூர்த்த கால் நடும் வழக்கத்தை நம் முன்னோர்களிடம் இருந்து நாமும் பின்பற்றி வருகிறோம். இந்த பந்தக்கால் அல்லது முகூர்த்த கால் ஏன் நடுகிறார்கள்..? அவற்றை நட்டால் என்ன பயன்..? போன்ற கேள்விகளுக்கான பதில்களை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

முகூர்த்தக்கால் நடும் முறை எப்படி வந்தது..?

பந்தக்கால் நடுதல்

முற்காலத்தில் எல்லாம் திருமணம் ஆக போகிறது என்றால் அந்நாட்டின் அரசனுக்கு மரியாதையை செய்யும் வகையில் திருமண அழைப்பிதழை அரசனுக்கு அனுப்பி வைப்பார்கள். ஆனால் அரசனால் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் வர இயலாது. அதற்காக அவர் தனது ஆணைக்கோலை அனுப்பி வைப்பார்.  அரசனிடம் இருந்து அந்த ஆணைக்கோல் வந்து விட்டால் அத்திருமணம் அரசனால் அங்கீகரிக்கப்ட்டது என்று அர்த்தம். அதாவது அத்திருமணம் அங்கீகரிக்கபட்டது என்று அர்த்தம். இந்த வழக்கம் நம் முன்னோர்களிடம் இருந்து தொன்று தொட்டு இப்பொழுது பந்தக்கால் நடும் முறையாக வளர்ந்து வந்துள்ளது. 

ஆயிரம் பொய் சொல்லி கூட ஒரு கல்யாணம் பண்ணலாம் என்று கூறுவதற்கான அர்த்தம் என்ன .?

முகூர்த்தக்கால் நடுவது ஏன்..?

திருமணத்திற்கு முன்னதாகவே வீட்டில் முகூர்த்த கால் நட்டு மாவிலையால் தோரணம் கட்டுவது மரபு.

பந்தக்கால் நடுவதற்கு மூங்கில் மரம் அல்லது சவுக்கு மரம் போன்றவற்றை வெட்டி சுத்தம் செய்து அதில் மஞ்சள், குங்குமம் பூசி பூக்களால் அலங்கரித்து வடகிழக்கு மூலையில் நடுவார்கள்.

முகூர்த்த கால்

 இந்த வடகிழக்கு மூலையை ஈசான்ய மூலை என்றும் கூறுவார்கள். இத்திசை சிவாம்சம் உடைய தேவனுக்குரிய திசையாக இருப்பதால், நடக்கப்போகும் திருமணம் இறைவனின் ஆசியோடு நடைபெற்று மணமக்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதை குறிப்பதற்கே முகூர்த்த கால் நடப்படுகிறது. 

கீழ் நோக்கு நாளில் திருமணம் செய்யலாமா..?

மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்  Facts
Advertisement