கோவில் சுவர்களில் வெள்ளை சிவப்பு நிறம் மட்டும் அடிப்பதற்கான காரணம்

Advertisement

கோவில் சுவர்

மன அமைதிக்காக அனைவருமே கோவிலுக்கு செல்லுவோம். அப்படி நீங்கள் கோவிலுக்கு செல்லும் போது கவனித்திருப்பீர்கள் கோவில்களின் சுவற்றில் வெள்ளை சிவப்பு நிற பெயின்ட மட்டும் அடித்திருப்பார்கள். இதை பலரும் பார்த்து என் இந்த கலரை மட்டும் அடித்திருக்கிறார்கள் என்று யோசித்திருப்பீர்கள். நம் முன்னோர்கள் உருவாக்கிய ஒவ்வொன்றிற்கும் பின்னால் ஒரு அறிவியல் காரணம் ஓளிந்திருக்கிறது. அதே போல் கோவில்களின் சுவற்றில் வெள்ளை சிவப்பு நிறம் அடிப்பதற்கான காரணத்தை தெரிந்து கொள்வோம் வாங்க..

கோவில் சுவற்றில் வெள்ளை சிவப்பு நிறம் அடிப்பதற்கு காரணம்:

why are temple walls painted red and white in tamil

 நம் உடலில் இரண்டு வகையான அணுக்கள் உள்ளது, ஒன்று  வெள்ளை அணுக்கள் மற்றொன்று சிவப்பு அணுக்கள்.  நம் உடலில் சிவப்பு அணுக்கள் ஆக்சிஜனை எல்லா உறுப்புகளுக்கும் கொண்டும் செல்லும் பணியை  செய்கின்றது. வெள்ளை அணுக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது. இந்த இரண்டு அணுக்களும் நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இவை இரண்டையும் வைத்து தான் கோவில்களின் சுவற்றில் வெள்ளை சிவப்பு நிறம் அடிக்கப்படுகிறது .

கோவில் சிலைகளுக்கு அபிஷேகம் செய்வதற்கான அறிவியல் காரணம் இது தானா..!

ஆண்களின் விந்து வெள்ளை நிறமாகவும், பெண்களின் கருப்பை சிவப்பு நிறமாகவும் இருக்குமாம். இவை இரண்டும் சேர்ந்து தான் உயிர்  உருவாகிறது. கடவுளின் ஆன்மா மூல ஸ்தானத்தில் உள்ளது அதனால் தான் அதை கருவறை என்று கூறுகிறோம். இதனால் தான் கோவில்களின் சுவற்றில் வெள்ளை சிவப்பு நிறத்தை அடிக்கிறார்கள். மேலும் தூய்மையும், தியாகமும் மட்டுமே நம் வாழ்க்கையின் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. சுவர்களில் உள்ள வண்ணங்கள் நம் வாழ்க்கையை உணர்த்துகின்றன.

கோவில் வாசற்படியை ஏன் தொட்டு கும்பிடுகிறோம்:

இன்னொன்று கோவிலுக்கு உள்ளே செல்லும் போது வாசற்படியை தொட்டு கும்பிடுவதற்கு பின்னாலும் அறிவியல் காரணம் ஒளிந்திருக்கிறது உங்களுக்கு தெரியுமா.!

கோவில் வாசல்படியை குனிந்து தொடும் பொழுது நமக்கு பணிவை உண்டாக்குகிறது. பிறகு உடம்பில் உள்ள சூரிய நாடியை இயக்குகிறது. படிக்கட்டை தொட்ட பிறகு, நம் நெற்றியில் விரல்களை வைத்து அழுத்த வேண்டும். அப்போது நம்மிடம் மறைந்துள்ள தீய எண்ணங்கள்  விலகி தெய்வ சந்நிதியில் இருந்து சில அதிர்வலைகளை நம்மிடம் உண்டாகும்.

கோவிலில் இருந்து வீட்டிற்கு வந்ததும் ஏன் குளிக்க கூடாது என்று சொல்கிறார்கள்..?

மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்  Facts

 

Advertisement