திருமணத்தின் போது ஏன் கெட்டிமேளம் வாசிக்கிறார்கள் என்று தெரியுமா..?

Why Ketti Melam is Played During Marriage in Tamil

Why Ketti Melam is Played During Marriage in Tamil

இன்றைய பதிவில் மிகவும் சுவாரசியமான தகவலை அறிந்து கொள்ள இருக்கின்றோம். அப்படி என்ன தகவல் என்று நீங்கள் சிந்தனை செய்வது புரிகின்றது. பொதுவாக திருமணத்தின் போது மங்கள இசை இசைப்பதை நாம் அனைவருமே கண்டும் கேட்டும் இருந்திருப்போம். ஆனால் இதன் பின்னணியில் உள்ள உண்மையான அர்த்தம் என்ன என்பதை பற்றி என்றாவது சிந்தனை செய்திருக்கிறீர்களா..?

அப்படி சிந்தனை செய்தவர்களுக்கு தான் இன்றைய பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் திருமணத்தின் போது ஏன் மங்கள இசை இசைக்கப்படுகிறது. அதன் பின்னணியில் உள்ள உண்மையான அர்த்தம் என்ன என்பதை பற்றி அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> திருமணத்தின் போது அட்சதை தூவி மணமக்களை வாழ்த்துவது ஏன்

திருமணத்தின் போது ஏன் மங்கள இசை வாசிக்கப்படுகிறது:

Why Ketti Melam is Played During Marriage in Tamil

நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொரு  மங்கள நிகழ்ச்சியின் போது மேளத்துடன் நாதஸ்வரமும் இசைக்கப்படுவது வழக்கம். அதிலும் குறிப்பாக மணவிழாவின் போது இது கட்டாயம் வாசிக்கப்படும். இசை கருவிகளிலேயே மேளமும் நாதஸ்வரமும் தான் மிக இனிமையாகவும், அதிக ஓசை உடையதாகவும் இருக்கும்.

திருமண விழாவின் போது உற்றார், உறவினர் என்று பலர் கூடுவார்கள். அவர்கள் அந்த இடத்தில் தான் ஒருவருக்கு ஒருவர் நலம் விசாரிப்பார்கள். அப்போது நல்ல விசயங்களும், கெட்ட விசயங்களும் பேசும் சூழ்நிலை ஏற்படும்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> திருமண மோதிரத்தை இடது கையில் அணிவதன் ரகசியம் தெரியுமா..?

 ஒரு நல்ல காரியம் நடை பெறும் போது மற்றவர்கள் பேசும் கெட்ட வார்த்தைகள் மணமக்களின் காதில் விழுவது அபசகுணமாகவும், அந்த வார்த்தைகள் மனதிற்கு சங்கடத்தையும் ஏற்படுத்தும். அதனால் தான் நம் முன்னோர்கள் மங்கள இசை இசைப்பதை வழக்கமாக கொண்டனர். 

ஏன் என்றால் மங்கள இசையின் ஒலியில் மற்றவர்கள் பேசும் சத்தம் ஏதும்  கேட்காது, அத்துடன் தாலி கட்டும் போது கெட்டி மேளம் கொட்டுவதும் இதன் அடிப்படையில் வந்த வழக்கம் தான்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> எத்தனை பொருத்தம் இருந்தால் திருமணம் செய்யலாம்?

மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்  Facts