இலைகள் ஏன் பச்சை நிறத்தில் இருக்கிறது காரணம் உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

Why Leaf Is Green Colour in Tamil

அன்பு நெஞ்சம் கொண்ட நேயர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு பயனுள்ள தகவல் ஒன்றை பற்றி தான் பார்க்க போகிறோம். நாம் வாழும் பூமியில் இயற்கையால் கொடுக்கப்பட்ட ஆச்சர்யமான விஷயங்கள் அதிகமாகவே உள்ளன. நாம் சிறுவயதிலிருந்தே இலைகள் பச்சை நிறத்தில் இருப்பதை பார்த்திருப்போம். இலைகள் ஏன் பச்சை நிறத்தில் இருக்கிறது என்ற கேள்விகள் நம் அனைவரிடத்திலும் இருக்கும். அதற்கு என்ன காரணம் என்று என்றாவது யோசித்திருப்போமா..? அதற்கான பதிலை எங்கள் பொதுநலம்.காம் பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

இதையும் படித்து தெரிந்து கொள்ளுங்கள் 👉 கடல் நீர் ஏன் உப்பாக இருக்கிறது என்ற காரணம் உங்களுக்கு தெரியுமா..?

இலைகள் ஏன் பச்சை நிறத்தில் உள்ளன:

இலைகள் ஏன் பச்சை நிறத்தில் உள்ளன

நாம் வாழும் பூமியில் இருக்கும் மரம், செடி, கொடிகள் எல்லாம் பச்சை நிறத்தில் இருக்கின்றன. அதை நாம் பார்த்திருப்போம். ஏன் இலைகள் பச்சை நிறத்தில் இருக்கின்றன. அதற்கான காரணத்தை பற்றி பார்ப்போம் வாங்க.

ஒரு செடி உருவாவதற்கு முக்கிய காரணமாக இருப்பது வேர்கள் தான். இது செடிக்கு தேவையான ஆற்றலை பூமியில் இருந்து பெற்று கொடுக்கிறது.

ஒரு செடி அல்லது மரம் வளர தேவையான உணவை அந்த செடியில் இருக்கும் வேர், இலை, தண்டு மற்றும் பூக்கள் போன்ற பாகங்களே தயாரித்து கொள்கின்றன. இப்படி செடியில் இருக்கும் பாகங்களே தனக்கு தேவையான உணவை தானே தயாரிக்கும் முறையை தான் PHOTOSYNTHESIS என்று கூறுகிறோம்.

இதுபோல அவை உணவு தயாரிக்கும் போது வெளிவரும் கழிவுகள் தான் ஆக்ஸிஜனாக மாறுகிறது. அந்த ஆக்ஸிஜனை தான் நாம் சுவாசிக்கிறோம்.

அதேபோல நிறங்கள் உருவாக முக்கிய காரணமாக இருப்பது சூரிய ஒளி தான். இந்த ஒளியில் இருந்து வரும் நிறங்கள் சிவப்பு, பச்சை மற்றும் நீலம் என 3 வகைகளாக பிரிக்கப்படுகின்றன.

இந்த நிறங்கள் தான் மழைக் காலங்களில் வானவில்லாக தெரிகிறது. இதுபோல தான் சூரியனிடம் இருந்து ஒளியை பெற்று ஒவ்வொரு பொருளும் அதற்கேற்றவாறு நிறத்தை பிரதிபலிக்கின்றன.

இலைகள் பச்சை நிறமாக இருப்பதற்கு முக்கிய காரணம் இலைகளில் இருக்கூடிய குளோரோஃபில் தான். இந்த குளோரோஃபில் இயற்கையாகவே தன்னுள் பச்சை நிறத்தை கொண்டுள்ளது.

 குளோரோஃபில் என்பது மரம் மற்றும் செடிகளுக்கு தேவையான உணவை சூரிய ஒளியிலிருந்து பெற்று தருகிறது. அந்த நேரத்தில் சூரிய ஒளியில் இருந்து வரக்கூடிய சிவப்பு மற்றும் நீல நிற ஒளியை மட்டும் செடிகள் உட்கொள்கிறது. அதேபோல பச்சை நிறத்தை செடிகள் உட்கொள்ளாமல் பிரதிபலிக்கின்றது. இதன் காரணமாக தான் இலைகள் பச்சை நிறத்தில் இருக்கின்றன.  

இந்த குளோரோஃபில் பச்சை நிறமாக இல்லாமல் வேறு நிறத்தில் இருந்திருந்தால் இலைகளும் வேறு நிறத்தில் இருந்திருக்கும். இதனால் தான் மரங்கள் பட்டுப்போன பிறகு இலைகளும் அதன் நிறத்தை இழந்து விடுகின்றன.

மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்  Facts
Advertisement