மார்கழி மாதத்தில் ஏன் திருமணம் செய்யக்கூடாது தெரியுமா.?

Advertisement

மார்கழி மாதத்தில் ஏன் திருமணம் செய்யக்கூடாது.?

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் மார்கழி மாதத்தில் ஏன் திருமணம் செய்யக்கூடாது.? என்பதை கொடுத்துள்ளோம். மார்கழி மாதத்தில் திருமணம் செய்யக்கூடாது என்று கூறி கேட்டு இருப்போம். ஆனால், ஏன் மார்கழி மாதத்தில் திருமணம் செய்யக்கூடாது என்று கூறுகிறார்கள் என்று நாம் அனைவருமே யோசித்து இருப்போம். அப்படி நீங்கள் யோசித்து இருந்தால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

மாதத்தில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று மகாவிஷ்ணு கூறுகிறார். மார்கழி மாதத்தினை பீடு மாதம் என்று கூறுவார்கள். இதனை காலப்போக்கில் மாற்றில் பீடை மாதம் என்று கூறி வருகிறோம். பீடை என்றால் வெற்றி என்று பொருள். வெற்றியை அளிக்கக்கூடிய மாதம் மார்கழி மாதம். இதனை சிறப்புகளை அளிக்கும் மார்கழி மாதத்தில் ஏன் திருமணம் செய்யக்கூடாது என்று கூறுகிறார்கள் என்று நீங்கள் என்றாவது யோசித்தது உண்டா.? அப்படி நீங்கள் யோசித்து இருந்தால் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

மார்கழி மாதத்தில் செய்ய வேண்டியதும் செய்ய கூடாததும்.!

Why Not Get Married in Margali Month in Tamil:

மார்கழி மாதத்தில் ஏன் திருமணம் செய்யக்கூடாது தெரியுமா

மாதங்களில் உயர்ந்த மாதம் மார்கழி மாதம். மார்கழி மாதத்தில் அவ்வளவு சிறப்புகள் நிறைந்துள்ளது. ஆனால், இந்த மாதத்தில் சில செயல்களை செய்யக்கூடாது என்று கூறுவார்கள். அதில் முக்கியமானது விதை விதைக்கக்கூடாது என்று கூறுவார்கள். அதேபோல், திருமணமும் செய்ய கூடாது என்று கூறுவார்கள்.

இந்த மாதத்தில் விதை விதைக்கக் கூடாது. ஏனென்றால் இது விதை விதைப்பதற்கான காலம் அல்ல. விதை வளர்வதற்கான காலம் அல்ல. மார்கழி மாதத்தில் விதை விதைத்தால், விதை சரியான உயிர் தன்மையற்று வளராமல் போய்விடும் என்ற காரணத்திற்காகத் தான் மார்கழி மாதத்தில் திருமணம் செய்யக்கூடாது என்று சொல்லி இருக்கிறார்கள்.

அதுமட்டுமில்லமால், ஆடி மாதம் போல மார்கழி மாதமும் இறை வழிபாட்டிற்கு உரிய மாதம். எனவே, இம்மாதம் முழுவதும், இறைவனை மட்டுமே நினைத்து வழிபட வேண்டும் என்பதால் திருமணம் வேறு எந்த விதமான சுப நிகழ்ச்சிகளையும் செய்யக்கூடாது என்று கூறுகிறார்கள்.

 மார்கழி மாதம் ஒரு தெய்வீக மாதம் ஆகும். மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம் என இறைவனை அடையக்கூடிய இரு பெரிய விழாக்கள் வருகின்றன. ஆடி மாதம் அம்பிகைக்குறிய மாதம். அதேபோல், மார்கழி மாதம் இறைவனுக்கு உரிய மாதம். இறைவனை வணங்க வேண்டிய மிக சிறப்பான மாதம் என்பதால் திருமணம் செய்யப்படுவதில்லை. இந்த மாதத்தில் இறை சிந்தனையை தவிர வெறி எந்த சிந்தனையும் கூடாது என்பதற்காக திருமணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.  மார்கழி மாதத்தில் விதைத்தால் விதை முளைக்காமல் போய்விடும். குலம் தழைக்க போற்றி கொண்டாடப்படும் திருமணம் அதே காரணத்தால் தான் தவிர்க்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள்.    

மார்கழி மாதத்தில் மட்டும் வாசலில் ஏன் பூசணி பூ வைக்கிறார்கள் தெரியுமா.?

மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்  Facts
Advertisement