கை, கால் தோல் சுருக்கம்
பொதுவாக மனிதனாக பிறந்த அனைவருமே தண்ணீரில் அதிக நேரம் வேலை செய்யும் போது தோல்களில் சுருக்கம் ஏற்படும், கவனித்திருப்பீர்கள். அதவாது தண்ணீரில் கைகள் மற்றும் கால்களை பயன்படுத்தி அதிக நேரம் வேலை பார்த்தால் சுருக்கம் ஏற்படும். மேலும் குளிக்கும் போது அதிக நேரம் எடுத்து குளித்தால் கைகள் மற்றும் கால்களில் மட்டும் சுருக்கம் ஏற்படும். இதற்கான அறிவியல் காரணத்தை இந்த பதிவின் வாயிலாக படித்து தெரிந்து கொள்வோம்.
அதிக நேரம் தண்ணீரில் வேலை பார்த்தால் கைகள் சுருங்க காரணம்:
நம் உடலில் மிக நீளமான உறுப்பு தோல். தோல் தான் நம் உடலின் வெப்பத்தை சமமாக வைத்திருக்கும் இன்சுலேட்டராக பயன்படுகிறது. தோலின் மேல் புற பகுதி Keratinocytes என்ற செல்களால் உருவானது. இந்த செல்கள் தண்ணீரை தோலின் உள்ளே போக விடாது. அது போல தோலின் அடிப்பகுதியில் Sebaceous Glands என்ற வழவழப்பான ஒரு சுரப்பி உள்ளது. இந்த சுரப்பி Sebum என்ற பிசுபிசுப்பு தன்மை உள்ள எண்ணெயை சுரந்து கொண்டே இருக்கும். இந்த Sebum தான் தோலிற்கு மாய்ஸ்சரைசராகவும், வழவழப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது. இதனால் தான் நம் உடலில் தண்ணீர் படும் போது தண்ணீர் உறிஞ்சப்படாமல் வைத்திருக்கிறது.
இதையும் படியுங்கள் ⇒ மண்பானையில் உள்ள தண்ணீர் மட்டும் ஏன் ஜில் என்று இருக்கிறது தெரியுமா..?
ஆனால் கைகள் மற்றும் கால்கள் தண்ணீரில் இருந்தால் சுருங்குவதற்கு காரணம் என்ன என்று இப்பொழுது தெரிந்து கொள்வோம். உடலின் மற்ற உறுப்புகளை விட கை உள்ளங்கை மற்றும் கால் பாதங்கள் கொஞ்சம் வித்தியாசமானது. உள்ளங்கை, கால் உள்ளங்கால் கொஞ்சம் திக்காக அந்த பகுதியில் முடி இல்லாமல் இருக்கும்.
மேலும் முக்கியமாக Sebaceous Glands என்ற எண்ணெயை சுரக்க கூடிய சுரப்பி இருக்காது. ஆனால் வியர்வை சுரப்பிகள் மட்டும் காணப்படும். Sebum என்ற எண்ணெய் பிசுபிசுப்பு தன்மை உள்ளங்கை மற்றும் உள்ளங்காலில் இல்லாததால் தான் 5 நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து தண்ணீரில் வேலை பார்க்கும் போது உள்ளங்கை, உள்ளங்காலில் ஊறியது போல சுருக்கங்கள் ஏற்படுகிறது.இதையும் படியுங்கள் ⇒ கருப்பு நிற உள்ளாடை மற்றும் ஆடைகள் அணிகிறீர்கள் என்றால் இதை தெரிந்து கொள்ளுங்கள்.!
மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம் | Facts |