Why Reason Shopping Trolley Same Colour in Tamil
முன் இருந்த காலங்களில் அன்றைய தினம் தேவைப்படும் பொருட்களை அன்றைய தினம் தான் வாங்குவார்கள். ஆனால் இப்போது மாதம் மாதம் மட்டுமே பொருட்கள் வாங்குகிறார்கள். அதையும் மீறி பொருட்கள் தேவைப்பட்டாலும் அதனை ஒரு போன்கால் மூலம் பொருட்களை ஆர்டர் செய்து உடனே வீட்டு வாசலில் பொருட்கள் வந்து சேரும்.
மேலும் மாதம் மாதம் மளிகை பொருட்கள் வாங்க சென்றாலும் அங்கு கொண்டு பில் கொடுத்தோ அல்லது சொல்லியோ தான் பொருட்களை முன்பு வாங்கி வருவோம். ஆனால் இப்போது அப்படி இல்லை யாராக இருந்தாலும் அவர்களுக்கு தேவையான பொருளை அவரே எடுத்துகொண்டு அதனை வாங்கி கொள்ளமுடியும். வாங்க கொஞ்சம் தெளிவாக தெரிந்து கொள்வோம்..!
Why Reason Shopping Trolley Same Colour in Tamil:
நாமே பொருட்களை எடுத்து வண்டியில் போட்டு தள்ளிக்கொண்டு வந்து பில் போட்டுக்கொள்ள முடியும். அந்த கடைக்கு பெயர் ஷாப்பிங் மால் என்பார்கள். இன்று நமக்கு என்ன பொருட்கள் தேவையோ அதற்கு ஒரு வண்டியை எடுத்துக்கொண்டு, அதாவது ட்ராலி என்பார்கள் அதனை எடுத்துக்கொண்டு தள்ளிக்கொண்டு நமக்கு என்ன பொருட்கள் தேவையோ அதை எடுத்துக்கொண்டு போகலாம். கடைசியில் வந்து பில் போட்டு அந்த டிராலியை அங்கேயே வைத்துவிட்டு வருவோம்.
நீங்கள் இதை யோசித்து இருக்கிறீர்களா..? அது என்னவென்றால் அனைத்து ட்ராலிகளும் ஏன் ஒரே நிறத்தில் உள்ளது என்றும் அது ஏன் கம்பிகள் உள்ளது என்றும் யோசித்து இருக்கீர்களா..? அது ஏன் என்று தெரிந்து கொள்வோம்..!
விமானம் ஏன் வெள்ளை நிறத்தில் மட்டும் இருக்கிறது உங்களுக்கு தெரியுமா..?
இதற்கு மூன்று காரணங்கள் உள்ளது..?
அதனை தயாரிக்கும் போது அதன் நான்கு பக்கமும் மூடியது போல் தயாரித்தால் அதற்கு இரும்பு அதிகமாக தேவைப்படும் என்பதாலும் செலவும் அதிகமாவும், அதேபோல் அதை பயன்படுத்தும் போது அதனை எடுத்து தள்ளுவதற்கு கஷ்டமாக இருக்கும் என்பதால் அதனை கம்பி வைத்தும், அனைத்து பக்கமும் அடைக்காமலும் தயாரிப்பார்கள்.
இரண்டாவது அந்த ஷாப்பிங் மாலில் உள்ள பில் போடுபவருக்கும் சரி உங்களுக்கும் சரி அந்த ட்ராலிக்குள் என்ன உள்ளது என்றும் தெரிந்துகொள்ள சுலபமாக இருக்கும். உதாரணத்திற்கு அந்த டிராலி தூரமாக இருந்தாலும் அதில் பொருட்கள் உள்ளதா என்று தெரிந்து கொள்ள முடியும்.
மூன்றாவது காரணம் அதில் உள்ள பொருட்கள் கிழிந்து அதில் ஊற்றினாலும் அதனை சுத்தம் செய்வது சுலபம். மேலும் இரும்பு பொருள் என்பதால் அதில் கலர் கலராக பெயிண்ட் செய்தால் அது கொஞ்ச நாட்களில் கலர் மங்கி விடும். ஆகவே அதற்கு இரும்பு சம்பந்தமான ஒரே நிறத்தில் இருக்கும் பெயிண்ட் அடிப்பார்கள்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 ஏன் எல்லா வண்டி டயரும் கருப்பாக இருக்கிறது என்று தெரியுமா.?
மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம் | Facts |