மனைவி கர்ப்பமாக இருக்கும் போது கணவன் ஏன் முடி வைத்திருக்கிறார்கள்

Advertisement

மனைவி கர்ப்பமாக இருக்கும் போது கணவன் ஏன் முடி வைத்திருக்கிறார்கள்

பொதுவாக கருவில் இருக்கும் குழந்தைக்காக எல்லா விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்வோம். தாய்மார்கள் குழந்தைக்காக என்னென்ன உணவுகள் எடுத்து கொள்ள வேண்டுமோ அந்தந்த உணவுகளை எடுத்து கொள்வோம். அவர்களுக்கு பெயர்களை யோசிக்க ஆரம்பித்து விடுவோம்.

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது உடலளவிலும் சரி மனதளவில் சரி பல மாற்றங்களை உணர்வார்கள். இந்த மாற்றங்களை ஏற்று கொள்ள முடியாமல் மன அழுத்தம் அடைவார்கள். இவர்களின் தோற்றத்தில் மாற்றம் ஏற்படும். இதனால் கவலை அடைவார்கள். மனைவிக்கு 7 மாதம் ஆன பிறகு கணவன்மார்களும் முடி வெட்டாமல், தாடியை சேவ் செய்யாமல் இருப்பார்கள். இதற்கான காரணத்தை அறிந்து கொள்வோம்.

Why Should a Husband Not Get a Haircut and Face-Shaving During his Wife’s Pregnancy?

மனைவி கர்ப்பமாக இருக்கும் போது கணவன் ஏன் முடி வைத்திருக்கிறார்கள்

 

மனைவி கர்ப்பமாக இருக்கும் போது கணவன் முடி வெட்ட கூடாது என்று நம்ம வீட்டில் எல்லாம் சொல்வார்கள். ஆனால் இதற்கான காரணம் என்னவென்று தெரியாமலே அதனை கடைபிடிக்கிறார்கள். இதற்கான காரணத்தை இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம் வாங்க..

இதற்கு ஆன்மிக ரீதியாகவும், மன ரீதியாகவும் என இரண்டு காரணங்களை சொல்லலாம். அதனை பற்றி அறிந்து கொள்வோம்.

முதலாவதாக ஆன்மிக ரீதியாக சொல்லப்போனால் கருவில் ஒரு உயிர் வளர்ந்து கொண்டு இருக்கிறது. இந்த நேரத்தில் வளர்ச்சிகரமான செயல்களை மட்டும் தான் செய்ய வேண்டும். முடியை வெட்டுவது, தாடியை சேவ் செய்வது போன்ற வளர்ச்சியை தடுக்க கூடிய செயல்களை செய்ய கூடாது என்று கூறுவார்கள். இதனால் கருவில் இருக்கும் குழந்தைக்கு ஆரோக்கியத்தில் பிரச்சனையை ஏற்படுத்துமாம். அதாவது குழந்தையின் வளர்ச்சியில் ஏதாவது ஒரு குறைபாடு உடையதாக இருக்கும். அதனால் இந்த காரியங்களை செய்ய கூடாது என்று கூறுவார்கள்.

மன ரீதியாக சொல்ல போனால் பெண்கள் கருவுற்றிருக்கும் போது ஹார்மோன் மாற்றங்கள் அதிகமாக இருக்கும். இந்த மாற்றத்தினால் சில பேர் அழகாக இருப்பார்கள். சில பேர் ஒல்லியாகவும், குண்டாகவும் இருப்பார்கள். மேலும் முகம் அழகாக இருக்கும்.

அவர்களுடைய தோற்றம் ஆனது பொலிவிழந்து காணப்படும். அப்போது அவர்களை மனதளவில் நம்ம இப்படி இருக்கிறமோ என்று கவலை அடைவீர்கள். அதனை போக்கும் வகையில் தான் கணவன்மார்களும் முடி மற்றும் தாடி வளர்க்கிறார்கள். அதாவது அவர்கள் முடி மற்றும் தாடியை சரியாக வெட்டினார்கள் என்றால் அவர்களின் தோற்றத்தில் எந்த மாற்றமும் இருக்காது. அதனால் தான் அவர்களின் தோற்றத்தில் மாற்றத்தில் ஏற்படுத்துவதற்காக தான் முடி மற்றும் தாடியை வளர்க்கிறார்கள். அதாவது என்ன ஆனாலும் உன் கூட நான் இருக்கிறேன் எதற்கும் கவலை அடையாதே என்று கூறுவதாகும்.

மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்  Facts
Advertisement