ஏன் இரவு நேரத்தில் வீட்டை பெருக்க கூடாது என்று சொல்கிறார்கள் காரணம் தெரியுமா..?

Advertisement

இரவில் ஏன் வீட்டை பெருக்க கூடாது 

இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு சுவாரஸ்யமான தகவலை பற்றி தான் பார்க்க போகிறோம். நீங்கள் இந்த பதிவின் மூலம் தினமும் ஒரு பயனுள்ள தகவலை பற்றி தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அதுபோல இந்த பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இரவு நேரத்தில் வீட்டை பெருக்க கூடாது என்று சொல்வார்கள். அதை நாம் கேட்டிருப்போம். அதற்கு என்ன காரணம் என்று என்றாவது யோசித்திருக்கிறீர்களா..? அப்படி யோசிப்பவர்கள் இந்த பதிவை படித்து காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

இரவு நேரத்தில் மரத்திற்கு அடியில் உறங்க கூடாது என்று சொல்ல காரணம் என்ன..?

ஏன் இரவு நேரத்தில் வீட்டை பெருக்க கூடாது என்று சொல்கிறார்கள்..? 

வீட்டை கூட்டுவது

அன்றைய காலகட்டத்தில் இருந்து இன்றைய காலகட்டம் வரை ஒரு சில விஷயங்களை நாம் மாற்றாமல் கடைப்பிடித்து வருகிறோம். அப்படி நாம் கடைப்பிடித்து வரும் விஷயங்களில் இதுவும் ஒன்று.

நம் முன்னோர்கள் சொல்லிவிட்டு சென்ற ஒவ்வொரு விஷயத்திற்கு பின்னாலும் ஒரு அறிவியல் காரணம் ஒளிந்திருக்கும். அதுபோல இதற்கு பின்னாலும் 2 அறிவியல் காரணம் ஒளிந்திருக்கிறது.

பெரும்பாலும் நம் வீட்டில் இருக்கும் தாத்தா பாட்டி போன்ற பெரியவர்கள் இரவு நேரத்தில் வீட்டை கூட்ட கூடாது என்று சொல்வார்கள். அதுபோல கூட்டிய குப்பைகளை 6 மணிக்கு மேல் வெளியில் கொட்ட கூடாது என்று பலரும் சொல்லி கேட்டிருப்போம். இந்த பழக்கம் சில கிராம பகுதிகளில் இன்றும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அப்படி சொல்ல காரணம், அந்த காலத்தில் வீட்டை சுற்றி பெரிய மரங்கள், செடி கொடிகள் எல்லாம் நிறைந்து இருக்கும். அதுபோல அந்த காலத்தில் மின்சாரம் கிடையாது என்பதால், வெளிச்சத்திற்க்காக விளக்கு ஒளியை தான் பயன்படுத்தி வந்தார்கள்.

 அந்த நேரத்தில் சூரியன் மறைந்த பின் பாம்பு, தேள், பூரான் போன்ற விஷத் தன்மை கொண்ட பூச்சிகள் இதமான வெப்பதிற்காக வீட்டிற்குள் வந்து தஞ்சம் அடையும். அந்த நேரத்தில் நாம் வீட்டை பெருக்கும் போது, பூச்சிகளை நாம் தொந்தரவு செய்வதாக நினைத்து அவை நம்மை தாக்க வரும்.  

அதேபோல,  இரவு நேரத்தில் நமக்கே தெரியாமல் விலைமதிப்புள்ள பொருளை நாம் கீழே போட்டிருப்போம். அந்த நேரத்தில் நாம் வீட்டை பெருக்கும் போது, தவறவிட்ட விலைமதிப்புள்ள பொருளை குப்பையில் போட நேரிடும்.  

இந்த 2 காரணங்களுக்காக தான் இரவு நேரத்தில் வீட்டை பெருக்க கூடாது என்று நம் முன்னோர்கள் கூறினார்கள்.

மண்பானையில் உள்ள தண்ணீர் மட்டும் ஏன் ஜில் என்று இருக்கிறது தெரியுமா..?

 

மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்  Facts
Advertisement