Thotta Sinungi Plant in Tamil
வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவலை பற்றி தான் பார்க்க போகிறோம். தொட்டால் சிணுங்கி இலையை பற்றி நம் அனைவருக்குமே தெரியும். இந்த தாவரம் நம் வீட்டு பகுதிகளிலும் குப்பை மேடுகளிலும் வளர கூடியது. இந்த செடியை சிறிய குழந்தைகள் அனைவரும் தொட்டு விளையாடுவார்கள்.
இந்த செடியில் இருக்கும் இலைகளை தொட்டால் அது உடனே சுருங்கி விடும். ஏன் அப்படி அந்த இலை தொட்டவுடன் சுருங்கி விடுகிறது என்று உங்களுக்கு தெரியுமா..? அந்த வகையில் இந்த பதிவின் மூலம் தொட்டால் சிணுங்கி இலை தொட்டவுடன் சுருங்க காரணம் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
தொட்டால் சிணுங்கி செடியை வீட்டில் வளர்ப்பதால் இவ்வளவு நன்மைகள் உள்ளதா..! |
தொட்டால் சிணுங்கி இலை தொட்டவுடன் சுருங்க காரணம் என்ன..?
இந்த செடியை தொட்டாற் சுருங்கி அல்லது தொட்டாற் சிணுங்கி என்று சொல்வார்கள். இதை ஆங்கிலத்தில் மிமோசா பியூடிகா (Mimosa pudica) என்று சொல்லப்படுகிறது. இது மிமோசேசியே குடும்பத்தைச் சேர்ந்த தாவரமாகும்.
இந்த செடியில் இருக்கும் இலைகளை தொட்டாலோ அல்லது அதன் மீது ஏதேனும் பட்டாலோ அது உடனே தன் இலைகளை சுருக்கி கொள்கிறது. ஏன் அப்படி தொட்டவுடன் சுருங்குகிறது என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது.
இந்த செடியில் இருக்கும் இலைகள் மற்ற தாவரங்களில் இருக்கும் இலைகளை போல பல செல்களால் ஆனது. இந்த தாவரத்தில் இருக்கும் ஒவ்வொரு செல்களும் சில வகையான திரவப் பொருட்களை தன் இலைகளுக்குள் வைத்திருக்கின்றன.
இதில் இருக்கும் திரவத்தின் அழுத்தம் காரணமாக செல்களும், செடியில் இருக்கும் இலைகளும் நிமிர்ந்து நிற்கின்றன. அதே நேரம் இலையில் இருக்கும் திரவ அழுத்தம் நீங்கி விட்டால் இலையின் தன்மை தளர்ந்து இலைகள் சுருங்கி விடுகின்றன.
அதுபோல தொட்டால் சிணுங்கி இலையை நாம் தொடும் போது அதன் தண்டுப் பகுதி ஒரு வகையான அமிலத்தைச் சுரக்கிறது. இதன் காரணமாக இலையின் கீழ்ப்பகுதியில் இருக்கும் செல்களில் திரவ தன்மை நீங்கி விடுகிறது. அதேநேரம் இலைகளின் மேற்பகுதி செல்களில் இருக்கும் திரவத்தன்மை நீங்குவது இல்லை. இதனால் இலையின் எடை காரணமாக இலைகள் தளர்ந்து சுருங்கி விடுகின்றன.
இதன் காரணமாக தான் தொட்டால் சிணுங்கி இலை நாம் தொட்டவுடன் சுருங்கி விடுகிறது.
அதேபோல புளியமரம் மற்றும் தூங்குமூஞ்சி மரம் போன்ற சில மரங்களின் இலைகளும் இரவு நேரங்களில் சுருங்குவதற்கு இது தான் முக்கிய காரணமாக இருக்கிறது.
இலைகள் ஏன் பச்சை நிறத்தில் இருக்கிறது காரணம் உங்களுக்கு தெரியுமா..? |
மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம் | Facts |