Why We Feed Food to Crows on Amavasya in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் அமாவாசை தினத்தில் மட்டும் ஏன் காகத்திற்கு சாதம் வைக்கிறோம் என்பதற்கான காரணத்தை பின்வருமாறு கொடுத்துள்ளோம். அமாவாசை தினத்தில் சைவ உணவுகளை சமைத்து முன்னோர்களின் படத்திற்கு முன்னால் படையல் இட்டு, வழிபாடு செய்து அதன் பிறகு, அந்த உணவினை எடுத்து காகத்திற்கு வைத்து காகம் சாப்பிட்ட பிறகு நாம் சாப்பிடுவோம்.
ஏன் காகம் சாப்பிட்ட பிறகு நாம் சாப்பிடுகிறோம் என்று என்றாவது நீங்கள் யோசித்தது உண்டா.? பொதுவாக, அமாவசை என்பது இறந்த நம் முன்னோர்களை வழிபட மிகவும் சிறந்த நாள். அமாவாசை அன்று முன்னோர்கள் நம் இல்லத்திற்கு வருவார்கள். குறிப்பாக காகத்தின் உருவத்தில் நம்முன்னோர்கள் உணவு உண்பார்கள் என்பது ஐதீகம்.
அமாவாசை அன்று ஏன் வாசலில் கோலம் போடக்கூடாது..? என்று தெரியுமா..?
அமாவாசை நாளில் காகத்திற்கு உணவு வைப்பது ஏன்.?

அமாவாசை நாளில் காகத்திற்கு உணவு அளிப்பது வழக்கம். அதிலும் குறிப்பாக, தை அமாவாசை நாளில் காகத்திற்கு படையல் வைத்து வழிபடுவோம். காகம் சாப்பிட்ட பிறகே நாம் சாப்பிடுவோம்.
நம் முன்னோர்கள் அமாவாசை நாளில் ஏதோவொரு உருவத்தில் நம் இல்லத்திற்கு வருவார்கள். அதனால் தான் காகத்திற்கு உணவு வைத்துவிட்டு அதன் பிறகு சாப்பிடுவார்கள். காகம் மட்டுமின்றி குருவி போன்ற மற்ற உயிரினங்கள் சாப்பிட்டாலும் புண்ணியம் தான்.
நீங்கள் வைத்த சாதத்தினை காகத்திற்கு சாதம் உங்கள் கர்ம வினைகள் அனைத்தும் நீங்கும். அமாவாசை நாளில், முன்னோர்கள் வீட்டிற்கு வருவார்கள் என்பது காலம் காலமாக இருந்து வரும் நம்பிக்கை. அப்படி நம் வீட்டிற்கு முன்னோர்கள் எந்த உருவத்திலும் வரலாம். ஆகையால்,வீட்டிற்கு வரும் காகத்திற்கு உணவு அளித்தால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும். குறிப்பாக எமன் மகிழ்ச்சியடைவார்.
எனவே, முன்னோர்களுக்கு நாம் படைக்கும் உணவினை காகம் தான் முன்னோர்களின் உண்ணும். ஆகையால், காகம் வடிவில் வரும் முன்னோர்களுக்கு படையல் இட்டு வழிபடுவதன் மூலம் நம் பாவங்கள் அனைத்தும் நீங்கி விடும்.
அதுமட்டுமில்லாமல், சனீஸ்வர பகவானின் வாகனமான காகம் ஆனது, எமலோகத்தின் வாசலில் இருக்கும் என்றும் எமனின் தூதுவனான காகத்திற்கு சாதம் வைத்தால் நம் முன்னோர்கள் அமைதியடைந்து ஆசீர்வாதம் செய்வார்கள்.
காகத்திற்கு மட்டுமின்றி, இயலாதவர்களுக்கு அன்னதானம் செய்யலாம். இதுபோன்ற செயல்களால் மட்டுமே நம் முன்னோர்கள் மனமகிழ்ந்து நம்மை ஆசிர்வாசம் செய்வார்கள்.
எனவே, அமாவாசை நாளில், முன்னோர்களை நினைத்து வழிபட்டு அவர்களுக்கு பிடித்த செயல்களை மட்டும் செய்து, காகத்திக்கு உணவு அளித்து வழிபடுவோம். எமதர்மன் மற்றும் முன்னோர்களை மகிழ்வித்து அவர்க்ளின் ஆசியை பெறுவோம்.
காகத்திற்கு இந்த பொருளை வைத்தால் தீராத கஷ்டங்களும் தீருமாம்..!
| மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம் | Facts |














