தீ விபத்து முதலுதவி
எதிர்பாராத நேரங்களில் வீட்டில் அல்லது வேறு இடங்களில் தீ விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அப்படி தீ விபத்தை அணைப்பதற்கு எந்த மாதிரியான முதலுதவிகளை செய்ய வேண்டும் அறிந்திருக்க வேண்டும். அந்த வகையில் உங்களுக்கும் உதவும் வகையில் தீ விபத்து ஏற்பட்டால் என்ன முதுலுதவிகளை செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
First Aid for Fire Accidents in Tamil:
முதலில் என்ன வகையான தீ விபத்து என அறிய வேண்டும். உங்களால் தீயை அணைக்க முடியும் என்றால் அணைத்து விடலாம். இல்லையென்றால் தீயணைப்பு துறைக்கு தெரிவிக்க வேண்டும்.
எண்ணெய் அல்லது அமிலம் காரணமாக ஏற்பட்ட தீ விபத்தாக இருந்தால் மணலை பயன்படுத்தி நெருப்பை அணைக்க வேண்டும். மற்ற வகையான தீ விபத்துகளுக்கு தண்ணீரை ஊற்றி அணைக்க வேண்டும்.குழந்தைகளுக்கு தீக்காயம் ஏற்பட்டால் என்ன செய்வது?
ஒருவரின் மேல் தீப்பற்றி எரிந்தால் அந்த நபரின் மேல் இருக்கும் தீயை அணைக்க வேண்டும். அணைப்பதற்கு போர்வை, சணல் சாக்கு போன்றவற்றை பயன்படுத்தி அந்நபரின் மேல் சுற்றி தரையில் உருட்டி தீயை அணைக்க வேண்டும்.
தீக்காயம் ஏற்பட்ட இடத்தை தண்ணீரை ஊற்றி சுத்தமாக கழுவ வேண்டும். காயம் இல்லாமல் கொப்பளமாக இருந்தால் அதனை உடைக்க முயற்சிக்க கூடாது. பாதிக்கப்பட்ட நபரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும்.
தீ காயம் ஏற்பட்ட இடத்தில் துணி ஏதும் ஒட்டி இருந்தால் அதனை எடுக்க முயற்சிக்க கூடாது.
தீக்காயம் ஏற்பட்ட நபருக்கு சிறிய இடைவெளியில் உப்பு கலந்த நீர், எலுமிச்சை சாறு, வெண்ணீர் போன்றவற்றை கொடுக்கலாம்.
ரொம்ப காயமாக இருந்தால் காற்று படாதவாறு மூடி வைக்க வேண்டும். இதற்கு வாழை இலையை பயன்படுத்தலாம். இதனால் வலி மற்றும் எரிச்சலை குறைக்கும்.
அடிபட்ட ஒருவருக்கு இரத்தம் வந்தால் முதலில் செய்ய வேண்டியது என்ன.?
இதுபோன்று முதலுதவி பற்றிய தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | First Aid |