நாய் கடித்தவுடன் என்ன செய்ய வேண்டும்
வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் நாய் கடித்தவுடன் என்ன முதலுதவி செய்ய வேண்டும் என்பதை பற்றித்தான் தெரிந்துகொள்ளப் போகின்றோம். பொதுவாக சில நாய்கள் யாரையாவது கடித்துவிட்டால் மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்பு என்ன செய்ய வேண்டும் என்று பலருக்கும் தெரியாது. ஒரு சிலரை வீட்டில் வளர்க்கும் நாய்கள் கடித்து விடும், இன்னும் ஒரு சிலரை தெரு நாய்கள் கடித்துவிடும். மேலும் இதுபோன்ற நாய்கள் கடிக்கும் பொழுது என்ன முதலுதவி செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்வோம்.
தேனீ கொட்டினால் இந்த முதலுதவியை செய்யுங்கள்..! |
நாய் கடித்தவுடன் செய்ய வேண்டிய முதலுதவி:
முதலில் உங்களை நாய் கடித்தவுடன் அது தெருநாயா, வீட்டு நாயா அல்லது வெறிநாயா என்பதை முதலில் அறிந்து கொள்வது நல்லது. பொதுவாக நாயின் பற்கள் நம் உடம்பில் கடித்தாலோ அல்லது கீறினாலோ பல விளைவுகளை ஏற்படுத்திவிடும்.
நாயின் வாயில் சுரக்கும் உமிழ் நீர்கள் ரேபிஸ் என்று சொல்லப்படும் வெறிநோய் கிருமிகளை உள்ளே செலுத்துகிறது. இதனால் மனிதனை கடித்தவுடன் மூளையை பாதிக்க செய்கிறது. காயம் அடையும் பகுதியை பொறுத்து வேகமாக மூளையை பாதிக்க செய்கிறது. எனவே இதுபோன்ற பிரச்சனைகளில் இருந்து பாதுக்காப்பாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்துகொள்ளலாம்.
உங்களை நாய் கடித்தவுடன் மருத்துவனைக்கு செல்வதற்கு முன்பு, நாய் கடித்த இடத்தை சுத்தமாக கழுவ வேண்டும். அதாவது தண்ணீர் குழாயை முழுவதுமாக திறந்துவிட்டு, தண்ணீரை பளிச்சென்று அடிப்பது போல நாய் கடித்த இடத்தை கழுவ வேண்டும். நன்றாக கழுவிய பிறகு சோப்புகளை பயன்படுத்தி மறுபடியும் கழுவ வேண்டும்.
இப்படி சுத்தமாக கழுவதற்கு காரணம் என்ன தெரியுமா.? மருத்துவமனை போவதற்கு முன் இப்படி செய்வதினால் கிருமிகளின் எண்ணிக்கை குறைந்து காணப்படும். எனவே மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்பு கடிபட்ட இடத்தை தூய்மைப்படுத்துவது நல்லது. அதன் பிறகு மருத்துவமனைக்கு சென்று தடுப்பூசி போட வேண்டும்.
தடுப்பூசிகள் போடாமல் இருந்தால் கட்டாயம் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். எனவே கட்டாயம் தடுப்பூசிகளை போட வேண்டும். நாய் கடிக்கு மொத்தம் ஐந்து தடுப்பூசிகள் போடுவார்கள். நாய் கடித்த அன்று 3 தடுப்பூசிகள் போடுவார்கள். நாய் கடித்தவுடன் போடும் தடுப்பூசியை 0 நாள் என்றும் சொல்லப்படுகிறது. அதன் பிறகு நாய் கடித்த நாளை தவிர்த்து, அடுத்த நாளிலிருந்து 3, 7, 14, 28 நாள் என தடுப்பூசிகள் போட வேண்டும். தடுப்பூசிகளை போடுவது மட்டுமின்றி நாய் கடிக்கு என்ன உணவுகளை சாப்பிட வேண்டும் என்றும் எதை சாப்பிட கூடாது என்றும் அறிந்துகொள்வது நல்லது.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | First aid in Tamil |