First Aid For Electric Shock in Tamil | மின்சாரம் தாக்கினால் முதலுதவி
|அன்பு நெஞ்சம் கொண்ட நேயர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு பயனுள்ள தகவலை பற்றி தான் பார்க்க போகிறோம். இன்றைய கால கட்டத்தில் மின்சாரம் இல்லாத இடங்களே இல்லை. நம் அனைவரின் வீடுகளும் மின்சாரத்தால் தான் இயங்குகின்றது. இன்றைய வாழ்வில் மின்சாரம் என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாக உள்ளது.
இன்றைய நிலையில் உணவு, உடை, இருப்பிடம் போல மனிதனின் அத்தியாவசியங்களில் மின்சாரமும் ஒன்றாகி விட்டது. அதுபோல மின்சாரம் தாக்கியவரை எப்படி காப்பாற்றுவது. அந்த வகையில் இந்த பதிவின் மூலம் மின்சாரம் தாக்கியவருக்கு என்ன முதலுதவி செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க..! மின்சாரம் தாக்கியவரை பார்த்தால் அவர்களுக்கு எப்படி முதல் உதவி செய்ய வேண்டும் என்று தெரிந்துகொள்வது நம் ஒவ்வொருவருடைய கடமை. ஆகையால், இப்பதிவை முழுவதுமாக படித்து First Aid For Electric Shock in Tamil பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
வலிப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்..! |
மின்சாரம் தாக்கியவருக்கு முதலுதவி செய்வது எப்படி..?
- ஒருவருக்கு மின்சாரம் தாக்கி விட்டால் முதலில் ஆம்புலன்ஸிற்கு போன் செய்ய வேண்டும்.
- மின்சாரம் தாக்கியவருக்கு மாரடைப்பு, இதய துடிப்பு தொடர்பான பிரச்சனைகள், சுவாசிக்க சிரமப்படுதல், தசைகளில் வலி, உணர்வின்மை, உடல் மரத்து போதல் மற்றும் மயக்கம் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும்.
- எதிர்பாராத விதத்தில் ஒருவருக்கு உடலில் மின்சாரம் தாக்கினால் அருகில் இருப்பவர்கள் உடனடியாக அந்த இடத்தில் இருக்கும் மின் இணைப்பை துண்டிக்க வேண்டும்.
- மின்சாரம் தாக்கியவர்களை உடனே சென்று தொடக்கூடாது. மின்சாரத்தை நிறுத்தி விட்டு அவர்கள் மின்சார தொடர்பில் இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே அவர்களை தொட வேண்டும்.
- அதேபோல நேரடியாக அவர்களை தொடாமல் ஏதேனும் மரக்கட்டையின் உதவியுடன் அவர்களை தொட வேண்டும்.
- பின்னர் அவர்களை படுக்க வைத்து அவர்களுக்கு இதயத்துடிப்பு மற்றும் மூச்சு விடுதல் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். இதயத்துடிப்பு இல்லை என்றால் அவர்களின் மார்பு பகுதியில் உங்கள் இரண்டு கைகளையும் வைத்து நன்கு அழுத்த வேண்டும். மின்சாரம் தாக்கியவருக்கு மூச்சு திணறல் அதிகமாக இருக்கும் என்பதால் வீட்டில் இருக்கும் ஜன்னல் கதவுகளை திறந்து வைக்க வேண்டும்.
- மின்சாரம் தாக்கியவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்வது மிகவும் சிறந்தது.
- மேலும் மின்சாரம் தாக்கியவருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றாலும் அவர்களை மருத்துவரிடம் அழைத்து செல்வது அவசியமான ஓன்று.
தேனீ கொட்டினால் என்ன முதலுதவி செய்ய வேண்டும்..? |
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |