இரத்தம் நிற்க
வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் ஒருவருக்கு அடிபட்டு இரத்தம் வருகிறது என்றால் அவர்களுக்கு செய்ய வேண்டிய முதலுதவி என்னவென்று தெரிந்து கொள்வோம். நமது சாலையில் நடந்து கொண்டிருக்கும் போது நிறைய விபத்துகள் நடப்பதை பார்த்திருப்பீர்கள். ஆனால் அவர்களை கடந்து செல்லாமல் அவர்களுக்கு சில உதவிகளை செய்யுங்கள். ஆனால் அந்த உதவியானது அவர்களின் உயிருக்கு எந்த வித பாதிப்பும் இல்லாமல் செய்ய வேண்டும். அது என்னென்ன உதவிகள் என்று இந்த பதிவின் மூலம் படித்து தெரிந்து கொள்வோம்.
இதையும் படியுங்கள் ⇒ மின்சாரம் தாக்கியவருக்கு என்ன முதலுதவி செய்ய வேண்டும்..?
அடிபட்டு இரத்தம் வந்தால் என்ன செய்ய வேண்டும்:
இரத்தத்தை நிறுத்த:
சிறிய காயம், கத்தி அல்லது பிளேடால் வெட்டியது, விழுந்து அடிப்பட்டது போன்ற எந்த காரணத்தினால் அடிப்பட்டு இரத்தம் வந்தால் அந்த இடத்தை முதலில் தண்ணீரை வைத்து கழுவ வேண்டும்.
பிறகு இரத்தம் வந்து கொண்டே இருந்தால் ஒரு சுத்தமான துணியை வைத்து அந்த இடத்தில் அழுத்தி வைக்கவும். இப்படி செய்வதினால் இரத்தம் வருவதை நிறுத்திவிடும். துணியை வைத்த பிறகு அடிக்கடி இரத்தம் நின்று விட்டதா என்று பார்க்க கூடாது. ஏனென்றால் அடிக்கடி பார்பதினால் மறுபடியும் இரத்தம் ஏற்படும்.
எந்த இடத்தில் அடிபட்டு இரத்தம் வந்தாலும் அந்த இடத்தில் மஞ்சள் தூள், காபி தூள், பவுடர், விபூதி என எந்த பொருட்களையும் காயத்தின் மீது வைக்க கூடாது.மூக்கிலிருந்து இரத்தம் வந்தால்:
மூக்கிலிருந்து இரத்தம் வந்தால் அவர்களை முன் பக்கம் குனிய சொல்ல வேண்டும். மூக்கின் வழியாக மூச்சு விடாமல் வாயின் வழியாக மூச்சு விட வேண்டும். இரத்தத்தை வாயின் வழியாக உள்ளே சென்றால் நுரையீரலுக்குள் சென்று விடும். அதனால் தான் குனிய சொல்கிறோம்.
உறுப்புகள் சேதம் அடைந்தால்:
அடிபட்டவருக்கு உடல் உறுப்புகள் ஏதும் சேதம் அடைந்திருந்தால் அதனை எடுத்து ஒரு ஈர துணியில் உள் பக்கம் வைத்து ஒரு கவரில் போட்டு கொள்ளவும். பின் ஒரு Box-யில் ஐஸ் கட்டி வைத்து அதனின் உள் பக்கம் துணியில் சுற்றி வைத்திருப்பதை வைக்கவும்.
நீங்கள் மேல் கூறப்பட்டுள்ள முதலுதவிகளை செய்தாலும் மறக்காமல் ஆம்புலன்சிற்கு போன் செய்திட வேண்டும். நேரத்தை கடத்தாமல் மருத்துவமனைக்கு செல்வது நல்லது.
விபத்துக்களை தவிர்ப்போம்.!
உயிர்களை காப்போம்.!
இதுபோன்று பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | First aid in Tamil |