பிரசவ வலி
ஒரு பெண் தாய்மை அடைந்ததும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். கருவுற்ற நாளிலிருந்து 10 மாதம் வரைக்கும் குழந்தைக்கு தேவையான சத்தான உணவுகளை தெரிந்தெடுத்து சாப்பிடுவார்கள். 5 மாதத்தில் மருந்து கொடுப்பது, 7 மாதத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி என்று நடக்கும். 7 மாதத்திற்கு பிறகு பிரசவ நாளை நனைத்து தாய் பயந்து கொண்டிருப்பார்கள். பிரசவம் என்பது தாயிக்கு மறுபிறவி என்பார்கள். பிரசவத்தின் வலி வந்து விட்டால் தாய்க்கும் என்ன செய்வது என்று தெரியாது, அவர்களின் கூட இருப்பவர்களுக்கும் என்ன செய்வது என்று தெரியாது. அதனால் இந்த பதிவில் பிரசவ வால் வந்தால் முதலுதவி என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..
பிரசவ வலி முதலுதவி:
பிரசவ நிலையை மூன்று நிலைகளாக பிரிக்கலாம்.
- முதல் நிலையில் கருப்பை சுருங்கி, குழந்தை பிறப்பு கால்வாயில் நகர்கிறது.
- இரண்டம் நிலையில் கருப்பையின் சுருக்கங்களுடன், குழந்தை பிறப்பு கல்கால் வழியாகவும் வெளியேற உதவுகிறது.
- மூன்றாம் நிலை நஞ்சுக்கொடி வெளியேற்றப்படுகிறது.
கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவ வலி ஏற்பட போவதற்கான அறிகுறிகள்
முதல் நிலையில் குறைந்த முதுகுவலி ஏற்பட்டு குழந்தையின் தலையை இடுப்பு வழியாகவும் கருப்பை வாயின் உட்புறத்திற்கு எதிராகவும் அழுத்துகிறது. இந்த நேரத்தில் தாய்க்கு நான் உன்னோடு இருக்கிறேன் பயப்படாதே என்று ஆதரவாக இருக்க வேண்டும்.
அடுத்து தாயை நிற்க வைக்காமல் தரையில் படுக்க சொல்ல வேண்டும். தரையில் பேப்பரை போட்டு அதன் மேலே தாயை படுக்க சொல்ல வேண்டும்.
அம்மாவை ஓய்வெடுத்து படுக்க வைக்கவும். அவளுக்கு உறுதியளிக்கவும், ஆனால் ஒவ்வொரு சுருக்கத்திலும் தள்ளுவதை நிறுத்த முயற்சிக்கச் வைக்கவும்.
பிறப்பு கால்வாயில் குழந்தையின் முன்னேற்றத்தை மெதுவாக்க ஒவ்வொரு சுருங்குதலிலும் தாயை கடுமையாக மூச்சை இழுக்கச் சொல்ல வேண்டும். குழந்தையை அவளது ஆழமான நரம்புகளிலிருந்து நகர்த்தவும், அவளது இதயத்திற்கு இரத்தம் திரும்புவதற்கு உதவ வேண்டும்.நேரத்தை கடத்தாமல் ஆம்புலன்சிற்கு போன் செய்து உங்களின் இடத்திற்கு வர சொல்ல வேண்டும்.
பிரசவ வலி, சூட்டு வலி இவை இரண்டிற்கும் உள்ள வித்தியாசங்கள்..!
இதுபோன்று பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | First aid in Tamil |