பூரான் கடித்தால் உடனே செய்ய வேண்டிய முதலுதவி பற்றி தெரிந்துக்கொள்வோம்..!

Advertisement

பூரான் கடித்தால் என்ன செய்வது | Pooran Kadi Treatment in Tamil

நாம் நிறைய முதலுதவிகள் பற்றி பள்ளி மற்றும் கல்லூரியில் படித்து இருப்போம். காலப்போக்கில் அவை அனைத்தும் சிலருக்கு மறந்து இருக்கும். அதனால் இன்று பூரான் கடிக்கு செய்ய வேண்டிய முதலுதவி பற்றி தெரிந்துக்கொள்ள போகிறோம். முதலில் நமக்கு நமக்கு பூரான் தான் கடித்ததா இல்லை வேறு ஏதாவது கடித்ததா என்று தெரிந்துகொள்வதே பெரிய குழப்பமாக இருக்கும். ஒரு வேளையாக பூரான் கடியை உறுதி செய்தவுடன் பெரும்பாலான மக்கள் பூரான் கடித்த இடத்தில் வெங்காயம் அல்லது சுண்ணாம்பு போன்றவற்றை வைப்பார்கள். ஆனால் இதுபோன்றவற்றை செய்ய கூடாது. அதுமட்டும் இல்லாமல் இவை அனைத்தும் பூரான் கடிக்கு முறையான முதலுதவியும் கிடையாது. ஆகவே பூரான் கடித்த உடன் செய்ய வேண்டிய முதலுதவி பற்றி தெரிந்துக்கொள்வோம் வாங்க..!

நாய் கடித்தவுடன் செய்ய வேண்டிய முதலுதவி பற்றி தெரிந்து கொள்வோம்.!

First Aid For Pooran Bite | Pooran Bite First Aid in Tamil:

டிப்ஸ்- 1

பூரான் கடிக்கு முதலுதவி

பூரான் கடியை நீங்கள் உறுதி செய்த பிறகு 1 வெற்றிலை எடுத்துக்கொண்டு அதில் 5 மிளகு வைத்து நன்றாக பேஸ்ட் போல அரைத்து அதனை உள்ளக்குள் எடுத்துக்கொள்ள வேண்டும். வெற்றிலையில் விஷத்தன்மையை முறிக்கும் தன்மை இருக்கிறது.

டிப்ஸ்- 2

பூரான் கடித்தால் என்ன செய்வது

அதேபோல பூரான் கடித்த இடத்தில் மஞ்சள்தூளினை வைக்க வேண்டும். இப்படி வைப்பதனால் பூரான் கடித்த விஷம் உடலில் பரவாமல் அதனை தடுக்க செய்யும்.

மஞ்சத்தூளை எதனால் எடுத்துக்கொள்கிறோம் என்றால் அதற்கு இயற்கையாகவே விஷத்தன்மையினை முறிக்கும் பண்பு உள்ளது. அதன் பிறகு நீங்கள் அருகில் உள்ள மருத்துவரை அணுக வேண்டும்.

டிப்ஸ்- 3

பூரான் கடித்தால் என்ன செய்ய வேண்டும்

மூன்றாவதாக பூரான் கடிக்கு செய்ய வேண்டிய முதலுதவி என்னவென்றால் 4 வெற்றிலை மற்றும் 3 மிளகு எடுத்துக்கொண்டு அதனை நன்றாக பேஸ்ட் போல அரைத்து பூரான் கடித்த இடத்தில் தடவ வேண்டும்.  

டிப்ஸ்- 4

pooran kadi first aid in tamil

குப்பைமேனி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகளவு கொண்டுள்ளது. அதனால் 1 கைப்பிடி குப்பைமேனி இலை மற்றும் மஞ்சள் சிறிதளவு எடுத்துக்கொண்டு இரண்டையும் ஒன்றாக சேர்த்து பேஸ்ட் போல அரைத்து பூரான் கடித்த இடத்தில் தடவ வேண்டும்.

டிப்ஸ்- 5

pooran kadi tamil

5 வேப்பிலை எடுத்துக்கொண்டு அதனுடன் கஸ்தூரி மஞ்சள் சிறிதளவு சேர்த்து நன்றாக பேஸ்ட் போல அரைத்து அதனை நாம் பூரான் கடித்த உடன் சாப்பிட வேண்டும்.

குறிப்பு:பூரான் கடித்தவுடன் மேலே சொல்லப்பட்டுள்ள முதலுதவிகளில் ஏதாவது ஒன்றை செய்தாலும் கூட உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று அதற்கான சிகிச்சையினை பெற வேண்டும்.

ஏனென்றால் பூரான் கடி என்று நீங்கள் அலட்சியப்படுத்தினால் கூட அது உடலில் பெரிய அளவு ஆபத்தை ஏற்படுத்தும் வாய்ப்பும் இருக்கிறது.

தேள் கடித்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா..?

 

இதுபோன்று  பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> First aid in Tamil 
Advertisement