வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

நட்டுவாக்காலி கடித்தால் என்ன முதலுதவி செய்வது

Updated On: April 16, 2025 1:18 PM
Follow Us:
nattuvakali kadithal enna seivathu
---Advertisement---
Advertisement

நட்டுவாக்காலி கடித்தால் என்ன செய்வது

கிராமம் ஆக இருந்தாலும் சரி, டவுனாக இருந்தாலும் பூச்சி வீட்டிற்குள் வருவது என்பது இயற்கையான ஒன்றாக இருக்கிறது. சின்ன சின்ன பூச்சி வந்தால் ஒன்றும் பிரச்சனையில்லை. அதுவே பெரிய பூச்சிகள் அதாவது விஷமுள்ள பூச்சிகள் வந்தால் நம்மை கடித்து விடும். விஷமுள்ள பூச்சிகள் கடித்தால் நமக்கு வலி மற்றும் விஷம் உடலுக்குள் சென்று விடும். இதனை உடனடியாக பார்ப்பது அவசியமானது. அப்படி பூச்சி கடித்தால் மருத்துவமனைக்கு செல்வதற்கு முன் நாம் செய்ய வேண்டிய முதலுதவியை பற்றி அறிந்து கொள்வது அவசியமானது. அந்த வகையில் உங்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் நட்டுவக்காலி கடித்தால் என்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கோலம் வாங்க..

நட்டுவக்காளி கடித்தால் என்ன முதலுதவி:

நட்டுவாக்காலி கடித்தால் என்ன செய்வது

நட்டுவாக்காலி என்பது வயலில் வேலை பார்ப்பவர்களுக்கு அல்லது இரவு நேரத்தில் கடிக்க கூடிய வாய்ப்பு இருக்கிறது.

இந்த நட்டுவாக்காலி என்பது சிவப்பு நிறம் மற்றும் கருப்பு நிறத்தில் காணப்படும். இந்த இரண்டு வகையான நட்டுவாக்காலி கடித்தாலும் விஷம் தான்.

முதலில் நட்டுவாக்காலி கடித்த இடத்தை சுத்தமாக கழுவ வேண்டும். அதன் பிறகு ஒரு துணியில் ஐஸ்கட்டி வைத்து கட்ட வேண்டும். இதனை 10 நிமிடம் நட்டுவாக்காலி கடித்த இடத்தில் வைத்து வைத்து எடுக்க வேண்டும். இதன் மூலம் வலியாய் குறைக்க செய்யும்.

எந்த விதமான நட்டுவாக்காலி கடித்தாலும் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியியமானது.

தேள் கடித்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா

மூலிகை மருந்து:

கொளுஞ்சி இலை, துவர்ப்பு தன்மை உடையதாக இருக்கிறது,. இந்த இலை ஆனது விஷமானது இரத்தத்தில் சேராமல் இருப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. மிளகு எந்த விஷத்தையும் முறிக்கும் தன்மை உடையதாகக் இருக்கிறது, தேங்காய் குளிர்ச்சி தன்மை, மற்றும் எண்ணெய் பசை நிறைந்தது.  அடுத்ததாக வெற்றிலை எடுத்து கொள்ள வேண்டும்.  மிளகு 9, வெற்றிலை 3, கொளுஞ்சி இலை ஒரு கைப்பிடி, எடுத்து கொள்ள வேண்டும்.

வெற்றிலை மற்றும் கொளுஞ்சி இலை இரண்டையும் நசுக்கி சாறாக எடுத்து கொள்ள வேண்டும். இதனுடன் மிளகை நுணுக்கி போட வேண்டும்.தேங்காயும் இதனுடன் அரைத்து போட வேண்டும். இதனை நட்டுவக்காலி கடித்து விட்டால் இதனை சாப்பிடுவதன் மூலம் விஷமானது முறிந்து விடும்.

செய்ய கூடாதது:

மேலு நட்டுவாக்காலி கடித்த இடத்தில் எந்த விதமான துணியையும் கட்ட வேண்டாம். இதனை கட்டினால் விஷமானது அந்த இடத்தில் மட்டும் தான் இருக்கும். வேறு இடத்திற்கு போகாது என்று கூறுவார்கள். ஆனால் இது தவறானது இந்த முறையை செய்யாதீர்கள். ஏனென்றால் நீங்கள் அந்த இடத்தில் மட்டும் துணியை காட்டுவதால் இரத்த ஓட்டம் செல்லாமல் இருக்கும். அதே நேரத்தில் நீங்கள் கட்டை பிரிக்கும் போது விஷமானது ரொம்ப வேகமாக உடலிற்குள் செல்ல கூடிய வாய்ப்புள்ளது.

இதுபோன்று முதலுதவி பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> First aid 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now