Silanthi Kadi Maruthuvam in Tamil | Spider Bite First Aid Treatment in Tamil
தூக்கம் என்பது அனைவருக்கும் முக்கியமான ஒன்று. நாம் தூங்கும் போது நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்று கூட தெரியாது. அந்த அளவிற்கு ஆளுந்த தூக்கத்தில் இருப்போம்..! ஆனால் இப்போது கொசு கடித்தால் கூட எழுந்துவிடுவோம் அந்தளவிற்கு கொசுக்கள் அனைத்தும் நிறைய சத்துக்களுடன் இருக்கிறது. அது கடிப்பது டாக்டர் ஊசி போடுவது போல் வலிக்கிறது அந்த அளவிற்கு வலிமையாக உள்ளது.
அதேபோல் நம்மை சில பூச்சிகள் கடித்தால் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டோம் ஆனால் அது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதில் ஒன்று தான் எட்டுக்கால் பூச்சி கடி இது கடித்தால் பெரியதாக பிரச்சனையை ஏற்படுத்தும்.
Spider Bite First Aid Treatment in Tamil:
சிலந்தி கடி அறிகுறிகள்:
அனைத்து பூச்சிக்கடியை போல் இருக்கும். அதேபோல் எட்டுக்கால் பூச்சி கடித்தால் அந்த இடத்தை சுற்றி வீங்கிக்கொள்ளவும். அதன் பின் அதனை சுற்றி அரிப்பு, சிவந்த தடிப்பு போன்ற பிரச்சனைகள் ஆரம்பிக்கும், அதை வைத்து எட்டுக்கால் பூச்சி கடி என்று சொல்ல முடியும்.
அந்த சிவந்த தடிப்பு அனைத்து இடத்திலும் பரவ ஆரம்பிக்கும். ஆனால் கடித்த இடத்தில் மட்டும் அரிப்பு அதிகமாக இருக்கும்.
அதனை விட முக்கியமாக கடித்த இடத்தை சுற்றி, சுருக்கு சுருக்கென்று வலிக்க ஆரம்பிக்கும் தசையில் பிடிப்பு ஏற்படும்.
எட்டுகால் பூச்சி விஷம் உள்ளதாக இருந்தால் உடனே மருத்துவரை அணுகி அது பெரியளவில் பாதிக்காமல் தடுக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் வீட்டிலேயே முதலுதவி செய்யுங்கள்
நாய் கடித்தவுடன் உடனே செய்யவேண்டிய முதலுதவி
Spider Bite First Aid Treatment in Tamil:
டிப்ஸ்: 1
முதலில் கடிபட்ட இடத்தை சுற்றி தண்ணீர் ஊற்றி கழுவ வேண்டும், அதுவும் சோப்பு போட்டு கழுவி சுத்தப்படுத்திகொள்ளளவும். கடிபட்ட இடத்தின் மீது ஆன்டிபயாடிக் க்ரீம் அப்ளை செய்யவும்.
டிப்ஸ்: 2
பின்பு அதை கழுவிய பின் குளிர்ந்த நீரில் துணியை நனைத்து கடிக்கப்பட்ட இடத்தின் மீது வையுங்கள்.
டிப்ஸ்: 3
அதனை விட மிகவும் சிறந்தது என்றால் ஐஸ் கட்டி தான். ஐஸ் கட்டியை கொண்டு ஒத்தடம் கொடுக்கலாம். இது வீக்கம் வருவதை தடுக்க முடியும். அதேபோல் இதனை 10 முறை அப்படியே ஒத்தடம் கொடுக்க வேண்டும்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 தேனீ கொட்டினால் இந்த முதலுதவியை செய்யுங்கள்..!
டிப்ஸ்: 4
கரித்தூள்களுக்கு விச தன்மையை வெளியேற்றும் சக்தி உள்ளது. ஆகவே அந்த பேஸ்டை அப்படியே அப்ளை செய்யவும்.
டிப்ஸ்: 5
வீட்டில் உருளைக்கிழங்கு இருக்கும் அதில் விஷத்தை வெளியேறும் சக்தி உள்ளது. ஆகவே அதை துருவி அதனை துணியில் கட்டி அதில் இருக்கும் சாறு வெளியில் வரும் அளவிற்கு கையில் கட்டிவிடவும்.
டிப்ஸ்: 6
பேங்கிங் சோடா பூச்சி கடிக்கு நல்ல மருந்தாக இருக்கும். ஆகவே அதனை தண்ணீர் காலத்து குழப்பி கடிபட்ட இடத்தில் தடவினால் நல்ல மருந்தாக இருக்கும்.
இதை அனைத்தையும் செய்து விட்டால் எட்டுக்கால் பூச்சி கடியினால் ஏற்பட்ட பிரச்சனையில் இருந்து விடுபட முடியும். அத பின் மருத்துவரை அணுகி அதற்க்கான சிகிச்சை முறையை மேற்கொள்ளவும்.
எப்போது மருத்துவரை அணுக வேண்டும்:
எட்டுக்கால் பூச்சி கடித்த பிறகு உங்களுக்கு கடுமையான வலி மற்றும் மூச்சு விடுவதில் ஏதேனும் சிரமம் இருந்தால் அலட்சியம் செய்யாமல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியமானது. இது இல்லாமல் உங்களுக்கு சிவந்த நிறத்தில் தோல் இருந்தாலோ அவற்றில் அரிப்பு அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
வலிப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்..! |
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |