தேள் கடித்தால் என்ன செய்வது
வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் தேள் கடித்து விட்டால் உடனே என்ன செய்வது என்று பார்க்க போகிறோம். இந்த பூச்சி கடித்தாலும் முதலில் அது என்ன பூச்சி என்பதை பார்த்து விடுவது நல்லது. ஏனென்றால் அப்போது தான் மருந்து கொடுப்பதற்கு உதவியாக இருக்கும். அந்த மாதிரி பூச்சி கடைகளில் ஒன்று தான் தேள் கடியும். தேள் கடித்து விட்டால் என்ன செய்வது சென்று யாருக்கும் புரியாது. தேள் கடித்த இடத்தில் பயங்கரமாக கடுக்கும். அந்த சமயத்தில் உடனே என்ன செய்தால் தேள் கடி வலி நிற்கும் என்பதை இன்றைய பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படியுங்கள்⇒ பாம்பு கடித்தால் முதலுதவி என்ன செய்ய வேண்டும் தெரியுமா.?
தேள் கடி முதலுதவி:
முந்தைய காலகட்டத்தில் தேள் கடிக்கு வீட்டிலேயே செய்ய கூடிய முதலுதவிகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
டிப்ஸ்- 1
உங்களுக்கு எதாவது பூச்சி கடித்து இருந்தால் தேளாக இருக்குமோ என்ற சந்தேகம் வரும். அப்போது நீங்கள் தேள் கடிய உறுதி செய்வதற்கு தேள் கடித்துள்ள இடத்தில் திருநீறு பூசினால் அந்த இடத்தில் வியர்வை சுரக்க ஆரம்பிக்கும். அப்படி இருந்தால் அது தேள் கடி.
டிப்ஸ்- 2
தேள் கடித்தால் முதலில் வெங்காயத்தை எடுத்துக்கொண்டு அதனை இரண்டாக நறுக்கி தேள் கடித்துள்ள இடத்தில் நன்றாக அழுத்தி தேய்த்து விடுங்கல். இப்படி செய்தால் தேள் கடி வலி குறைய ஆரம்பிக்கும்.
டிப்ஸ்- 3
அடுத்ததாக எலுமிச்சை பழத்தின் விதையுடன் உப்பு சேர்த்து கலந்து குடித்தால் தேள் கடி விஷம் விரைவில் குறையும்.
டிப்ஸ்- 4
எலுமிச்சை பல சாறுடன் உப்பு சேர்த்து கலந்து குடித்தால் விரைவில் தேள் கடி குணமாகும்.
டிப்ஸ்- 5
வீட்டில் சமையலுக்கு பயன்படுத்து புளியில் உள்ள கொட்டையை நன்றாக தரையில் தேய்த்து தேள் கடித்த இடத்தில் வைக்க வேண்டும். தேள் கடி விஷம் இறங்கிய பிறகு அந்த புளிய கொட்டை கீழே விழுந்து விடும்.
டிப்ஸ்- 6
தேள் கடி விஷம் குறைய நாட்டு வெல்லம், சுண்ணாம்பு, புகையிலை இந்த மூன்றரையும் ஒரு துணியில் வைத்து தேள் கடித்துள்ள இடத்தில் வைத்து கட்டிவிட வேண்டும். இது மாதிரி செய்தால் வலி குறைவதன் பலன் கொஞ்சம் கொஞ்சமாக தெரிய வரும்.
டிப்ஸ்- 7
வெற்றிலை சாறை தேள் கடித்துள்ள இடத்தில் தாடவி அதன் பிறகு சிறிதளவு வெற்றிலை சாறை குடித்தால் வலி விரைவில் குறையும்.
டிப்ஸ்- 8
ஒரு முழு வெள்ளை பூண்டை எடுத்துக்கொண்டு நன்றாக பேஸ்ட் போல் அரைத்து தேள் கடித்த இடத்தில் வைத்து நன்றாக தேய்த்தால் தேள் கடி விஷம் குறையும்.
டிப்ஸ்- 9
பெருங்காயத்தில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து தேள் கடி உள்ள இடத்தில் தடவினால் வலி குறைய ஆரம்பிக்கும்.
தேள் கடித்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள முதலுதவிகளை செய்தாலும் கூட உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று அதற்கான சிகிச்சை பெற வேண்டும்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |