இந்தியாவின் பறவை மனிதர் யார்? | Indhiyavin Paravai Manithar Yaar

Advertisement

இந்தியாவின் பறவை மனிதர் என்று அழைக்கப்படுபவர் யார் | Indiavin Paravai Manithar Yaar

நண்பர்களுக்கு வணக்கம் இந்த பதிவில் பொது அறிவு சம்பந்தமான கேள்வியை தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். மனிதர்கள் பொதுவாக பொது அறிவு சம்பந்தமான நிறைய கேள்விகளை தெரிந்து வைத்திருப்பது நல்லது. பொது அறிவு விஷயங்கள் எப்போதும் வீணாக போவதில்லை. படிக்கும் மாணவர்கள் முதல் வேலைக்கு செல்பவர்கள், போட்டி தேர்வுக்கு தயாராகும் அனைத்து தேர்வாளர்களுக்கும் இந்த பதிவானது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தொடர்ந்து இந்த பதிவை பார்வையிடுங்கள். உங்களுக்கு பயனுள்ள வகையில் பலவகையான பொது அறிவு (GK in Tamil) சார்ந்த விஷயங்களை பதிவு செய்து வருகின்றோம். நண்பர்களே படித்து பயன் பெறுங்கள்..

இந்தியாவின் முதல் பிரதமர் யார்?

இந்தியாவின் பறவை மனிதர் யார்?

விடை: சலீம் மொய்சுதீன் அப்துல் அலி

சலீம் அலி வரலாறு:

சலீம் அலி மும்பையில் நவம்பர் 12, 1896 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் சிறு வயதிலே பெற்றோரை இழந்து தன் மாமாவிடம் வளர்ந்து வந்தார். ஒரு நாள் இவர் சிறு வயதில் விளையாட்டு துப்பாக்கியால் சிட்டு குருவியை சுட்டுவிட்டார்.

இறந்து விழுந்த குருவியை அவரால் மறக்க முடியாமல் தவித்தார். பிறகு இறந்து போன அக்குருவியின் கழுத்தில் திட்டாக மஞ்சள் நிறக் கறை படிந்திருப்பதைக் பார்த்தார் சலீம் அலி. இதற்கான காரணத்தைத் தன் சித்தப்பாவிடம் கேட்க, அவரோ அப்போது பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தின் கெளரவச் செயலராக இருந்த டபள்யூ.எஸ்.மில்லர்ட் (W S Millard) என்பவரிடம் சலீம் அலியை அறிமுகப்படுத்தினார். மில்லர்டின் உதவியுடன் பறவைகளை எவ்வாறு அறிந்துகொள்வது, எப்படிப் பாதுகாப்பது போன்ற விவரங்களை சலீம் அலி தெரிந்துகொள்ள முடிந்தது.

அப்பொழுதிலிருந்து சலீம் அலிக்கு பறவைகள் மீது அதிக நாட்டம் இருந்தது. பின்பு கல்லூரிப் படிப்பை மேற்கொண்ட போதிலும் பட்டம் பெறவில்லை. கல்லூரியில் படிக்கும் போது, தொழிலில் அண்ணனுக்கு உதவ பர்மா சென்றவரின் மனம் பறவைகளைச் சுற்றியே சிறகடித்துக் கொண்டிருந்தது.

திருமணம்:

சலீம் அலிக்கு 18-வயது இருக்கும் போது, 1918 டிசம்பர் மாதம் சலீம் அலிக்கும் தெஃமினாவுக்கும் திருமணம் ஆனது. சலீம் அலியின் வணிகம் காரணமாக இவர்கள் இருவரும் சிறிது காலம் பர்மாவில் வாழ்ந்தனர். திருமணமாகி குடும்ப வாழ்க்கையை மேற்கொண்ட சலீம் அலி வேலை இல்லாமல் தவித்துக்கொண்டிருந்தார்.

ஆனால் அவரது மனைவி தெஹ்மினா வேலை பார்த்து கொண்டிருந்ததால் பெருமளவுக்கு சிரமம் ஏற்படவில்லை. சலீம் அலி வேலை இல்லாமல் இருந்த நாட்களில் தனது வீட்டுத்தோட்டத்திலிருந்த மரத்தடியில் அமர்ந்து பறவைகளை நோட்டம் விடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.

இந்தியாவின் முதல் பெண் சபாநாயகர் யார்?
பதவியை ராஜினாமா செய்த முதல் இந்திய பிரதமர் யார்?

புகழ்:

தூக்கணாங்குருவியின் வாழ்க்கை முறை பற்றி 1930-ல் ஆய்வுக்கட்டுரை வெளியிட்டு புகழ் பெற்றார். 1932-ல் ‘கேரளப் பறவைகள்’ என்ற நூலை எழுதி வெளியிட்டார். பறவையியல் தொடர்பான பத்திரிகை ஒன்றை நடத்தி வந்தார். நீண்ட காலம் ‘பம்பாய் வரலாற்று சங்கத் தலைவராக பணிபுரிந்த போது பறவையியலுக்காக (Ornithology) பத்திரிகை ஒன்றை நடத்தினார்.

1942 – ஆம் ஆண்டு “இந்தியப் பறவைகள்” (The Book of Indian Birds) என்னும் நூலை எழுதி வெளியிட்டார். 1974 – ஆம் ஆண்டு “இந்தியா மற்றும் பாகிஸ்தான் பறவைகள் பற்றிய கையேடு” (Handbook of Birds of India and Pakistan) என்ற பத்து மாபெருந்தொகுதிகள் இவரது சீரிய முயற்சியால் நூலாக வெளிவந்தது.

வாங்கிய விருதுகள்:

மேலும் இவருக்கு பிரித்தானியப் பறவையியல் கழகத்தின் மூலம் பத்ம பூஷண் விருது 1958-ல் கிடைத்தது. பிரித்தானியப் பறவையியல் கழகத்தின் விருது (1967), ஜோன் சி. பிலிப்ஸ் விருது (World Conservation Union – 1969), பத்ம விபூஷண் (1976), J. Paul Getty Wildlife Conservation Prize of the World Wildlife Fund (1976). Commander of the Netherlands (Order of the Golden Ark) (1986) போன்ற பல விருதுகளையும் வாங்கி சாதனை படைத்துள்ளார்.

இறப்பு:

ஜூன் மாதம் 1987-ஆம் ஆண்டு இந்திய மாமேதை சலீம் மொய்சுதீன் அப்துல் அலி இவ்வுலகை விட்டு பிரிந்தார்.

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement